Featured Home (TOP)

Recent Comments

Thursday, June 11, 2015

Unknown

காத்தான்குடிபிரதான வீதியில் குப்பைகளை கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்


பல வருடங்களாக காத்தான்குடி மக்கள் எதிர் நோக்கி வரும் பாரிய பிரச்சினையாக காணப்படும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரி காத்தான்குடி நகரசபைக்கு முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக வீடுகளில் உள்ள  குப்பைகளை சேகரிப்பதில் நகரசபை அசமந்த போக்கினை கடைபிடித்துவருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நகரசபை கழிவகற்றல் தொழிலாளர்களுக்கும் இடையில்  தகராறுகளும் ஏற்படுகின்றன.

ஏற்கனவே இப்பிரச்சினைக்கு தீர்வுபெற்றுத்தருவதாக கூறி கடந்த நகரசபை நிர்வாகம் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாகவும் ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நிரந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது.




(ஜுனைட்.எம்.பஹ்த் )

Read More
Unknown

உடைந்து விழும் நிலையில் மின் பிறப்பாகியைத் தாங்கி நிற்கும் தூண்கள்...! சீா்செய்து தருமாறு கேட்டு அச்சத்தோடு வாழும் மக்கள்

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்.)

நிந்தவூர் 3ம், பிரிவுக்கு தேவையான மின்சாரங்களை வழங்குவதற்காக வேண்டி மின்சார சபையினால் நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் மின்மாற்றி கருவியானது (transformer) கொங்றீட் தூண்கள் நிறுத்தப்பட்டு சுமார் 7 அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

ஆனால் தற்போது அந்த மின்மாற்று கருவியை தாங்கிக்கொண்டிருக்கும் கொன்றீட் தூண்கள் செயலிழந்து மிகவும் மோசமான நிலையில் உடைந்திருப்பாதனால் மேலே உள்ள மின்மாற்றி கருவியானது எந்த சந்தர்ப்பத்திலும் கீழே விழுவதற்கு சாத்தியங்கள் உண்டென்பதை அறியலாம்.
மேலும் இந்த மின்மாற்றி கருவியை தாங்கிக்கொண்டிருக்கும் கொங்றீட் தூண்கள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்தும் அதனை இதுவரைகாலமும் புணரமைக்கப் படாதமையினாலேயே இது பாதுகாப்பற்ற முறையில் உடைந்து கிடக்கின்றது.

ஆகவே இலங்கை மின்சார சபையே அல்லது அரசியல்  அமைப்புக்களோ இதனை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு நிந்தவூர் வைத்தியசாலைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் மின்மாற்றி கருவியை வைத்தியசாலைக்கு முன் பொருத்தப்பட்டிருப்பது பாதுகாப்பானதல்லயென்பதனையும் கருத்தில்கொண்டு இந்த மின்மாற்றி கருவியை வேறு இடத்திலோ அல்லது இதனை பாதுகாப்பான முறையில் புணரமைக்குமாறு நிந்தவூர் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.







Read More
Unknown

ரமழான் பிறை தீர்மானிக்கும் விஷேட மாநாடு

ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விஷேட மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து முஸ்லிம்களயும் வேண்டிக்கொள்கிறது.

தொலைபேசி இலக்கங்கள் -
0112432110
0115234044
தொலைநகல் -0112390783

(ஜுனைட்.எம்.பஹ்த் )

Read More
Unknown

காத்தான்குடி நகரசபை பிரிவில் குப்பைகளை அகற்றுமாறு கோரி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சேருகின்ற குப்பைகளை அகற்றுமாறு கோரி, காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்  மண்டபத்திற்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பு - கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டமொன்று இன்று (11.06.2015) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ் ஆர்பாட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முதலமைச்சரே எமது குப்பை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வாருங்கள், நகர சபையே உடனடியாக குப்பைகளை அகற்றி நிரந்த தீர்வினை தா?, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரே எமது ஊரில் குப்பைகளை அகற்றி நிரந்தரமாக வாழ விடு, விஷேட ஆணையாளரே குப்பைக்கு உமது தீர்வு என்ன?, நகர சபையே இதுதான் உனது பசுமை நகரமா?, முன்னாள் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் சரீப் சேரே நீதி மன்றத்தில் குப்பை தொடர்பான வழக்கினை வாபஸ் பெறு, அரசாங்க அதிபரே! எமது ஊர் குப்பைகளை கொட்டுவதற்கான காணியை உடன் ஒதுக்கித் தாருங்கள் போன்ற பல்வேறு தமிழ் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு, காத்தான்குடி நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான ஜெ.சர்வேஸ்வரன், காத்தான்குடி பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்கர் தசநாயக்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
Read More
Unknown

தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் கலந்து கொள்ளும் இஸ்லாமிய மாநாடு-13 -சனிக்கிழமை –காத்தான்குடியில்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் கலந்து கொள்ளும் இஸ்லாமிய மாநாடு 13-06-2015 நாளை மறுதினம் சனிக்கிழமை காத்தான்குடி -06 மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள பஸ்பலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.

இங்கு மறுமை வெற்றி யாருக்கு? எனும் தலைப்பில் தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ் ஐயூப் விஷேட சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.

இதில் அனைத்து சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.


Read More
Unknown

இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புரவலர் புத்தக பூங்காவின் அனுசரணையுடன் கண்டி கல்வி,கலை இலக்கிய சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் ஆதரவில் கலாபூஷணம் கவிஞர் பூபாலன் எழுதிய 'இதயமுள்ள பாரதி' (புரவலர் புத்தபூங்கா வெளியீடு) ,'கவிதை அரங்கேறும் நேரம்' (கண்டி ஈஸ்வரன் வெளியீடு), ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 14ம் திகதி ஞயிற்றுக்கிழமை 2.30 மணிக்கு கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் புத்தக பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொள்வார்.
Read More
Unknown

ஜம்இய்யது தாறுல் பிர் நிறுவனத்தினூடாக வறிய குடும்பங்களுக்கான குழாய்க்கிணறு விநியோகம் காத்தான்குடியில்-படங்கள்-

(gOYy;yh`; gu;`hd;)

[k;,a;aJ jhWy; gpu; epWtdj;jpD}lhf 61 twpa FLk;gq;fSf;fhd FOha; fpzW> Nkhl;lu;> jhq;fp tpepNahfpf;Fk; epfo;T mz;ikapy; fhj;jhd;Fb ,];yhkpf; nrd;wu; [hkpcj; njs`Pj; gs;spthaypy; ,lk;ngw;wJ.

,jd; NghJ mjpjpfspdhy; fhj;jhd;Fb kw;Wk; mjid md;kpj;j fpuhkq;fisr; Nru;e;j ViofSf;F ,it toq;fg;gl;lJ.

Nkw;gb epfo;tpy; cykhf;fs;> fhj;jhd;Fb ,];yhkpf; nrd;wu; epUthfpfs; kw;Wk; mur cj;jpNahfj;ju;fs; gyUk; fye;J nfhz;ldu;.
Read More
Unknown

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் சவாலாகவே இருந்து வருகின்றது -கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி – பதுளை பிரதான வீதியில் கடந்த 1990ம் ஆண்டுக்கு முன்பு குடியிருந்தவர்களின் காணிகளில் மீளக்குடியமர்வது என்பது ஓர் பாரிய சவாலாகவே இருந்து வருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த காணிப் பிரச்சினை சம்பந்தமாக கடந்த இரண்டரை வருடங்களாக செங்கலடி பிரதேச செயலகத்திற்கும், காணி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அலைந்து திருந்து கொண்டிருக்கின்றார்கள்.
Read More