Featured Home (TOP)

Recent Comments

Friday, May 1, 2015

Unknown

சாராய போத்தலுக்கும் சாப்பாட்டு பார்சலுக்கும்

(மதியன்பன்)


கொடிகள் பறக்கிறது
ஆங்காங்கு
கூட்டமும் நிறைந்திருக்கிறது

அணிவகுப்பும்
அர்த்தம் தெரியாத கோசங்களும்
ஊர்வலங்களும்
உணர்வு பூர்வமாய் தெரிகிறது.


மேடைப் பேச்சுக்கள்
கோடை இடியாய்
மின்னல் மழையாய்
முழங்கி பெய்து முடிகிறது.

ஊடகங்களும்
உரைகளை உள்வாங்கிக் கொள்கிறது
தலைவர்களின்
பெஜ்ரோக்களும்
பாத்பைன்டர்களும் பறக்கிறது
பகல் உணவுக்கு...

இரவெல்லாம்
கொடிகளும், தோரணமும்
கூடுகளும் கட்டி
கண்வழித்தவர்கள்

தொழிலுக்குப் போகாமல்
லீவு போட்டு
ஊர்வலம் போனவர்கள்

சாராய போத்தலுக்கும்
சாப்பாட்டு பார்சலுக்கும்
சோரம் போனவர்கள்

இப்படி
அக்கரையில்லாத
அத்தனை பேரும்
வீட்டுக்கு விரைகிறார்கள்

அம்மாவும்
அவர்களை நம்பியிருக்கும்
அத்தனை ஜீவன்களும்
உணவில்லாமல்
உட்காந்திருக்கிறது
இந்த
உழைப்பாளர் தினத்தில்..

அடுத்த மேதினத்திற்கும்
சில அடிமைகள்
சிக்கத்தான் போகிறார்கள்..
இதே ஊர்வலமும் பேச்சுக்களும்
இடமாறியேனும்
நடக்கத்தான் போகிறது.

(01.05.2014)



Read More
Unknown

பிஸ்மி மாணவர்களின் வருடாந்த கல்விச் சுற்றுலா-படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
காத்தான்குடி  பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 28.04.2015 செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது.

இந்த கல்விச் சுற்றுலா காத்தான்குடியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.

இச் சுற்றுலாவில்  பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை மற்றும் பிஸ்மி கின்டர்காடன் மாணவ மாணவிகள் சுமார் நூறு பேர் கலந்துகொண்டதோடு பிஸ்மி கின்டர்காடன் மற்றும் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் உட்பட ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். 
Read More
Unknown

இன்று மாபெரும் கால்பந்தாட்ட பலப்பரீட்சை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில்



(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்கடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்று வந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி 01.05.215 வெள்ளி)  காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளன.

நடைபெற உள்ள போட்டியில் காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் மோத உள்ளன.

நாளை நடைபெற உள்ள இம்மாபெரும் கால்பந்தாட்ட பலப்பரீட்சை டபோட்டியில் எந்தக் கழகம் வெற்றி வாகை சூடப் போகின்றன என்பதனை பொறுத்திருந்த பார்ப்போம். 


Read More
Unknown

முப்பெரும் விழாக்கள் காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் நடைபெற்றது

(ஏ.எல்.டீன் பைரூஸ்)

பதிய காத்தான்குடி மதரசது பாத்திமதுஸ் ஸஹ்றா மற்றும் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை ஆகியவற்றின் முப்பெரும் விழாக்கல் காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் அண்மையில் நடைபெற்றது பிரதம அதிதியாக முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி சம்மேளன தலைவர் எம்.ஜ.எம்.சுபைர்CC/JP, பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்DDE/JP,அல்மனார் அறிவியல் கல்லாரி செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி)BA,மௌலவி ஏ.ஜீ.எம்.அமீன்(பலாஹி) மௌலவி எஸ்எம்.எம்.முஸ்தபா(பலாஹி) அதிபர் எஸ்.எல்ஏ.கபுர்Bcom,பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது
Read More
Unknown

சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது



(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்கு மீரா பாலிகா (தேசிய பாடசாலை) 2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம்இபுலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றில்  சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (28.04.2015 செவ்வாய்) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.சீ.எம்.ஏ சத்தார் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி அவர்கள் கலந்து கொண்டார்.
Read More
Unknown

காத்தான்குடி-06 பாத்திமா பள்ளிவாயல் வீதிக்கான புதிய பெயர் பலகை திறந்து வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காத்தான்குடி-06 அமானுல்லாஹ் முதலாம் குறுக்கு வீதி 30-04-2015 இன்று வியாழக்கிழமை பாத்திமா பள்ளிவாயல் வீதி என்று பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது காத்தான்குடி பாத்திமா பள்ளிவாயல் வீதிக்கான புதிய பெயர் பலகையை காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மேற்படி நிகழ்வில் பாத்திமா பள்ளிவாயல் தலைவர் ஏ.எல்.எம்.இப்றாஹீம்,அதன் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக்,அதன் உப தலைவர் ஏ.எம்.கே.முஹம்மட் (ஏ.எச்.) உட்பட பாத்திமா பள்ளிவாயல் நிருவாகிகள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாத்திமா பள்ளிவாயல் வீதியில் பாத்திமா பள்ளிவாயல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Read More
Unknown

சிலை ஒன்று வைப்போமா!


அண்மையில் திறக்கப்பட்ட காத்தான்குடி பூர்வீக நூதன சாலை இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. காரணம் இந்த நூதனசாலையில் பல சிலைகள் வடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகும். காத்தான்குடி மக்கள் தங்கள் வீடுகளில் கூட சிலைகளை வைத்திருப்பதில்லை. இஸ்லாம் சிலைகளையோ உருவங்களையோ வணங்குவதற்கு எதிரான மார்க்கம். உருவ வழிபாடோ சிலை வழிபாடோ இஸ்லாத்தில் இல்லாததுதான் உலகில் இஸ்லாம் ஏனைய மதங்களில் இருந்து வேறுபட்டு நிற்பதற்கு பிரதான காரணமாகும். எனவே இவ்வாறான வணக்கத்திற்கு எமது நூதன சாலையில் உள்ள சிலைகள் அடிகோலும் என்ற காரணத்தினாலும் இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டித்துள்ளது.
Read More
Unknown

மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில்- மாவட்ட இஜ்திமா மே 3ம் திகதி ஏறாவூர் -அல்-மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட இஜ்திமா இன்ஷா அல்லாஹ்  மே மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.மணி முதல் மாலை 5.30 மணி வரை ஏறாவூர் -அல்-மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

மேற்படி மாவட்ட இஜ்திமாவில் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத் என்போர் யார்? எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் பீ.எம்.ஜாபிர் ஷரயியும் ,தனி மனித வாழ்வில் நல் அமல்கள் ஏற்படுத்தும் தாக்கம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.செட்.எம்.மஸீர் அப்பாஸியும்,இயற்கையை அனுபவித்துக்கொண்டு இறைவனை நோக்கி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.அர்ஹம் இஹ்ஸானியும் ,நவீன மீடியாக்களும் நாமும் எனும் தலைப்பில் ஜனாப் எம்.அஸ்மி ஸாலிஹூம் விஷேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர்.

இதில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுக்கின்றது.


Read More
Unknown

"உதயசிறியின் விடுதலைக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசியமுன்னணி நன்றி தெரிவிக்கின்றது"

( ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

"வரலாற்று சிறப்பு மிக்க சீகிரிய குன்றில் உள்ள புராதன சுவரில் தனது பெயரினை கிறுக்கிய குற்றத்திற்காககைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த உதயசிறி இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது மகிழ்ச்சிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இவருக்கு பொது மன்னிப்பினை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது" என இது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.,
Read More