Featured Home (TOP)

Recent Comments

Sunday, July 5, 2015

Unknown

NFGGயின் பெண்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று அதன் பிராந்திய தலைமையகமான காத்தான்குடியில் இடம்பெற்றது.
NFGGயின் பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடன் இணைந்து காத்தான்குடி மகளிர் அணி உறுப்பினர்கள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த மாபெரும் பெண்களுக்கான இப்தார் நிகழ்விற்கு NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) தலைமை தாங்கி உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தவிசாலை பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் விஷேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தாய்மார்கள், சகோதரிகள் என பெருமளவிலான பெண்கள் கலந்துகொண்டனர்.






















Read More
Unknown

காத்தான்குடியில் கனவனை இழந்த விதைவைகளின் நலன் கருதி ஸல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் காப்புறுதி திட்டமொன்று ஆரம்பித்து வைப்பு

காத்தான்குடியில் கனவனை இழந்த விதைவைகளின் நலன் கருதி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் காப்புறுதி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சாவினால் இந்த திட்டம் புதன்கிழமை(1.7.2015) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமானா தக்காபுல் நிறுவனத்தில் கனவனை இழந்த 100 விதைவைகளுக்கு இந்த காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமானா தக்காபுல் நிறுவனத்தின் காத்தான்குடி முகாமையாளர் ஏ.எம்.அனீஸ், மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர், காத்தான்குடி உலமாக்களான மௌலவி ஏ.ஜி.எம்.அமீன், ஏ.எல்.ஆதம்லெவ்வை, மௌலவி எம்.சி.எம்.பௌஸ், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி எ.அஸீஸ் அமானா தக்காபுல் நிறுவனத்தின் பிராந்திய அதிகாரி பிரதீப் ஜெயக்குமார் உட்பட மு;ககியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இந்த திட்டத்தில் 100 விதைவைகளுக்கு இதன் காப்புறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நூறு விதைவைகளுக்கும் தலா ஒருவருக்கு பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் 1155 ரூபா பணம் இந்த திட்டத்திற்காக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.








Read More
Unknown

ஸல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் குடி நீர் வசதியற்ற 25 குடும்பங்களுக்கு குடி நீர் வசதி

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் அல்கிம்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் காத்தான்குடியில் குடி நீர் வசதியற்ற 25 குடும்பங்களுக்கு குடி நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட்ட வீடுகளுக்கு இன்று(3.7.2015) வெள்ளிக்கிழமை காலை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா சென்று பார்வையிட்டார்.
இதன் தலா ஒரு குடும்பத்திற்கு எட்டாயிரம் ரூபா செலவில் இந்த குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.



Read More
Unknown

காத்தான்குடி நூதனசாலை சிலைகளை அகற்றுமாறு அ.இ.ஜ.உ. பத்வா


காத்தான்குடி நூதனசாலை தொடர்பாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் பத்வா வழங்கப்பட்டுள்ளது. அதில் உருவச்சிலைகள், பொம்மைகளை முற்றாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவிலான படங்களை பயன்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது 


இவ் பத்வா தொடர்பாக கருத்து தொிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வழங்கப்பட்ட பத்வாவிற்கு தான் கட்டுப்படுவதாககும், சிலைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும். இது தொடர்பாக திங்கட்கிழமை தொல்பொருள் திணைக்களத்தினாிடம் தாம் பேசுவதாகவும் தொிவித்தார்.


(ஜுனைட்.எம்.பஹ்த் )





Read More
Unknown

நிந்தவூர்-12. கிராம அபிவிருத்திச் சங்கத்தின் சமூக வேலைத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வும், இப்தார் நிகழ்வும்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர்-12, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டிலான 'சமூக வேலைத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும், இப்தார் நிகழ்வும்' இன்று மாலை நிந்தவூர்-13ம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுர் றகுமானியா பள்ளிவாசல் மேல் மாடியில் இடம் பெற்றது.

நிந்தவூர்-12, கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.டபிள்யூ.எம்.ழரீப் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய உலமா ஆசீக் அலி மௌலவி, ஓய்வுபெற்ற ஆசிரியர் என்.எம்.எம்.மீராசாஹீப் ஆகியோhர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வுகளில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொறியியலாளர் எம்.நஜீப், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.மன்சூர், இன்று மக்களால் எதிர்பார்க்கப்படும் ஓர் இளம் அரசியல் தலைமுறை சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் உள்ளிட்ட பிரமுகர்களுடன் உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிந்தவூரிலுள்ள 25 கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் ஒரு முன்மாதிரியான வேலைத் திட்டத்தை நிந்தவூர்-12 கி.அ.சங்கத்தினர் செய்து, காட்டியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.








Read More