Featured Home (TOP)

Recent Comments

Tuesday, June 30, 2015

Unknown

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

(இன்பாஸ் சலாஹூதீன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இங்கு விசேட உரையாற்றினர். 

அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி, றிசாட் பதியூதீன், ரவுப் ஹக்கீம், கபீர் காசிம், ஹலீம் ,ஹஸனலி மற்றும் வெளிநாடுகளின் தூதுவர்கள் , ஊடகவியலாளர்கள் எனபலரும் கலந்து கொண்ட நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொன்னாடைபோத்தியமை இங்கு விசேட இம்சமாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்தார் நிகழ்வில் இறுதிவரையும் இருந்து கலந்து கொண்டவர்களுடன் உரையாடியதும் இங்கு விசேட அம்சமாகும்.
பிரமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதி நிதி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.















Read More
Unknown

முன்னால் அமைச்சர் பஸீர் சேகுதாவூதின் வியூகம் முழுக்க முழுக்க அனைத்தும் தனது சுயநலன் சார்ந்த வியூகங்களே

(ஏ.எல்.டீன்பைரூஸ் . ஜுனைட்.எம்.பஹ்த்)
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஸீர் சேகுதாவூதிற்கு கட்சித் தலைமை இடமளிக்கக் கூடாது என மட்டக்களப்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பஸீர் சேகுதாவூதின் வியூகம் அறிந்து கட்சித் தலைமை நடைபெவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளித்தால் தான் போட்டியிடுவேன் என தெரிவித்து இருந்தார். இன்றுவரை பஸீர் சேகுதாவூத் நேரடியாகவும், மறைமுகமாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி தேடித்தந்த சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்காகவே வியூகம் வகுத்திருந்தார் என்பதை கட்சித் தலைமை மாத்திரம் அன்றி, ஒவ்வொறு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் அறிவார்கள்.
பஸீர் சேகுதாவூத் போன்ற அரசியல் வியாபாரிகளின் கபட நாடகங்களால் முஸ்லிம் சமூகத்தை இனி ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காது முஸ்லிம் சமூகத்திற்கு மகிந்த அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்து இருந்தும், தான் வகுத்த வியூகத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட முழு அமைச்சுப்பதவிக்கு விசுவாசம் காட்டும் வகையில் முஸ்லிம்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும் என கட்சி ஒரு தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் விட்டு கட்சிக்கும் அதன் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியதுடன் கட்சியையும் அதன் தலைமையும் அத்தேர்தலில் முடிவெடுக்க விடாமல் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வந்ததுடன் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து இறைவனை பிரார்த்தித்து காதல் கடிதம் எழுதிய மீண்டும் ஒருமுறை முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்க வியூகம் வகுத்தார்.
பஸீர் சேகுதாவூத், அழகாக வியூகம் அமைத்து தனது சொந்த வாழ்கையை மட்டும் மேம்படுத்திக் கொண்டுள்ளாரே அன்றி, அவரது வியூகத்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியோ அக்கட்சிக்கு வாக்களித்த மக்களோ எதுவித பயனும்பெறவில்லை. இன்றுவரை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதியமைச்சராகவும் ஒரு முறை முழு அமைச்சராகவும் இருந்து அவர் வகுத்த வியூகத்தால் சாதித்தது என்ன?
அவர் வகுத்த வியூகத்தால் கட்சிக்கு வெளியிலிருந்து கட்சிக்கு உள்வாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர் வகுத்த வியூகத்தால் கட்சி எத்தனை வீதம் வளர்ச்சியடைந்துள்ளது? அல்லது அவர் வகுத்த வியூகத்தால் தான் சார்ந்த மாவட்டத்தில் எத்தனை வீதம் கட்சி வளர்ச்சி கண்டுள்ளது? அல்லது அவர் வகுத்த வியூகத்தால் தனது சொந்த ஊரில் கட்சியை எத்தனை வீதம் வளர்தெடுத்துள்ளார்? அல்லது அவர் வகுத்த வியூகத்தால் வாக்களித்த மக்கள் அடைந்த நண்மை தான் என்ன?
முழுக்க முழுக்க அனைத்தும் தனது சுயநலன் சார்ந்த வியூகங்களே
பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் கட்சித் தலைமைக்கு மகுடம் ஊதி தேசியப்பட்டியலை பெற்றுக் கொள்ளுகின்ற வியூகம், பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் கட்சியைக் காட்டிக் கொடுத்து கட்சிக்கும் அதன் தலைமைக்கும் தெரியாமல் முழு அமைச்சுப் பதவி பெற்றுக் கொள்ளுகின்ற வியூகம், பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கரையோர மாவட்ட கோரிக்கையை ஏனைய கட்சிக் காரர்கள் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக இருந்து காட்டிக் கொடுத்து தடுத்து நிறுத்திய வியூகம் பஸீர் சேகுதாவூத் அவர்களின் வியூகம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் வேண்டும் 
முஸ்லிம்களுக்கு ஒரு தனியான மாவட்டம் இருப்பதில் என்ன தவறு என பட்டி தொட்டியெல்லாம் பேசி அமைதியாக இருக்கின்ற சிங்கள, தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடுகின்ற மகிந்த ராஜபக்ஷவின் சதித் திட்டத்தை அரகேற்றுகின்ற வியூகம் இவ்வாறு எத்தனையோ துரோகத்தனமான வியூகங்களை சான்றுவிக்க முடியும் தனது சுயநலனுக்காக வியூகம் வகுக்கின்ற பஸீர் சேகுதாவூத் அவர்களுக்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளமன்ற தேர்தல் வேட்ப்பாளர் பட்டியலில் ஓரு போதும் இடமளிக்கக் கூடாது அதனையும் மீறி போட்டியிடுவதற்கு தலைமை இடமளித்தால் இன்னும் பல மடங்கு கட்சி வீழ்ச்சியடையும் என்பதுடன் கட்சியின் வீழ்ச்சிக்கு தலைமையே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியேற்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.
Read More
Unknown

மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்


(ஆர்.யசி)

சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினர் முட்­டாள்­க­ளாக செயற்­படக்கூடாது எனவும் அவர் தெரி­வித்தார் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்­பட்­டி­ருக்கும் பிர­த­ம­ர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறு­கையில்,
கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்த நாடு பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாத யுத்­தத்தை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது, அதேபோல் சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அதேபோல் சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களின் கடும்­போக்கு அர­சி­ய­லுக்கும் நாடு முகம் கொடுத்­தது. வெறு­மனே யுத்­தத்தை வெற்­றி­கொண்டு நாட்டை ஆயுத போராட்­டத்தில் விடு­வித்­த­தாக கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்­றிய மஹிந்த கூட்­டணி நாட்டை அழிவின் பாதையில் கொண்டு சென்­று­விட்­டது.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என்­பதில் நாமும் ஆவ­லோடு இருந்தோம். யுத்தம் நடத்­தப்­ப­டாது இடை­ந­டுவே புலி­க­ளுக்கு ஆத­ர­வாக அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்த போது ஜாதிக ஹெல உரு­மை­யவே தொடர்ந்து யுத்­தத்தை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டது. நாம் கொடுத்த அழுத்­தத்தின் கார­ணத்­தினால் தான் அர­சாங்கம் தொடர்ந்து யுத்­தத்தை முன்­னெ­டுத்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டை மாற்றுப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக இருந்தும் முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தமது அதி­கார ஆசையில் சர்­வா­தி­கார ஆட்­சியை கடு­மை­யாக்­கி­ய­மையும் நாட்டில் அதி­காரக் குவிப்பை மேற்­கொண்­ட­மை­யுமே நாம் மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற பிர­தா­னமான கார­ண­மாக அமைந்­தது.

கடந்த ஜன­வரி மாதம் இந்த நாட்டில் மிக முக்­கிய மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் சர்­வா­தி­கா­ர­மாக பய­ணித்த ஆட்சிப் பாதை கடந்த ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய கட்­சிகள் பிர­தான கட்­சி­க­ளாக ஒன்­றி­ணைத்து ஏனைய தமிழ்,சிங்­கள, முஸ்லிம் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து இந்த ஆட்­சியை அமைத்­துள்ளோம்.

இந்த ஆட்­சியில் நாடு சரி­யான பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. ஆகவே இப்­போது நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­த­லுடன் மீண்டும் பல கட்சி அர­சியல் முறைமை உரு­வாக்கும் சர்­வா­தி­கா­ரப்­போக்கு இல்­லாத, அனைத்துக் கட்­சி­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்கும் வகையில் சரி­யா­ன­தொரு அர­சியல் முறைமை உரு­வாக வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

கேள்வி :- மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது சாத்­தி­ய­மா­னதா ? ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யதா?

பதில்: மஹிந்­தவை மீண்டும் பிர­த­ம­ராக்க ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி முயற்­சிக்க நினைப்­பது மிகவும் முட்டாள் தன­மா­ன­தொரு செயற்­பா­டாகும். இத்­தனை காலமும் நாம் போரா­டி­யதும் சர்­வா­தி­கார குடும்ப அர­சி­யலை அடி­யோடு ஒழிக்க வேண்டும் என்­ப­தற்­கா­க­வே­யாகும். அவ்­வா­றான நிலையில் மீண்டும் மஹிந்­தவை ஆத­ரித்­துக்­கொண்டு வர நினைப்­பது ஏன்? மீண்டும் மஹிந்த கூட்­ட­ணி­யிடம் நாட்டை ஒப்­ப­டைத்தால் நாடு அழி­வது உறுதி. அதேபோல் மஹிந்­தவால் இனிமேல் அர­சி­யலில் கால்­தடம் பதிக்க முடி­யாது. அவரால் மீண்டும் மக்­களின் ஆத­ரவை பெற­மு­டி­யாது. மஹிந்த மற்றும் அவ­ரது குடும்ப அர­சியல் வாதி­க­ளைப்­பற்றி மக்கள் நன்­றாக அறிந்­து­கொண்­டுள்ளார். அவ்வாறான நிலையில் மக்கள் மீண்டும் மஹிந்தவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி :- பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமைய தனித்து போட்டியிடுமா?

பதில்: பொதுத் தேர்தலில் நாம் தனித்து களமிறங்குவதா அல்லது கூட்டணியில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் இல்லை. இவ்வார இறுதியில் நாம் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்போம்.
virakesary

Read More