Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 7, 2015

Unknown

'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' நூல் வெளியீட்டு விழா

(இன்பாஸ் சலா{ஹதீன்)

'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை வட பழனியிலுள்ள தமிழ்நாடு தொல்காப்பிய பேரவை ஆதித்தியா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம்  சதீஷ்குமார் எழுதிய இந்நூலின் முதற் பிரதியை  இலக்கிய செம்மல் குமரி ஆனந்தனிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் எச்.வீ.ஹாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலக்கிய செம்மல் குமரி ஆனந்தன், நடிகர் எஸ்.வீ.சேகர், பாரதிய ஜனதா தமிழ் நாடு துணைத் தலைவர் வானதி ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





Read More
Unknown

சஜின் வாஸ் குணவர்தனவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிர்வரும்  21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
Unknown

நாட்டின் மோசமான அரசியல் கலாசாரத்தை மக்களே மாற்றியமைக்க வேண்டும்

நாடு போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் மத்­தி­யஸ்­தா­ன­மா­கிப் ­போ­யுள்ள நிலையில் போதைப் பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­களின் பத­வியே அனு­ம­திப்­பத்­திரம் இவ்­வாறு நாட்­டுக்கு பொருந்­தாத அர­சியல் கலா­ச­ரத்தை மாற்­றி­ய­மைக்க நாட்டின் அர­சியல் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்யும் பொது மக்­களால் மட்­டுமே முடியும் எனவும் சமூ­க நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் அமைப்­பாளர் மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

தூய்­மை­யான அர­சியல் பிர­ஜை­களை உரு­வாக்­குவோம் என்ற தலைப்பில் கொழும்பு விஹா­ர­மா­தேவி பூங்கா உள்­ளக அரங்கில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற நாட­ளா­விய ரீதியில் மக்­க­ளிடம் பெறப்­பட்ட 10 இலட்சம் கையெ­ழுத்­துக்கள் அடங்­கிய புத்­த­கங்­களை அர­சியல் கட்சி பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்கும் நிகழ்வில் பங்­கேற்று உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இந் நிகழ்வில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் எம்.பி.விஜித ஹேரத், முன்னாள் தலைவர் சோம­வன்ச அம­ர­சிங்க, ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊட­கப்­பேச்­சாளர் நிசாந்த வர்­ண­குல­சிங்க, ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க, ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளாளர் எரான் விக்­கி­ர­ம­ரட்ண, அத்­து­ர­லியே ரத்ன தேரர், பிர­ஜைகள் முன்­ன­ணியின் செய­லாளர் ஜே.ஸ்ரீரங்கா உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய மாது­லு­வாவே சோபித தேரர்,
எமது நாடு இன்று போதைப்­பொருள் வர்த்தகத்தின் மத்­தி­யஸ் ­தா­னமா­கி­யுள்­ளது. போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே என தெரிந்த போதும் அவர்கள் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­களும் இல்லை. இதனால் நாட்டின் பாரா­ளு­மன்றம் போதைப்­பொருள் வியா­பா­ரி­களால் நிரம்­பி­ப்போ­யி­ருந்­த­மை­யையே இது வரையில் எம்மால் காண முடிந்­தது.
போதைப்­பொருள் மத்­தி­யஸ்­தா­ன­மாக நாடு மாறி­யுள்­ள­மை­யினால் நாட்டின் அர­சியல் தலை­வர்கள் பலர் இவ்­வர்த்­த­கத்தில் ஈடு­படும் போது அவர்­க­ளுக்கு காப்­பா­கவும் அனு­ம­திப்­பத்­தி­ர­மா­கவும் தமது பத­வி­யி­னையே பயன்­ப­டுத்திக் கொண்­டனர்.ஆனால் அவர்கள் மக்கள் சேவை நிமித்­தமே பாரா­ளு­மன்­றத்­திற்கு அனு­ப்பப்பட்­டனர். அவர்­களை மக்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பினர்.
மக்கள் சேவைக்­காக பாரா­ளு­மன்றம் செல்­ப­வர்கள் ஊழல்­வா­தி­க­ளாக இருப்­பது முறை­யன்று. அதனால் மக்கள் இனி­வரும் காலங்­களில் பாரா­ளு­மன்­றத்­திற்கு அவ்­வா­றா­னவர் செல்­லா­தி­ருப்பதை உறுதி செய்­வது அவர்­களின் கட­மை­யாகும் அதற்­காக எதிர்­வரும் தேர்­தலின் போது நாட்டு மக்கள் தமது பிர­தி­நி­தி­களை கல்வி ஞான­முள்ள, அர­சியல் அறி­வு­மி­குந்த மக்­க­ளுக்கு சேவை­யாற்ற விரும்­பு­ப­வர்­க­ளையே பாரா­ளு­மன்றம் அனுப்ப முன்­னின்று செயற்­பட வேண்டும்.
அடிப்­படை அர­சியல் அறி­வில்­லா­த­வர்­களை பாரா­ளு­மன்றம் அனுப்­பி­யுள்­ள­மை­யி­னா­லேயே அண்­மையில் சீர்­தி­ருத்தம் செய்­யப்­பட்ட முக்­கிய சட்­ட­திட்­டங்கள் சில­வற்­றையும் 20 ஆவது திருத்­தத்­தையும் நாட்டு மக்கள் இழக்க நேரிட்­டது என்றார்.
virakesary.lk
Read More
Unknown

எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும்'

(ஏ.எல்.டீன்பைரூஸ்,ஜுனைட்.எம்.பஹ்த்)

எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும்'

சயஅடயnமட்டக்களப்பு: எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NM. றம்ழான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில்  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக எந்தவொரு பொரும்பான்மைக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தே போட்டியிட வேண்டும் அதன்போதே முஸ்லிம் காங்கிரஸினால் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் பதவியை பாதுக்க முடியும்.

முஸ்லிம் காங்கிரஸின் பரம எதிரிக் கட்சிகள் கூட்டாக அங்கம் வகிக்கும் அணியில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதன் மூலம் கட்சியின் அரம்ப காலம் தொடக்கம் இறுதி வரையும் பாதுகாக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் பதவியை இழக்க ​வேண்டி நேரிடுவதுடன் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் வாக்கு மூலம் அக்கட்சியின் எதிரிகளுக்கு களம் அமைத்து கொடுக்கின்றதாகவும் அமையும் என்பதை கட்சித்தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சயஅடயnஅத்துடன் தனித்து போட்டியிடுவதன் மூலம் கடந்த காலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பட்டம் பதவிகளுக்காக காட்டிக் கொடுத்து தன்னை உருவாக்கிய கட்சியை அழிப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சதி செய்து கட்சியின் முதுகில் குத்திவிட்டு தருனம் பார்த்து கட்சி மாறி துரோகம் இழைத்துச் சென்றவர்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து எதிர்வரும் பாராளமன்றத் தேர்தலில் அவர்களை தோற்கடித்து அரசியலிருந்து ஓரம்கட்டி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பமாகவும் இச்சந்தர்ப்பத்தை கட்சித்தலைமை நன்கு பயன்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் இழைத்து விட்டுச் சென்றவர்களின் அரசியல் வாழ்வு இன்று முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகும் தீர்மானத்திலே தங்கியுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது அத்தோடு கடந்த காலங்களில் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு சதி செய்த நயவஞ்சகர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சிறந்ததோர் தீர்மானத்தை எடுக்க வேண்டும் அதுவே கட்சியை பாதுகாக்கும் கடந்த காலத்தில் கட்சிக்கு கட்டுப்படாத கட்சிக்கு தெரியாமல் பதவி பெற்றவர்கள் இப்போது தான் வானத்திலிருந்தேனும் பாராளமன்றம் செல்வேன் என்கின்ற பூச்சாண்டிக்களின் கூக்குரலுக்கு கட்சித்தலைமை செவிசாய்க்கக் கூடாது.

அவர்கள் மக்கள் செல்வாக்கு அற்றவர்கள் அவர்களே கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் விழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை கட்சித் தலைமை அறிந்த விடயம் அவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்ப்பாளர் பட்டியலில் இடமளிக்கக் கூடாது.

அவர்களால் எதிர் காலத்தில் கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் பலவீனப்படும் அத்துடன் தலைமையினால் எழுதப்படாத முஸ்லிம் காங்கிரஸ் யாப்பாக கடந்த காலத்தில் செயற்படுத்தி வந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் விடயத்திலும் கட்சித் தலைமை எதிர் காலத்தில் மிகவும் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Read More