Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 14, 2015

Unknown

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வு.-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, வாகரை, சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வாகரைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கிராமிய மின்சார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
Read More
Unknown

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (11) சம்மாந்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம் பெற்றது.


பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.எம்.சபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, மகளீர் விவகார, கூட்டுறவு அபிவிரத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஐ.எல்.முகம்மட் லாபீர், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மொத்தம் 1043 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு உரைநிகழ்த்துகையில் “ இன்று நாம் உட்கொள்ளும் உணவுகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை கலந்திருக்கின்றது. மரக்கறி, பழவகைகள் போன்றவற்றில் காணப்படும் புளுக்களால் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நச்சுத் தன்மை காணப்படுகின்றது.

இவ்வாறான நச்சுத் தன்மையால் நாம் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் விடுபட்டு, நச்சுத்தன்மையற்ற நிறையுணவை நாளும் உண்ணவேண்டும். அதன் மூலம் சுகதேகிகளாக வாழவேண்டும் என்பதற்காகவே நமது அரசாங்கம் கற்பிணித் தாய்மாருக்கு இத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது ” எனத் தெரிவித்தார்.







Read More
Unknown

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சுகாதார சேவை நிலைத் திறப்பு விழா. -மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ரூபாய் 50 இலட்சம் செலவில் “வேல்ட் விசன்” அனுசரனையில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார சேவை நிலைய கட்டிடத் திறப்பு விழா இன்று இடம் பெற்றது.

வாகரைப் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஐ.எஸ்.கே.ஏ.பீ.திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
Read More
Unknown

ஜனாதிபதி மைத்ரி விரைவில் குணமடைய வேண்டுமென கிழக்கு ஊடக சங்கம் பிரார்த்தனை

(கிழக்கு ஊடக சங்கம் - ஊடக அறிக்கை)

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மிக விரைவில் பூரணமாகக் குணமடைந்து நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டுமென கிழக்கு ஊடக சங்கம் பிரார்த்தனை அறிக்கையொன்றை இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Read More
Unknown

இணைப்புச் செயலாளராக நியமனம்




(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)


சமுர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ். அமீர் அலியின் இணைப்புச் செயலாளராக, காத்தான்குடி 06ம் குறிச்சியைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். மாஹிர் ஜே.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
Unknown

மட்டு. ஹிழுறியா குர்ஆன் மத்ரஸாவின் புதிய கட்டிடத்திறப்பு விழா நாளை இடம்பெறும்


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ஹிழுறியா குர்ஆன் மத்ரஸா கட்டிடம் நாளை 15ம் திகதி புதன்கிழமை மாலை 03:30 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களினால் அழ்ழாஹ்வின் திருப்பெயர் கொண்டு திறந்து வைக்கப்படும் என அம்மத்ரஸா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Read More
Unknown

இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளில்லாத ஐக்கிய இலங்கை மலர வேண்டி கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி

மனங்கொள்ளாத வெற்று வார்த்தைகளால்; இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியையும் வேண்டி புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதிலும் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை.

அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் பலன் தர வேண்டுமாயின் அதற்காக நமது மனங்கொண்ட செயற்பாடுகள் அவசியமாகும் என கிழக்கு ஊடக சங்கம் விடுத்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோர் மேற்படி சங்கத்தின் சார்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த நாட்டில் தமிழ் - சிங்கள – முஸ்லிம் இன முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கிய சுமார் மூன்று தசாப்த காலமாக ஒவ்வொரு வருடத்திலும் தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பிறப்பு நிகழ்ந்தே வந்துள்ளது. நாட்டிலுள்ள சமய, சமூக, அரசியல் தலைவர்கள் இப்புத்தாண்டுப் பிறப்பின்போது ஒவ்வொரு வருடத்திலும் தமிழ் சிங்கள மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட வேண்டும்,

நாட்டில் வாழும் சகல இன, மத மக்கள் மத்தியிலும் ஐக்கியமும் சமாதானமும் உருவாக வேண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்ப துயரங்களின் வடுக்கள் யாவும் பிறக்கின்ற புதுவருடத்திலிருந்து இல்லாதொழிய வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தித்தவர்களாக தத்தமது வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் இவர்கள், புத்தாண்டுப் பிறப்பு நிகழ்ந்த நாளின் மறுதினத்திலிருந்து இத்தகைய தமது மேலான எதிர்பார்ப்புக்களுக்கு இவர்களே எதிரிடையாக இருந்து செயற்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் இன, மத, பிரதேச வேறுபாட்டுக் குரோதங்கள் மென்மேலும் வளர்ச்சியடைந்தே காணப்படுகின்றன. மிக அபூர்வமாகவே சில சமாதான, ஐக்கிய நிகழ்வுகள் நாட்டில் நடைபெறுவதைக் காண முடிகிறது.

குறிப்பாக, அரசியல்வாதிகள் மத்தியிலிருந்து இந்தக் கறைகள் முற்றாக இல்லாதொழியும் நாள் வரை இத்தகைய பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் செல்மதியற்ற, நாம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காத வெறும் சம்பிரதாய செயற்பாடுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற தமிழ் - சிங்கள – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்புத்தாண்டு மற்றும் பண்டிகைக காலங்களில் தெரிவிக்கின்ற வாழ்த்து அறிக்கைகளில் குறிப்பிடுவதைப்போன்று தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புக்களுடனும், புரிந்துணர்வுடனும், மனிதாபிமானத்துடனும், முழுநாட்டின் நலன் கருதியும் செயற்பட வேண்டும்.

அப்போதுதான் இவர்களின் வார்த்தைகளின்படி உண்மையான பலன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும்.

இதற்கு உதாரணமாகவே நாம் இன, மத, பிரதேச வேறுபாடுகளைத் தூக்கியெறிந்து விட்டு, மனிதர்கள் என்ற அடிப்படையிலும், ஊடகம் என்கிற பெரும் குடும்ப வலையமைப்பிற்குள் நின்று பலருக்கும் பல நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்ற பொறுப்புணர்விலுமாக எமது கிழக்கு ஊடக சங்கத்தைத் தொடங்கியுள்ளோம். 


இதில் காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தலைவராகவும், ஆரையம்பதி மற்றும் நாவற்குடா பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் முறையே செயலாளர், பொருளாளர்களாகவும், கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள இன்னொரு முஸ்லிம் சகோதரி உப செயலாளராகவும் கருமமாற்றுவதோடு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 30 தமிழ் - முஸ்லிம் சகோதரர்கள் இதுவரை உறுப்பினர்களாகவும் இணைந்துள்ளனர்.

ஒரு ஊடக சங்கத்தில் இவ்வாறு இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி ஊடகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைப் போன்று, இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி வழி நடாத்துவோரும் தமது செயற்பாடுகளை பிறக்கப் போகின்ற புத்தாண்டில் இருந்தாவது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி முன்னெடுக்கத் திடசங்கற்பம் கொண்டு அவ்வாறே செயற்படவும் வேண்டும் என்பதையே எமது கிழக்கு ஊடக சங்கம் இப்புத்தாண்டுப் பிறப்பில் எதிர்பார்ப்பாகக் கொண்டுள்ளது.

பிரதேச சபைகள் தொடக்கம் நாடாளுமன்றம் வரை இந்த இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற அரசியலாளர்கள் அதிகாரக் கதிரைகளில் இருந்து மக்களின் நலன்களையும், தேசத்தின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு செயற்படத் துணிய வேண்டும். அவ்வாறு செயற்படும் போதிலேயே இவ்வருடப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி என பல்வேறு சமய, சமூக, அரசியல் தலைவர்களும் தெரிவித்திருக்கின்ற உயர்ந்த வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக எது தாய்த்திருநாட்டில் விளைச்சலைக் கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். 

இன்று காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை, புத்தளத்திலிருந்து மட்டக்களப்பு வரை சிங்கள மேலாதிக்கமே அரசியலுட்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் பேசும் சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்தி அதிகாரக் கோலோச்ச விரும்புகின்றது. இந்நிலையில் 'தமிழ் - சிங்கள புதுவருடம்' மாத்திரம் வருடத்திற்கொரு முறை எம்மிடையே வருவதிலும், அது பகட்டுக்குக் கொண்டாடப்படுவதிலும், அதன்போது வார்த்தைகளை நிரப்பிய வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுத்து தங்களின் அரசியல் முகங்களை மக்கள் மத்தியில் வருடத்திற்கொரு முறை திணித்துக் கொள்வதிலும் என்ன அர்த்தம் உள்ளது?

எனவே, இப்புத்தாண்டுப் பிறப்பின் முதல் மாதத்திலேயே எமது நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்திற்கான புதிய அத்திவாரம் ஒன்று இடப்பட்டிருப்பதை தமிழ் சிங்கள மக்கள் தமது கருத்திற்கொண்டு, தத்தமது சமய, சமூக, அரசியல் தலைமைகளிடம் இன, மத, மொழி, பிராந்திய வேற்றுமைளற்ற ஐக்கிய இலங்கையை எமக்காகவும், எமது சந்ததிகளுக்காகவும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்புத்தாண்டுக்கால சமய, கலாசார நிகழ்வுகளினூடாக வலியுறுத்த வேண்டும் என எமது கிழக்கு ஊடக சங்கம் வேண்டுகோள் விடுத்து, மன்மத புத்தாண்டைக் கொண்டாடும் அனைருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.


புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்                                                       வீ. பத்மஸ்ரீ
(தலைவர்)                                                                                            (பொதுச் செயலாளர்) 



Read More
Unknown

தற்போதய நவீன தொழிநுட்பத்தினை பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் .

-எம்.எச்.எம்.அன்வர்-

தற்போதய நவீன தொழிநுட்பத்தினை பிழையான வகையில் இல்லாமல் பயனுள்ளதாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்

நேற்று 2014 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருதும் வழங்கும் நிகழ்வு EDF மற்றும் வாமி நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் பொலந்நறுவை மாவட்டங்களைச் சேர்ந்த 741 மாணவர்கள் இதன்போது சின்னங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் "தொழிநுட்பத்துறை இன்று பாரிய வளர்ச்சி கண்டுள்ள நிலையில் அதில் தீமையும் உள்ளது நன்மையும் உள்ளது மாணவர்கள் பயனுள்ளதை மாத்திரமே தெரிவு செய்து கற்றுக்கொள்ள வேண்டும் பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும்


எனது தந்தை என்னுடன் கல்விகற்றல் குர்ஆன்ஓதல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வார் நாளாந்தம் காலையிலும் மாலையிலும் குர்ஆனை மனனம் செய்து தந்தையிடம் ஓதிக்காட்ட வேண்டும் அதேபோல் ஐவேளையும் ஜமாஅத்தாக தொழாவிட்டால் தண்டனை கிடைக்கும் இவ்வாறுதான் நான் பழக்கப்பட்டேன் " இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார் 

மேற்படி நிகழ்வுக்கு மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம்.சார்ள்ஸ் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு எல் எம் என் முபீன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் இஸ்மாலெவ்வை ஆகியோர் கலந்துகொண்டதுடன் பாடசாலை ரீதியாக 10 க்கு மேற்பட்ட மாணவர்களை சித்திபெறச் செய்த பாடசாலைகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது







Read More
Unknown

மட்டு -மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிருவாகத் தெரிவுக் கூட்டத்தில் - ஓட்டமாவடி பிரதேச சம்மேளன நிருவாகிகள் எவரும் பங்கேற்கவில்லை.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புனரமைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இம் மாவட்ட சம்மேளனம் அமையப்பெறும். கிராம மட்டங்களில் அமைக்கப்படும் இளைஞர் கழகங்களில் இருந்து பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சம்மேளனம் செயற்திறன் மிக்க இளைஞர்களை கொண்டு நிறுவப்பட்டு மாவட்ட சம்மேளன நிருவாக தெரிவிற்காக தலைவர், உபதலைவர், உபசெயலாளர்,பொருளாளர்,அமைப்பாளர்,உப அமைப்பாளர் என்ற அடிப்படையில் பிரதான ஆறு அங்கத்தவர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
Read More