Featured Home (TOP)

Recent Comments

Monday, June 15, 2015

Unknown

WinSYS Networks மட்டக்களப்பு நிறுவனத்தின் தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் என்பன வழங்கும் நிகழ்வு



(ஏ.எல்.டீன்பைரூஸ்)

மட்டக்களப்பு  WinSYS Networks நிறுவனத்தில் கல்விகற்று அமெரிக்காவின் MCP நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட MCSA மற்றும் Network Engineering பரீட்சை மற்றும் Network Engineering துறையில் சித்தியடைந்த கிழக்கு மாகாண மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா 14.06.2015  மாலை 2.30 மணியளவில் Hotel East Lagoon  இல் மட்டக்களப்பு முகாமையாளர் திரு.ம.விக்னராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக WinSYS Networks  நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ஷியாம் ஆப்தீன் அவர்களும், மட்டக்களப்பு கல்லியியல் உப பீடாதிபதி திருமதி.தி.யுவனேஸ்வரி அவர்களும், மட்டக்களப்பு வர்தகசங்க மற்றும் வர்த்தக சம்மேளன தலைவரான திரு.மு.செல்வராஜா அவர்களும் மற்றும் WinSYS Networks நிறுவனத்தின் திட்டமிடல் அதிகாரி திரு.நிப்ராஸ் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வானது கிழக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகும், இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து WinSYS Networks மற்றும் Network Engineering பரீட்சைக்கு தோற்றிய சுமார் 40 மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் என்பன வழங்கப்பட்டது.







Read More
Unknown

ஆசீர்வதிக்கப்பட்ட புத்தர்

இலங்கையின் தென் மாகானத்தின் அழுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தீவிரவாதிகள் நடாத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடந்து இன்றுடன் வருடம் ஒன்று பூர்த்தியாகிறது 
அதையொட்டி இந்தக்க விதை பிரசுரிக்கப்படுகிறது

(எம்.எம்.எம்.அன்ஸார்)

பெளத்த மதம் ஒன்று வாங்கி
வீட்டில் வளர்த்து  வருகிறேன்.
கொலை செய்வது கடை வீடுகளைக் கொளுத்துவது
போன்ற முக்கிய பாடங்களை
ஆசிரியராக வந்து போதிப்பதற்கு
அரச மரத்திற்கு சம்பளமும் கொடுக்கிறேன்

தினமும் 'பன்சல' வுக்குப் போய்
'பிரித்' வாங்கி வந்து சமைத்துக் கொடுக்கிறேன்.
சண்டித்தனமாக வளர்ந்து  மாற்று மதத்தினரை
நடுத்தெருவில் வைத்து
வீண் வம்புக்கு இழுத்து
வெட்டுக் குத்து நிகழ்த்துகிறது
என் வீட்டில் வளர்கின்ற பெளத்த மதம்  

பெளத்த மதத்தை
செல்லப் பிள்ளையாக தீன் போட்டு வளர்த்தால்
அந்த ஊரில்
மனித இறைச்சி வெட்டிப்போட்டு கொடுக்கின்ற
'தன்சல' விருந்துக்கு
முன் வரிசையில் வந்து நின்று
வேடிக்கை பார்த்து மகிழும் அரசாங்கம்.
அதனால் ஆசையாக வளர்க்கிறேன்

ஒவ்வொரு பொசன் போயா தினத்தன்றும்
என் வீர பெளத்த மதத்தை
மிஹிந்தலைக்கு அழைத்துச் சென்று
பயங்கரவாதத்தை பயிற்சி அளிக்கின்றேன்.
நீதி மன்றங்களால் கூட நிறுத்த முடியாத
கலவரங்களை
சட்டப்படி செய்துமுடித்து
என் பெயரைக் காப்பாற்றுகிறது.

மத வெறியைத் தின்று கொழுப்பதற்காக
ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளை ஆடை அணிவித்து
'தஹம் பாசல' வுக்கு அனுப்பி வைத்தேன்.
நல்ல பலன் கிடைத்தது.
போகின்ற வருகின்ற வழிகளில்
அப்பாவிகளாக தம் பாட்டுக்கு நின்ற
மஸ்ஜித் கோவில் தேவாலயங்கள் மீது
கல்லுகளையும் பொல்லுகளையும் வீசியெறிந்து
தன்னை பாதுகாத்துக் கொண்டதாக
வீரப் பெருமை கொண்டது
நான் தொழுவம் கட்டி வளர்த்த பெளத்த மதம்

கடைசியாக
கடும்பசி எடுத்தபோது எனது பெளத்த மதத்தை
அளுத்கமவில் கொண்டுபோய் அவிழ்த்துவிட்டேன்.
கடைகளை பிடுங்கிப் பிடுங்கித் தின்றது
வீடுகளை சாய்த்துச்  சாய்த்துச் சப்பியது
'பன' ஓதி மந்திரித்த தீயைக் கரைத்து
நகர் முழுக்க ஊற்றியது.
தாகத்திற்கு முஸ்லிம்களின் இரத்தத்தைக் குடித்துவிட்டு
தப்பியோடிச் சென்றுவிட்டது.

நான் வளர்த்து ஆளாக்கிய
பெளத்த மதத்தை தேடிச் சென்றேன்.
களுத்துறை மஹா போதியில்
பாதுகாப்பு அமைச்சினால் ஆசீர்வதிக்கப்பட்ட
பெரிய புத்தரின் மடியில்
வன்முறை நிகழ்த்திய பட்டியலை
பிக்குகளின் கரகோசத்தோடு
அது வாசித்துக் கொண்டிருந்தது.
மணிக்கட்டுக் கையில் வெள்ளை நூல் கட்டிய பொலிஸார்
காவலுக்கு நின்றனர்

15-06-2014











Read More
Unknown

பெருநாள் தொழுகைக்கு புதிய வீதியால் செல்ல முடியும் - சிப்லி பாறூக்

(எம் எச் எம் அன்வர்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி பாம் வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (14)இடம்பெற்றது.

6.2 மில்லியன் ரூபா  செலவில் அமைக்கப்படவுள்ள இவ்வீதியானது நீண்ட காலமாக செப்பனிடப்படாமலும் இவ்வீதியால் போக்குவரத்து செய்பவர்கள் பெரும் சிரமத்தினையும் எதிர்நோக்கி வந்தனர்

மேற்படி வீதிக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவ்வீதியை கொந்தராத்து மற்றும் புணரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கே பொறுப்பு என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பல தடவைகள் பல கூட்டங்களில் கூறியிருந்தார் 

இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்   தனது சொந்த நிதியிலிருந்து இப்பணியை செய்வதாக இன்றைய நிகழ்வில் தெரிவித்ததுடன் ஸதக்கத்துல் ஜாரியாவாக இது அமையும் எனவும் தெரிவித்தார் 
அத்துடன் இன்ஷா அல்லாஹ் இந்த பாம் வீதியானது எதிர்வரும் ரமழான் நோன்புப் பெருநாள் தினத்தன்று இப்புணரமைப்பச் செய்யப்பட்ட வீதியால் பயணித்து பெருநாள் தொழுகைக்கு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

மேற்படி நிகழ்வுக்கு மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெத கெதர நகர சபை விஷேட ஆணையாளர் திரு சர்வேஸ்வரன் கெபப உறுப்பினர்கள்  முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ழான் முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் மதீன் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் மேற்படி அதிதிகளால் அடிக்கல் நட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.





Read More