Featured Home (TOP)

Recent Comments

Monday, December 7, 2015

avathani Media Network

யாழ்.மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தவிர்ப்பு நடவடிக்கை

யாழ்.மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தவிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
வெள்ளத்தில் இருந்து யாழினை முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்கான நீண்டகால திட்டமும் இரு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பல பகுதிகள் நீர் தேங்கி நின்ற காரணத்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலமை இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதற்காக நீர் தேங்கும் பகுதிகளை இனங்கண்டு அப்பகுதிகளில் நீர் தேங்காதவாறு இருப்பதற்கான நிரந்தர தீர்வு திட்டத்தினை தீட்டுவதற்கான கலந்துரையாடலே இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நிவாரணங்கள் தேவையில்லை என்றும், வெள்ளத்தினை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
சுதுமலை, நந்தாவில் பகுதியனைச் சேர்ந்த மக்களும், ரயில் பாதைகளுக்கு அருகில் உள்ள குடும்பங்களும் மேற்படி முறைப்பாட்டினை எமக்குத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில்தான் நிரந்த தீர்வினை காண்பதற்கான நாம் ஒன்று கூடியிருந்தோம்.
குறிப்பாக வீதி அபிவிருத்தி திணைக்களம், சிறு வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலர்கள், பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையினரையும் அழைத்து இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சகல பிரதேச செயலர் பதிரிவுகளின் வெள்ளம் தேங்கு கின்ற பகுதிகள் இனங்காணப்பட்டது. இவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளை சுத்தப்படுத்துவது மற்றும் வடிகால்களை ஆழமாக்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காண்பதற்கு நீண்ட கால திட்டத்தினை 2 கிழமைக்குள் தருமாறும் அனைவரிடத்திலும் கோரப்பட்டுள்ளது. இத் திட்டங்களுக்கான நிதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம் என்றார்

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :