Featured Home (TOP)

Recent Comments

Thursday, May 7, 2015

Unknown

டிப்ளோமாதாரர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள்! (படங்கள் இணைப்பு)

கொழும்பு கல்வி அமைச்சில் கல்வியியல் கல்லுரிகளில் கல்வி பயின்று வெளியேறும் டிப்ளோமாதாரர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன.இதில் 2910 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.சிங்கள மொழி மூலம் 1719 பேருக்கும் தமிழ் மொழி மூலம் 1191 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.இதன்போது நியமனங்களை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் வழங்கிவைப்பதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
























Read More
Unknown

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்பு ! (படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தினூடாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2000 ரூபா பெறுமதியான போசணை பொருட்கள் வழங்கும் இரண்டாவது முறையான திட்டத்தில் 06.05.2015 அன்று பொகவந்தலாவ கொட்டியாகலை, கெகர்ஸ்வோல்ட், கெம்பியன் ஆகிய பகுதிக்கு வழங்கவிருந்த போசணை பொதியில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த நெத்திலி மற்றும் பச்சை அரிசி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வழங்கவிருந்த பொதிகளை சுகாதார பரிசோதகர்கள் சென்று பரிசோதனை செய்யும் போது இவ்வாறு அரிசியும், நெத்திலியும் பாவிக்க முடியாத பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
Read More
Unknown

ரணிலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நுகேகொட நீதவான் சஹான் மாப்பா பண்டார நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு எடுத்த தீர்மானம், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பிற்கு முரணானது என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சித்ரா ஸ்ரீமனி மனதிலக்க மற்றும் மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கிங்ஸ்லி லால் பிரநாந்து ஆகியோரால் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்த போதே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Read More
Unknown

ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மாநாடு நாளை (08.05.2015) நடைபெறும்



புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பொதுச் செயலாளர் - காத்தான்குடி மண்டலம்)


'ஃபீல்ட மார்ஷல்' சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு மாநாடு நாளை 08.05.2015 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூ.சங்க மாநாட்டு மண்டபத்தில் மாலை 06:30 மணிக்கு மண்டல மத்திய குழுத் தலைவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சகோதரர் ஏ.எம்.ஏ. மிப்ஷி அவர்களின் தலைமையில் இம்மாநாடு நடைபெறும்.
Read More
Unknown

மூத்த எழுத்­தா­ளர்­களை கெள­ர­விக்கும் விருது விழா 2015

கொடகே நிறு­வ­னமும் இலங்கை வானொ­லியும் இணைந்து மூத்த எழுத்­தா­ளர்­களை கெள­ர­விக்கும் முக­மாக நடை­பெறும் விருது வழங்கும் விழா எதிர்­வரும் 9 ஆம் திகதி பிற்­பகல் 3 மணிக்கு இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பனம், ஆனந்த சம­ரக்கோன் உள்­ளக அரங்கில் நடை­பெறும்.

வாழ்த்­துக்­களை போரா­சி­ரியர் தயா அம­ர­சே­க­ரவும், டாக்டர் தி. ஞான­சே­க­ரனும் வழங்­குவர்.
விருது பெறும் 15 மூத்த எழுத்­தா­ளர்­களுள் மணிப்­பு­லவர் மருதூர் ஏ. மஜீத், திரு­மதி அன்­ன­லெட்­சுமி இரா­ஜ­துரை ஆகி­யோரும் அடங்­குவர். ஏனயோர் சிங்கள எழுத்தாளர்களாவர்.

மே 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை மு. ப. 10 மணி முதல் இரவு 10 மணி வரை புத்தக கண்காட்சியும் நடைபெறுகின்றது.

 (TTN - எமது செய்தியாளர்)
Read More
Unknown

E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்!

ஊழியர் சேமலாப நிதிய உறுப்பி னர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு நேற்று முதல் அமு லானது.

தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி தொழில் செயலகத்தில் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இதற்காக புதிதாக கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தமது நிலுவையை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளலாம்.
Read More
Unknown

இணக்கமின்றி முடிவடைந்த மைத்திரி–மஹிந்த சந்திப்பு

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­ல் நேற்று நடைபெற்ற விஷேட சந்­திப்பு இணக்­கப்­பா­டின்றி முடி­வுக்கு வந்­தது. இந் நிலையில் இரு­வரும் மீண்டும் பிறி­தொரு நாளில் சந்­தித்து பேச தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை கள­மி­றக்க வேண் டும் என்ற பிர­தான கோரிக்கை உள்­ளிட்ட ஐந்து விட­யங்­களை முன்­வைத்து இந்த சந்­திப்­பா­னது நேற்று பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.
பிற்­பகல் 1.30 மணிக்கு ஒழுங்குசெய்­யப்­பட்­டி­ருந்த இந்த சந்­திப்­புக்­காக ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன பிற்­பகல் 12.45 மணிக்கு பாரா­ளு­மன்ற வளா­கத்­துக்கு வருகை தந்தார். முன்னாள்
ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிற்­பகல் 1.45 மணிக்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தந்தார்.
Read More
Unknown

"தேர்தல்முறை திருத்த விடயத்தில் காட்டப்படும் அவசரத்தின் பின்னால் கபடத்தனமான இனவாத நோக்கமும் இருக்கின்றது": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்



(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)



'மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்களுக்காகவே தேர்தல் திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதனைச் செய்வதற்கு சில தரப்பினர் காட்டும் அவசரத்தைப் பார்க்கும்போது அதன் பின்னால் சிறு பான்மை மக்களுக்கு எதிரான கபடத்தனமான இனவாத நோக்கங்களும் இருப்பதாகவே தெரிகின்றது' என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 3 ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மூதூரில் நடாத்திய நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.
Read More