Featured Home (TOP)

Recent Comments

Thursday, June 4, 2015

Unknown

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவது தொடர்பான விபரங்கள் வார இறுதி பத்திரிகைகளில்

ஊடகவியலாளர்களின் நலனுக்காக பல்வேறு விடயங்களை முன்னெடுக்கும் அரசின் திட்டத்திற்கமைய ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
Read More
Unknown

பூசணிக்காய் எம்.பி. யிடம் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் ​

எமது பூசணிக்காய் எம்.பி. வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறி­சே­ன ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து வருகின்றார். எனவே அவரிடமிருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவரான ஜனாதிபதிமைத்திரிபால சிறி­சே­னவுக்கு எதிராக கட்சிக்குள் சூழ்ச்சிகள் தலைதூக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More
Unknown

காத்தான்குடியின் சமகால அரசியல்...! ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் விழிப்பூட்டும் பிரசுரம். அங்கம் 02

தொடா் - கோரிக்கை:01. இந்நூதனசாலை தொடர்பாக ஜம்இய்யதுல் உலமா வழங்கியபத்வாமார்க்கத் தீர்ப்பினை சம்மேளனம் மறுகருத்தின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோரிக்கை:02. இந்நடைமுறைப்படுத்தலென்பது, சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரமுள்ளவர் களுக்கும், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும், அரசியல் ஆலோசனை சபைக்கும் உச்சபட்ச அழுத்தங்களைக் கொடுத்து இந்நூதன சாலையிலுள்ள அனைத்து உருவச்சிலைகளையும் உடனடியாக அகற்றச் செய்ய வேண்டும். அல்லது முஸ்லிம்களின் பூர்வீகத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பதற்கெனஇஸ்லாம்எனும் எமது சன்மார்க்கத்தின் புனிதப் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் இந்நூதனசாலையிலிருந்து எமது மார்க்கத்தின் அடையாளப் பெயரை நீக்குவதுடன் அதனை இவ்வூரிலிருந்து அப்புறப்படுத்தி வேறெங்காவது எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்த வேண்டும்.


கோரிக்கை:03. மேற்கண்டவாறு சம்மேளனம் இதை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் சம்மேளனத்திற்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வழங்கி வரும் பிரதிநிதித்துவமான அதன் பொதுச் செயலாளரை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு சம்மேளனத்தில் இருந்து விலகிக் கொள்வதுடன், ஜம்இய்யாவின் மார்க்க வழிகாட்டலுக்குட்பட்ட சகல பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் என்பனவும் சம்மேளனத்தின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக விலகிக் கொள்ளவும் வேண்டும்.

இக்கடிதத்தை சம்மேளனத்திற்குச் சென்று அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் .எல்.எம். சபீல் (நளீமி) அவர்களிடம் நாம் கையளித்ததுடன், ஜம்இய்யாவின் தபால் பெட்டியினுள் நாம் செலுத்திய கடிதம் ஜம்இய்யா நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை என்ற தகவலறிந்து, மற்றுமொரு கடிதத்தை அதன் செயலாளர் அஷ்ஷெய்க். .ஜீ.எம்.ஜலீல் (மதனி)யிடமும் நாம் நேரில் சென்று கையளித்தோம்.

எமது கடிதத்திற்கான முடிவுகளை சம்மேளனம் மற்றும் ஜம்இய்யாவிடம் இருந்து நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான், முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லா, இந்த உருவச்சிலைகள் தொடர்பாக (கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை) கலாசார மண்டபத்தில் உரையாற்றவிருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
Read More
Unknown

கட்டாரில் "தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள் ஈமான் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்" என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

 (கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்)


الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،،

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  04-06-2015 இன்று வியாழக்கிழமை இரவு 08.45 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

 
கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!!    

ஒவ்வொரு வியாழன் தோறும் மாலை  8:45   முதல் 10:00 வரை நபிகளார் வாழ்க்கை வரலாறுத் தொடர் மற்றும் மிகவும் பிரயோசனமான தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. 
Read More