Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 24, 2015

avathani Media Network

தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் நான்காவது வருடாந்த சர்வதேச ஆய்வரங்கு

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் நான்காவது வருடாந்த சர்வதேச ஆய்வரங்கு நேற்று பல்கலைக் கழக கலை கலாச்சாரப் பிரிவின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம் பெற்ற இவ்வாய்வரங்கில் பிரதம அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்ரீகெற்றிச் (முலைழெவந ளுpநநஉh- Pசழக.ளுசi ர்நவவபைந) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர்.எம்.எம்.எம்.நஜீம், பதிவாளர் எச்.ஏ.சத்தார், கலை கலாச்சாரப் பிரிவின் செயலாளர் கலாநிதி.ஏ.றமீஸ், இணைப்பாளர் கலாநிதி.ஏ.எப்.எம்.அஸ்றப், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளிட்ட கல்வியலாளர்களுடன் தென் கிழக்குப் பல்கலைக் கழக பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நிதியாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
 ' தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாச்சார பீடம் தற்போது நவீன தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு தனது கல்வி நடவடிக்கைகளை, துறைசார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் பொருத்தப்பாட்டை உணர்ந்து மாணவர்கள் கலைப்பிரிவின் வழிகாட்டுதல்கள் மூலம் முன்னேற்றமும், சிறப்புடையலாம்' என கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
இறுதியில்;  அதிதிகள், பிரதம பேச்சாளர்கள் போன்றோருக்கு சிறப்பு மலர், நினைவுச்சின்னங்கள் போன்றன வழங்கி கௌரவிக்கப்பட்டன.









avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :