Featured Home (TOP)

Recent Comments

Friday, December 4, 2015

avathani Media Network

போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு...

(ஜுனைட்.எம்.பஹ்த்)
கல்வி உரிமை என்பது அனைவருக்கும் கட்டாயமான ஓர் உரிமையாகும். இந்த
கல்வியறிவானது சிறந்த முறையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனைக் கொண்டு அவர்கள் தமது சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் சிறந்ததோர் பங்களிப்பினை வழங்கி சமூகத்தினை சிறந்ததோர் சமூகமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் மட் /மம/பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் செயற்பாடுகள் அபிவிருத்தி அடைய வேண்டும் அதன்
மூலம் பாடசாலையின் நடவடிக்கைகளும் மற்றும் கல்விக் கடமைகளையும் சிறந்த
முறையில் செவ்வனே செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கிழக்கு
மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் மாகாணசபை நிதி ஒதுக்கிட்டில் இருந்து நேற்று  வியாழக்கிழமை (03.12.2015) தலா 120000.00 ரூபாய் பெறுமதியான போட்டோ கொப்பி மற்றும் பிரின்டர் இயந்திரங்கள் உத்தியோக பூர்வமாக மட் /மம/பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் உரையாற்றியபோது எந்த ஓர் சமூகமும் தலை நிமிர்ந்து
வாழ வேண்டுமாக இருந்தால் அந்த சமூகம் கல்வியில் முன்னேற வேண்டும்.

ஒரு சமூகம் பொருளாதாரத்தில் முன்னேறியிருந்து அந்த சமூகம் தலை சிறந்த சமூகமாக மதிக்கப்பட வேண்டுமாக இருந்தால் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் மக்களை இந்த உலகம் போற்றி
பாராட்டி மதிக்க வேண்டும், அல்லது பலத்தினால் ஒரு நாடு முன்னேறுகின்றது என்றால் இஸ்ரவேல் போன்ற நாடுகளை போற்றி புகழவேண்டும். ஆனால் கல்வியால் மாத்திரம் உயர்ந்து கௌரவம் பொருகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாக
இருக்கின்றது, ஏனென்றால் இலங்கையின் கல்வி மட்டம் எழுத்தறிவு கிட்டத்தட்ட 85
வீதத்திற்கும் மேலானதாக இருக்கின்றது இதற்கு காரணம் இலங்கையில் அரசாங்கம் இலவச கல்வியினை வழங்குதனாலாகும். ஆனால் ஏனைய நாடுகளில் இலவச கல்வி, இலவச பாடநூல்கள், இலவச சீருடைகள் வழங்குவது இல்லை.

பணம் செலுத்தினால்தான் கல்வியினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமை வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வளர்முக நாடுகளிலும் காணப்படுகின்றது. ஆனால் இறைவன் தந்த ஒரு வரப்பிரசாதம் இலங்கையில்
மாணவர்கள் இலவச கல்வியினை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலமை இருக்கின்றது.

பாலமுனை கிராமம் மிகவும் ஓர் பின்தங்கிய மற்றும் ஏழ்மை மிக்க மக்கள் வாழுகின்ற
கிராமமாகும் இதனை கருத்திற்கொண்டு இந்த மக்கள் கல்வியினை கற்காது புறக்கணித்துவிடக் கூடாது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி விஞ்ஞானி மர்ஹூம் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கல்வியினாள் இந்தியாவின் முதன்
அணுஆயுத்தினை கண்டுபிடித்தார், அத்துடன் அவர் ஓர் அறிஞராக, விஞ்ஞானியாக உலகம் பறைசாற்றும் சிறந்ததோர் நபராக திகழ்ந்தார். மிகப்பெரிய விஞ்ஞானி நியூட்டன் போன்ற பல மிகப்பெரும் பெரும் விஞ்ஞானிகள் வறுமையில் இருந்துதான் கல்வியின்
மூலம் முன்னேறினார்கள் எனவே மாணவர்கள் கல்வியினை சிறந்த முறையில் கற்று முன்னேர வேண்டும். மேலும் நடைபெற்று முடிந்த 5ம் ஆண்டு புலைமைபரிசீல்
பரீட்சையில் இப்பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள் அது
இப்பாடசாலையின் முன்னேற்றத்தினை காட்டுகின்றது.

அத்துடன் பல ஆசிரியர்கள்
தூரபிரதேசங்களில் இருந்து வந்து மிகவும் அர்பணிப்புடன் தினமும் இப்பாடசாலையின்
கல்வி வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகின்றமையினை இந்த பெறுபேரறுகளுக்கு சான்றாகும்.

இப் பாடசாலை மேலும் வளர்ச்சி பாதைக்கு செல்வதாயின் இப்
பாடசாலையின் பல பௌதீக தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என வேண்டு கோள்
பாடசாலை அதிபர் அவர்கள் விடுத்திருக்கின்றார்கள். ஆனால் அனைத்து தேவைகளையும்
ஓரே நேரத்தில் நிவர்த்தி செய்ய முடியாது இன்ஷா அல்லாஹ் முடிந்தளவு ஒன்றன் பின்
ஒன்றாக நிவர்த்தி செய்வதற்கு முயற்சிக்கின்றோம்.

கடந்த ஆண்டு மாகாணசபையின் கல்வி நடவடிக்கைக்காக மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதி 1420 மில்லியன் ரூபாயாக இருந்தது. தற்போது நல்லாட்சி
என்கின்ற ஓர் கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டு அந்த அரசாங்கத்தின்
முன்னெடுப்புக்களில் மிகவும் பிரயோசனமாக நல்லதோர் முன்னெடுப்பாக மொத்த
உற்பத்தியில் 5 வீத நிதியினை கல்விக்காக செலவு செய்கின்ற தீர்மானம் சிறந்ததோர்
நடவடிக்கையாகும். அதன் அடிப்படையில் கடந்த நிதியொதிக்கீட்டினை விட 2016ம் ஆண்டிற்கு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதாவது 3900 மில்லியனாக நிதி ஒதுக்கீடு கிழக்கு மாகாணசபைக்கு வழங்கியிருக்கின்றது. அதன் அடிப்படையில் 2016ம் ஆண்டிற்கான நிதியொதிக்கீட்டிலிருந்து அதிகமான பணிகளை செயல்படுத்த
திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் எந்த செயற்பாட்டிற்கு முன்னுரிமை
கொடுக்கப்பட வேண்டுமோ அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் அதன் அடிப்படையில் 2016ம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து முதல் கட்டமாக
இப்பாடசாலையில் கேட்போர் கூடத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்களை வழங்குவதற்கு
நடவடிக்கையினை மேற்கொள்கின்றேன்.

ஆசிரிய அலோசகர் ISA அப்துல் ஜவாத் அவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்மொழிவொன்றினை கூறியிருக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ் இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்வேன்.
நாம் ஏதோ செய்திருக்கின்றோம் என்று மக்களுக்கு கூறுவதற்கு பதிலாக இந்த கல்வி வளர்ச்சியில் நாம்; என்ன பங்களிப்பினை செய்யப்போகின்றோம், மாணவர்களின் கல்வி
நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதனை அறிந்து கொள்வதற்காக வேண்டி இவ்வாறான
நிகழ்வுகளை நாங்கள் மேற்கொள்கின்றோம்.

ஆகவே மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கூடுதலான கவனத்தினை செலுத்த வேண்டிய நிலை
இன்று காணப்படுகின்றது. எனவே நான் அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய அலோசகர் அவர்களிடம்
வினயமாக வேண்டிக் கொள்வது என்னவெனில் மாணவர்கள் அதிகபட்சமாக உயர்தர
பரீட்சையில் தோற்றி பல்கலை கழகம் செல்வதற்கான முயற்சி செய்வதற்கு அல்லது உயர்தர
பரீட்ச்சையில் சித்தியடைந்து பல்கலை கழகம் செல்லாவிடில் அவர்கள் அதன் பின்பு
தனியார் நிறுவனங்களுடாக மேற்படிப்பினை மேற்கொண்டு அதனூடாக வேலை வாய்ப்புக்களை பெறுவதற்காக வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் குறுகிய காலத்திற்குள் அதாவது 06 மாத காலத்திற்குள் ஏதாவது
ஓர் குறுகிய தொழிநுட்ப பாடநெறி ஒன்றினை கற்றுக் கொண்டு மத்திய கிழக்கு
நாடுகளுக்கு வேலைக்காக 2 அல்லது 3 வருடங்கள் சென்றுவருகின்றனர் இவ்வாறான நிலை
இன்று வேகமாக பரவி வருகின்றது. இது இன்று சில தனியார் கல்வி நிறுவனங்களினால்
சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் தகவல்களை பெற்று அவர்களுக்கு இலவச
தொழில் வழிகாட்டல்கள் கருத்தரங்கினை மேற்கொண்டு பல்கலை கழகம் சென்று தொழில்
வாய்ப்பினை மேற்கொள்வதனால் 08 வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்றும் நீங்கள் இவ்வாறு காத்திருக்காமல் எங்கள் நிறுவனத்தில் பல இலட்சங்களை கொடுத்து குறுகிய கால பாடநெறிகளை முடித்துக்கொண்டு குறுகிய காலத்தில் வளைகுடா நாடுகளில் மாதம் ஒனறிற்கு 100,000.00 ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி அம் மாணவர்களை உயர்தர கல்வியினை கற்கவிடாமல் தடுக்கின்றனர், இவ்வாறண மாணவர்கள் உயர்தரம் கற்காமல் வெளிநாடுகளுக்கு சென்று சிறியளவு பணத்தினை சம்பாதித்துக் கொண்டு வந்து சரியான ஓர் தொழிலினை இந் நாட்டில் மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர்.

அத்துடன் சரியான ஓர் கல்வி தகமை இன்மை காரணமாக அரசாங்க தொழிலினை பெற்றுக்கொள்ள முடியாமல் பலர் இன்று தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நான் 2001ம் ஆண்டு பொறியியலாளராக கடமையாற்றி 2006ம் ஆண்டு ஓர் தனியார் கட்டிட நிறுவனம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக கட்டிட வேளைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன்.
குறுகிய கால பாடநெறிகளை முடித்துக்கொண்டு வலைகுடா நாடுகளுக்கு சென்று வந்த பலர் என்னிடம் வேலை ஒன்றினை பெற்றுதாருங்கள் என்று வருகினறர், அது மட்டுமன்றி பொருளாதார நிலமை காரணமாக திருமணம் செய்து 1 அல்லது 2 பிள்ளைகள்
இருக்கின்றார்கள், அல்லது திருமணபந்தம் முறிந்துவிட்டது என்று எத்தனையோ இளைஞர்கள் இன்று 60, 70 வயதில் பெற வேண்டிய அனுபவத்தினை 25 வயதில் பெற்றுக்கொண்டு
வாழ்க்கையினை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் ஓர் துர்பாக்கிய நிலை இன்று
எமது சமூகத்தில் காணப்படுகின்றது.

எதிர் காலத்தில் அரச நிர்வாக சேவையில் ஆண் பிள்ளைகள் இல்லாமல் போகும் ஓர் துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே மதிப்புக்குரிய ஆசிரியர்கள், அதிபர்கள் இம் மாணவர்களை உயர்தரம் வரை கல்வி கற்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் பல்கலை கழகம் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே அவர்களுக்குரிய
வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும், எனவே ஆசிரியர்கள் ஆகிய நீங்கள் இம் மாணவர்களின்
பெறுபேறுகளை பரிசீலித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும், உங்களை போன்ற ஆசிரியர்கள் எங்களை ஊக்கிவித்ததனால்தான் உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலை கழகம் சென்று
இன்று என்னை போன்ற பல பொறியியலாளர்கள் உருவாகி இருக்கின்றோம்.

இன்று கிழக்கு மாகாணத்தில் 300000 இளைஞர் யுவதிகள் வேலையின்றி இருக்கின்றனர்,
இதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு தகுந்த கல்வி தகைமைகள் இன்மையே. இலவசமாக கிடைக்கின்ற கல்வி சேவையை தூக்கிவீசிவிட்டு இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து தமது வாழ்க்கையினை தொலைக்கின்ற அந்த நிலைமையில் இருந்து எமது சமூகம் மாற வேண்டும் அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று தமது உரையில் கூறினார்.  




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :