Featured Home (TOP)

Recent Comments

Friday, May 15, 2015

Unknown

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 27ஆம் திக­தி­ய­ளவில் கலைக்­கப்­படும்

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­­ளவில் கலைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து 27 ஆம் திக­தி­­ளவில் கலைக்­கப்­­டலாம் என்று அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. 
தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்­­மூலம் எதிர்­வரும் 20 ஆம் திகதி அமைச்­­ரவை உப குழு­வினால் அமைச்­­­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் அது வர்த்­­மா­னியில் அறி­வித்து விட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்.
Read More
Unknown

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கிங்கினார்

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் இன்று (15) காலை அனுமதி வழங்கியுள்ளார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று (15) காலை 9.10 அளவில் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி அளித்து கையொப்பமிட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அடங்கலாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
- newsfirst
Read More
Unknown

234 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

234 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் இந்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும், அவற்றின் காலம் இன்றைய தினம் வரை ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டதாக அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.
Read More
Unknown

வில்பத்து விவகாரம் உபகுழு நியமியுங்கள்

வில்­பத்து சர­ணா­லயம் தொடர்பாக அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்றை அமைத்து விசா­ர­ணை­களை முன்னெடுக்குமாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ள தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யூதீன் தெரி­வித்தார்.
வில்­பத்து சர­ணா­லாய விடயம் தொடர்பில் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் எவ்­வா­றான விடங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன என கேள்­வி­யெ­ழுப்­பிய போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வில்­பத்து சர­ணா­லயத்தில் எநத்­வொரு முஸ்­லிம்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­க­கு­டி­யேற்­றப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்குச் சொந்­த­மான உறு­தி­கள் வழங்­கப்­பட்ட காணி­க­ளி­லேயே குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். 1990ஆம் ஆண்டு அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு புத்­தளம் பகு­தியில் தங்­கி­யி­ருந்­த­வர்­களே இவ்­வாறு குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
இவ்­வா­றான நிலையில் தற்­போது பல்­வேறு முரண்­பட்ட கருத்­துக்கள் வெளிப்ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவை அனைத்தும் உண்­மைக்கு புறம்­பா­னவை.இவ் விட­யங்­களை அமைச்­ச­ர­வையில் நான் தெளிவு படுத்­தினேன். அத்­துடன் அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்றை அமைத்து இவ்­வி­டயம் தொடர்­பாக உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரினேன். அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் எதிர்­காலச் செயற்­பா­டுகள் தொடர்­பாக உரிய முறையில் ஆராய்ந்து அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­கு­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்ளேன்.
மேலும் வில்­பத்து சர­ணா­ல­யத்தில் சட்­ட­வி­ரே­த­மாக மரங்­களை அழித்­த­தாக என்­மீது குற்றம் சாட்­டு­வது தவ­றா­ன­தொன்­றாகும். வன­பா­து­காப்புச் சட்­டங்­க­ளுக்கு அமை­வாக பாரிய மரங்­களை அனு­ம­தி­யின்றி வெட்­டு­வது குற்றமாகும். ஆகவே அனுமதி பெறப்பாடாது மரங்கள் வெட்டப்பட்டிருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். எமது நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்றார்.
Virakesary

Read More
Unknown

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி சபீனாவை நியமிக்கவும்! ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்மானம்!!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தராக கலாநிதி சபீனா இம்தியாசை நியமிக்குமாறு கோரி ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்;மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இன்று (14.05.2015) வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய குழுவின் அவசரக்கூட்டத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, தமது கட்சியின் தலைவர் 'ஃபீல்ட் மார்ஷல்' சரத் பொன்சேகா அவர்களின் கவனத்தை இவ்விடயத்தில் ஈர்க்கும் பொருட்டு மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போது பதவியிலுள்ள உபவேந்தரின் இரண்டாவது பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் மாதத்துடன் முடிவடைவதால் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்யும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றபோது, பல்கலைக்கழகத்தின் கவுன்ஸில் மூவரைத் தெரிவு செய்து பல்கலைக்கழக மான்ய ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது. 

அவர்களில் ஒருவர் கலாநிதி சபீனா இம்தியாஸ் என்பவராகும். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 வருடங்களாக விஞ்ஞானபீடத்தின் தலைவியாக இருந்து வருகின்ற, சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராகும். இதுவரையில் எத்தகைய ஊழல் மோசடிகளிலும் சம்பந்தப்படாதவராக இருந்து வருவதுடன், இப்பல்கலைக்கழகத்தின் புவிசார் நிலைமைகளிலும் ஏனைய விடயங்களிலும் அனுபவத் தேர்ச்சியும் கொண்டவராகும். அரசியல்கட்சிகளின் செயற்பாடுகளில் ஆர்வங்காட்டாத, கல்முனைப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களாக நியமிக்கப்படுவோரில் அதிகமானோர் விஞ்ஞான பீடத்தின் தலைவர்களாக இருந்தவர்களாக இருந்துள்ள போதிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளின் சிபார்சுக்கமையவே தகுதி இல்லாதவர்களும்கூட உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள கசப்பான அனுபவங்களாகும். எனவே, நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்திலாவது இந்த நிலை மாற வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது இப்பல்கலைக்கழக செனட் சபையினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மூவரில் கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்கள் மாத்திரமே உப வேந்தர் பதவிக்கு சகல தகுதிகளும் கொண்டவராகும். மேலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான முஸ்லிம் யுவதிகளும் தமது துறைசார் பட்டப்படிப்பை இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருவதனால், பெண்ணொருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவதன் மூலம் இப்பல்கலைக்கழகத்தின் ஒழுக்க விழுமியங்களில் பாரிய மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வழிகோலுவதாகவும் அமையும்.

ஏனைய தெரிவாளர்கள் இருவரும் ஒவ்வொரு வகையில் உரிய தகுதிகள் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் டீனாகவோ அல்லது தலைமைப் பொறுப்புக்களையோ வகிக்காத வெளியூர்வாசி. அவர் உபவேந்தராக நியமிக்கப்பட்டால் அடிக்கடி விடுமுறை பெற்று அவரது சொந்த ஊருக்குச் சென்று வர நேரிடும் எனவும், இதனால் உபவேந்தர் இல்லாத நிர்வாகமே நடக்கும் என்றும் கருதப்படுவதுடன், வெளியூரைச் சேர்ந்தவர்கள் உபவேந்தராக நியமிக்கப்படுவதால் வாரத்தில் 2-3 தினங்களை உபவேந்தர் விடுமுறையிலே கழித்து விடுவார் என்றும், அதனால் வளாகத்தின் நிர்வாகமும், மாணவர்களின் கல்வியும் பின்னடைந்து பாழடைந்து விடக்கூடிய அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். மற்றவர் கலாநிதிப் பட்டம் பெறாவதவர். அதனால் இவ்விருவரும் கலாநிதி சபீனா இம்தியாஸை விடவும் தகுதி குறைந்தவர்ளாகவே உள்ளார்கள்.

அடுத்த மாதத்துடன் தற்போதைய உபவேந்தரின் இரண்டாவது பதவிக் காலமான 6 வருடங்கள் முடிவடைவதால் கலாநிதி சபீனாவை புதிய உபவேந்தராக நியமிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தங்களை வேண்டுகின்றோம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பொதுச் செயலாளர்)

Read More
Unknown

காத்தான்குடியில் திண்மக்கழிவகற்றல் அங்குரார்ப்பண நிகழ்வு (படங்கள்)

-எம்.எச்.எம்.அன்வர்-

நீண்ட கால பிரச்சினையாக காணப்பட்ட குப்பைப்பிரச்சினைக்கான பெரும்பாலான தீர்வு இன்று கிடைத்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்தார்

காத்தான்குடி அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் இன்று மீள் சுழற்சி முறையில் திண்மக்கழிவகற்றல் உழஅpழளந  pடயவெ திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பபட்டது ரnழிள நிறுவனத்தின் அதிகாரி எஸ் சிவகுமார் அதிதியாக கலந்துகொண்டார்
Read More
Unknown

"வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுவது நிறுத்தப்பட வேண்டும்": NFGG வலியுறுத்துகின்றது

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


"முசலி பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இவ்விடயத்தை இனவாத கண்ணோட்டத்தோடு நோக்குவதைத் தவிர்த்து மனிதபிமான கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்திருக்கின்றது.
மன்னார் முசலி பிரதேச முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பற்றி கடந்த சில நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப் பொன்றினை NFGG இன்று (14.05.2015) காலை கொழும்பில் நடாத்தியது.
Read More