Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 8, 2015

Unknown

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில்

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் நடந்துள்ள சூழ்நிலையில் அங்கு புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக பிரிட்டன் வந்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் தலைமையின் கீழ் இருக்கின்ற காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய நிர்வாகத் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக நேற்று சனிக்கிழமை மாலை லண்டன் வந்தடைந்தார்.
Read More
Unknown

விபத்து :கணவனும் மனைவியும் பலி இரு பிள்ளைகள் படுகாயம்

இரத்தினபுரி, பெல்மதுளை, கனேகம பிரதேசத்தில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். 
இவர்களது இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் படு காயமடைந்துள்ள அதேவேளை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரின் கால் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மோதிக்கொண்ட முச்சக்கரவண்டிகளுடன்  மேலும் இரண்டு மேட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதாக காவத்தைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 
Read More
Unknown

பாராளுமன்றத் தேர்தலுக்கான NFGGயின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் உள்ளக வாக்கெடுப்புக்கள் ஆரம்பம்

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் NFGGயின் பங்குபற்றுதல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07.03.2015) காத்தான்குடியில் இடம்பெற்றது.
NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் NFGGயின் காத்தான்குடி பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் NFGGயின் காத்தான்குடி பிரதேச காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
Read More
Unknown

'பெண்களுக்கோர் சிறந்த நாடு'எனும் தொனிப்பொருளில் இவ்வருட மகளீர் தினம்.

'பெண்களுக்கோர் சிறந்த நாடு'என்ற தொனிப் பொருளில் இம்முறை தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இம்முறை கிராமிய பெண்களையும் இத்தேசிய நிகழ்வில் உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கில் நிகழ்வுகளை அநுராதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More
Unknown

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா!


பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர்அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமியபெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின்ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார்ஃபாத்திமா!


வறுமையான குடும்பத்தில் பிறந்தஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும்காலங்களிலேயே ஆர்வ மிகுதியால்விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம்.இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்த பல நல்ல உள்ளங்கள்இவரது படிப்பு செலவை ஏற்றுக் கொண்டன.
Read More
Unknown

ஆகாயமும் கடலும் வைத்திருப்பவள்

(எம்.எல்.எம்.அன்ஸார்)

பூக்கள் எனக்கு தண்ணீர் வார்த்து
குளிப்பாட்டிவிட வேண்டும்.
தலை துவட்டி ஈரம் காய்த்து விடுவதற்கு
நிலவை இறங்கி வரச்சொல்.
நட்சத்திரங்களை ஆய்ந்து கூந்தலில் குத்தி விடு.
பெருமைக்குரியவள் நான்
*
Read More