
நிஸாம் காரியப்பருக்கு ஒரு திறந்த மடல்...
அன்புடன் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு,
ஜெனீவா சென்று முஸ்லிம்கள் தொடர்பாக நீங்கள் அங்கு உரையாற்றியதாக செய்திகளைப் படித்ததன் பிறகு உங்களுக்குச் சொல்ல வேண்டிய சில யதார்த்தங்களை சொல்வதற்காக இதனை எழுதுகின்றேன்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகளை முழுநாடும் மட்டுமல்ல முழுஉலகமுமே அறியும். பொதுபலசேனா போன்ற இனவாத சக்திகளை மஹிந்த அரசாங்கம்தான் உருவாக்கி ஊட்டி வளர்தத்தது என்பதுவும் உலகறிந்த ரகசியமாகும். மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த இது போன்ற கொடுமைகளையும் இன்னும் பல அநியாயங்களையும் சகிக்க முடியாத இலங்கை மக்கள் தாமாக உணர்ந்து, முன்வந்து அந்த நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.


