Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 28, 2015

Unknown

இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையோடு 'இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு' கடந்த 26.06.2015 வெள்ளிக்கிழமை  காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அறபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மேற்படி தர்பிய்யா நிகழ்வில் காத்தான்குடியில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம், இஸ்லாமிய இளைஞர் முன்னணி, இஸ்லாமிக் சென்றர்,  யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் , லஜ்னதுஸ்ஸுன்னாவின் இளைஞர் அணி போன்ற அமைப்புக்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் தலைப்பில்  அஷ்ஷெய்க்.  ஏ.எல்.எம். முஜாஹித் (சலபியும் , அல்லாஹ்வின் அருட்கொடைகள் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். பஷீர் (மதனியும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இங்;கு தொடர்பாடல் திறண்கள் பற்றிய போட்டி நிகழ்ச்சிகள், அல்குர்ஆன் ஹல்கா மற்றும் குழுச் செயற்பாடு போன்றவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










Read More
Unknown

ஆகக் குறைந்த மலிவு விலையில்

(எம்.எல்.எம்.அன்ஸார்) 

எனது இரத்தத்தைப் பசளையாய்த் தின்று
கொழுத்து வளர்ந்த மரம்.
தண்ணீராய்
இனத்து வாக்குகளைப் பருகியதால்
செழித்தது பல கிளைகளாக!
தனது தியாகங்களை அணிவித்து
மானம் மரியாதையாக
சூடு சொரணையோடு மரத்தை வளர்த்து
நிழலை ஆய்ந்து தந்தார் மர்ஹூம் தலைவர்

-----

பச்சை நீலக் கட்டில்களில் ஏறி
உரியானத்தோடு உருண்டு புரண்டு
யானை வெற்றிலைகளோடு
படுத்தெழும்பி ஒழுக்கங்கெட்டலைகிறது
மானம் கெட்டவளைப்போல மரம்.
----

தேர்தல் வீசுகிற பருவ  ஆண்டுகளில்
போஸ்டர்  பெனர்களில்
தொப்பி முக்காடு  உடுத்துக் கொண்டு
மரம் வுளூச் செய்து குளித்து  துப்பரவாகி
ஊர்ச் சந்திகளில் வந்து நிற்பதுண்டு.
ஸக்காத்துக்குத் தயாராகி அலையும் உம்மத்தினர் போல
---

அழ்ழாஹ்வையும் அல்குர்ஆனையும்
ஒலிபெருக்கி பொருத்தி
சத்தமாகக் கூவி விற்பானுகள்
எம்பியாக பூத்து
பிலாக்காய் போல பெருத்து வளர பேராசைப்படுபவனுகள்
----

எனது குருதியில் சுடுநீர் கொட்டி  கொதிக்க வைக்கப்படுகிறது
பிரச்சார மேடைகளில்.
உணர்வுகளின் கால்களை உசுப்பிவிட்டு
வேகமாக ஓடச்செய்கிறார்கள்
வாக்குக் கொள்ளையை வசதியாய்ச் செய்து முடிக்க
---

செத்துத் தொலைந்து போய்விடக்கூடாதென்ற
சமூக அன்பின் வற்புறுத்தல்
ஒவ்வொரு தேர்தலின் போதும்
புள்ளடியைப் பருக்கி காப்பாற்றி எடுக்கிறது
வீட்டு மரத்தை.
----

வெற்றியின் பின்னரான நாட்களில்
எனது அரசியல் அடையாளம்
தனித்துவத்தின் பேரம் பேசும் வல்லமை
விற்கப்படுகிறது ஆகக் குறைந்த மலிவு விலையில்
நடை பாதையில்  விரித்து வைத்து
இருபது ரூபா பிளாஸ்டிக் சாமான்கள் போல
2011.02.25 தொடக்கம் 03.01 வரை


Read More
Unknown

காத்தான்குடியில் நடைபெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வு .


நேற்று (27) மாலை ரமழான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வொன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜக்கிய அராபு இராச்சியத்தின் இலங்கை தூதரகம் (embassy of the united Arab emirates ) இன் அனுசரணையல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியளார் சிப்லி பாரூக் அவர்களின் ஏற்பாட்டில் இவ் இப்தார்  நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடியின் சகல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ் இப்தார் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், முன்னால் மாகாண சபை உறுப்பினர் முபீன் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என்று பலரும் கலந்து சிறப்பிதமை
குறிப்பிடத்தக்கது.

(ஜுனைட்.எம்.பஹ்த் )




Read More
Unknown

இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் சமுத்திரத்தில் மாலுமி அற்ற கப்பலில் பயணிப்பவர்களாக தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் !


(மீரா அலி ரஜாய்)

ஏழாவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டமை நாம் யாவரும் அறிந்ததே . இன்று காலையிலிருந்து பிரதான கட்சிகள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாகவும் , உற்சாகத்துடனும் ஆரம்பித்துள்ளன.

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தேர்தலில் இறங்குவது தான் சாலச் சிறந்தது . ஏனெனில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; ஐக்கிய தேசிய கட்சியுடன் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடனோ போட்டி இட்டால் நமது முஸ்லிம் வாக்குகளின் மூலம் பெரும்பான்மை கட்சிகள் தங்களுடைய சிங்கள வாக்குகளுடன் நமது வாக்குகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய ஆசனங்களை அதிகரித்துக் கொள்வார்கள் .

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடு பூராகவும் தனித்து களமிறங்கி தன்னுடைய மக்கள் பலத்தை முழு நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . ஏனெனில் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் வபாத்தை தொடர்ந்து  வந்த  தேர்தல்களிலெல்லாம் மு.கா சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன்  இணைந்தும் தான் தேர்தல்களில் களமிறங்கி இருந்தது.

 தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் அவர்கள்  தனித்துவமாக களமிறங்கி தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.  அது மாத்திரமல்லாமல் தங்கள் கால்களில் சுயமாக யாருக்கும் எந்த பெரும்பான்மை கட்சிகளுக்கும் கூஜா தூக்காமல் தங்கள் சமூகத்துக்காக எதிர்க் கட்சி அரசியலை செய்து வருகின்றமை நாம் அனைவரும் தெரிந்ததே .

   அதே போன்று தான் மக்கள் விடுதலை முன்னணி , சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி , மற்றும் சில இடது சாரிக் கட்சிகளும் தங்கள் சின்னங்களில் தனித்து தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன. 

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சமூகத்தின் நாடாளுமன்ற இருப்புக்களை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் உள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைத்து மரச்சின்னத்திலோ அல்லது பொதுவான சின்னத்திலோ தங்களுக்குள் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகளையும் , கொள்கைகளையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு; ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமைகளுக்கும் , பாதுகாப்புகளுக்கும் கவசமாக தங்கள் பாராளுமன்ற கதிரைகளை வெற்றி கொள்ளும் நோக்கில் பொதுவானதொரு   புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இந்த பொதுத் தேர்தலை முகம் கொள்ள தயாராக வேண்டும் . 

மனிதன் , தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் தான் படைக்கப்பட்டுள்ளான் என்கின்ற அல்லாஹ்வின்  வசனங்களில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் என்பதால் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து முஸ்லிம் உம்மாவுக்காக ஒற்றுமைபடவேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர் . 

 இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் சமுத்திரத்தில்  மாலுமி அற்ற கப்பலில் பயணிப்பவர்களாக  தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் .   

 முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் , நல்லாட்சிக்கான  மக்கள் அமைப்பு , தேசிய மனித உரிமைகள் கட்சி இன்னும் இதர அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் .

 குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் , அதாஉல்லா போன்றோர் தாங்கள்  பிரிந்து அல்லது பெரும்பான்மை கட்சிகளில் இணைந்து  போட்டியிட்டால்  தான் அடுத்த புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக வலம் வரலாம் என்கின்ற அதிகார விடயங்களை சற்று தள்ளி வைத்து விட்டு சமூகத்துக்காக சிந்திப்பீர்கள் என எண்ணுகின்றேன்
Read More