Featured Home (TOP)

Recent Comments

Sunday, May 3, 2015

Unknown

மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா 2015

மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நடத்திய "மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா 2015"  இன்று (03.05.2015) மிகவும் சிறப்பாக நடை பெற்று முடிந்தது.

ஏறாவூர் அல் மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற இன்றைய மகாநாட்டில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை நடை பெற்ற மகாநாட்டில்

அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்போர் யார் என்ற தலைப்பில் அஷ்செய்ஹ் PM ஜாபிர் (சரபி) அவர்களும், தனிமனித வாழ்வில் நல்லமல்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ற தலைப்பில்  அஷ்செய்ஹ் MZM மஸீர்(அப்பாஸி) அவர்களும், இயற்கையை அனுபவத்துக் கொண்டு இறைவனை நோக்கி என்ற தலைப்பில் அஷ்செய்ஹ் ARM அர்ஹம்(இஹ்லானி) அவர்களும், நவீன் மீடியாக்களும் நாமும் என்ற தலைப்பில் ஜனாப் M அஸ்மி ஸாலிஹ் BA Cey CPA அவர்களும் சிறப்புரைகள் ஆற்றனார்கள்.








Read More
Unknown

உபாதைக்குள்ளான காத்தான்குடி மீடியா போரத் தலைவர் டீன் பைரூஸ் தற்போது தேறிவருகிறார்.

(அவதானி)

கடந்த 02.05.2015 அன்று உதைபந்தாட்ட பயிற்சிப் போட்டியொன்றில் மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளான  காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான அல்ஹாஜ் டீன் பைரூஸ் அவர்கள் தற்போது தேறிவருகிறார்.

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் விளையாடும் போது மைதானத்தில் விழுந்து காயங்களுக்குள்ளான இவர் உடனடியாக காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஏனைய வீரா்களால் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Read More