Featured Home (TOP)

Recent Comments

Monday, December 21, 2015

avathani Media Network

ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும்.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்பிணித்தாய்மாருக்கும், குழந்தைகளுக்கும்  ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும் நேற்று  நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.றகுமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பறூஸா நக்பர்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள கற்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தைகளைப் பராமரிக்கின்ற தாய்மார்களும் அறிவுரைகளை வழங்கினார்.

நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.பறூஸா நக்பர் கருத்துத் தெரிவிக்கையில்:- 
' நாம் கடைகளில் விற்கப்படும் மரக்கறி வகைகளைப் பயன்படுத்துவதை விட நாம் நமது வீட்டுத் தோட்டங்களில் உற்பத்தி செய்து பெறப்படும் மரக்கறி வகைகளும், உணவுகளும் மிகச் சிறப்பானதாகும். இதன் மூலம் நச்சுக் கலவையற்ற தூய்மையான உணவுகளைப் பெறுவதோடு, அதிக செலவில்லாது சிக்கனமான, மனநிறைவான, ஆரோக்கியமான வாழ்கையைத் தெரிவு செய்து கொள்ள முடியும்' எனத் தெரிவித்தார்.

சிரேஷ்ட மருத்துவமாது திருமதி.பேகம் பீவி, மற்றும் பொது மருத்துவ மாதுக்களான எம்.எஸ்.மாஹிறா, ஏ.ஜெமீலா, திருமதி.பஸீஹா றியாஸ் போன்றோர்களினால் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உண்மையான சத்துணவுகள் பலவும் காண்பிக்கப்பட்டதோடு, அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பான விளக்கவுரைகளும் வழங்கப்பட்டன.







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :