Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 2, 2015

avathani Media Network

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீனின் வேண்டு கோளின் பேரில் காத்தான்குடியில் 'கடற்கரைப் பூங்கா' அங்குராா்ப்பன நிகழ்வில் முதலமைச்சா் ஹாபீஸ் நசீா் பங்கேற்பு

(-ஏ.எல்.டீன் பைரூஸ்-)


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.என்.எம்.முபீன் அவா்களின் வேண்டு கோளின் பேரில், நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ,சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான  றவுப் ஹக்கீம் அவா்களின் 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டின் கீழ் காத்தான்குடி கடற்கரையில்  ”கடற்கரை பூங்காவின்” அங்குராா்ப்பன நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சா்  ஹாபீஸ் நசீர் கலந்து கொண்டார்.

காத்தான்குடி கடற்கரையினை மேலும் அழகு படு்த்தம் நோக்கில்  மேற் கொள்ளப்பட இத்திட்டத்தின் மூலம்  அமையப் பெற்றுள்ள  நடை பாதைக்கான பொருத்துக் கல் பதிக்கப்பட உள்ளதாகவும் கடற்கரை ஓரம் முழுவதுமாக நிழல் தரும் பல மரங்கள் நடப்பட்டு வருவதினையும் காணக் கூடியதாக உள்ளது. 

மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக எமது மக்கள் நல்ல பிரயோசனங்களை அடைந்து கொள்ள முடியும் என  நகர அபிவிருத்தி தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ,சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான  றவுப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் யு.எல்.என்.எம் முபீன் தெரிவித்தார்.







Read More
avathani Media Network

NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கபுறடி வீதிச் சந்தியில் இடம்பெற்றது - படங்கள்

NFGG ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய  முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நேற்று கபுறடி வீதி சந்தியில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பலுளுள் ஹாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் NFGGயின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் மௌலவி முஹம்மது றிஸ்மி (காசிமி), NFGGயின் இளைஞர் அணி உறுப்பினர் MM.நௌசாத், SLMCயின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர் இல்மி அஹமத் லெப்பை ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிகழ்வில் NFGG, SLMC ஆகியவற்றின் உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




























Read More
avathani Media Network

'நீதியாக ஆட்சி செய்த ஆட்சியாளனுக்கு மறுமை நாளில் அர்ஷின் நிழல் கிடைக்கும் இதற்காகவே நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்' - பொறியியலாளா் அப்துர்ரஹ்மான்

(எம்.எச்.எம்.அன்வர்)

'நீதியாக ஆட்சி செய்த ஆட்சியாளனுக்கு மறுமை நாளில் அர்ஷின் நிழல் கிடைக்கும் இதற்காகவே நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்' 
இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடும் பொறியியலாளருமான எம் எம் அப்துர்ரஹ்மான் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தெரிவித்தார்

அவர் மேலும் தனதுரையில் 
நாங்கள் பாராளுமன்ற பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களல்ல எமது மக்களின் அமானிதமாக வழங்கப்படும் இந்த பதவியை சரியாக பயன்படுத்த வேண்டும் ஆனால் இன்று சிலரின் பேச்சுக்கள் பொய்யான கதைகள் மற்றும் செயற்பாடுகளைப்பார்த்தால் இவர்கள் மறுமையில் என்ன சொல்லப்போகிறார்கள் கப்றுக்குள் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்லப்போகிறார்கள் என்று நினைக்கும்போது கவலையாகவுள்ளது
பாராளுமன்ற பதவியானது மிகவும் பெறுமதிவாய்ந்தது சொகுசாக வாழ்வதற்கும் வெளிநாட்டுப்பயணங்கள் செல்வதற்கும் அபிவிருத்திகள் மாத்திரம் செய்வதற்கும் அது பயன்படுவதில்லை மாறாக மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மக்கள் சுய உரிமையுடனும் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டு செயலாற்றவே நாம் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன் இந்த பதவியின் ஊடாக இறைவனுக்கு பொருத்தமான வகையில் கடமையை மேற்கொண்டு மறுமை நாளில் ஏழு பேருக்கு வழங்கப்படும் அர்ஷின் நிழலில் ஒரு கூட்டமான நீதியான ஆட்சியாளனுக்கு கொடுக்கப்படும் அந்த இடத்தை பெறவே தான் ஆசைப்படுகின்றேன் 

பதவிக்கு ஆசைப்பட்டு இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகின்றனர் அவ்வாறல்ல பல தடவைகள் பாராளுமன்ற பதவிகள் எங்களைத் தேடி வந்தன உதாரணமாக முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா வெளிநாடு சென்ற போது இந்த பதவியை எடுக்குமாறு தனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

தாய்மார்களே சகோதரிகளே சிந்தியுங்கள் எமக்கு மாற்றம் வேண்டும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் எந்த சமூகம் தானாக மாற்றத்தினை கொண்டு வராதவரை தான் கொண்டுவரப் போவதில்லை என தெரிவித்துள்ளான் மாற்றம் ஒன்றை  ஏற்படுத்த மரச்சின்னத்திற்கு வாக்களித்து தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள்

மகிந்த அரசை வீழ்த்தி மைத்திரி பால சிரிசேன ஜனாதிபதியாவதற்கு எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாரிய பங்களிப்பினை செய்ததை தாங்கள் அறிவீர்கள் சிறந்த ஆட்சி மலர்வதற்கு தங்களால் ஆன முழு அதிகாரத்தையும் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பயன்படுத்துவோம்

பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் காசுக்காக வோட்டுப் போடும் சமூகமாக நீங்கள் மாறாது தன்மானத்துடனும் சுயகௌரவத்துடனும் வாழ எம்மை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அப்துல் றகுமான் தனதுரையில் மேலும் தெரிவித்தார் 



Read More
avathani Media Network

வேட்பாளரின் இலக்கம் பதிக்கப்பட்ட டீ சேர்ட்களுடன் நால்வர் கைது!

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கட்சியின் சின்னம் மற்றும் இலக்கம் அச்சிடப்பட்ட டீசேர்ட்களை, விநியோகம் செய்துகொண்டிருந்த ஜீப் வண்டி ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எல்ல, கினலன்வத்தை பிரதேசத்தில் மேற்படி டீசேர்ட்கள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் பண்டாரவளை மற்றும் ஹல்மதுல்லை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read More
avathani Media Network

1989 தொடக்கம் 2010 வரை மட்டு. மாவட்ட வாக்களிப்புகளும், விகிதாசார முறையில் கிடைக்கப்பெற்ற மக்கள் பிரதிநிதித்துவங்களும்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

09வது நாடாளுமன்றத் தேர்தல் - 15.02.1989
த.ஐ.வி.கூட்டணி  - 55,131 வாக்குகள், 
சுயேட்சை (ஈரோஸ்) – 46,419 வாக்குகள், 
ஸ்ரீ.ல.மு.கா – 36,867 வாக்குகள், 
ஐ.தே.கட்சி – 11,347 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 216,574 
அளிக்கப்பட்ட வாக்குகள்: 169,284 (78.16மூ)
இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 149,764 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களைப் பங்கிடுவதற்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் தேவைப்பட்ட வாக்குகளின் தொகை 37,441 வாக்குகளாகும்.
அதன்படி த.ஐ.வி.முன்னணியின் 55,131 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 37,441 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 17,690 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
அடுத்து, சுயேட்சைக்குழுவின் 46,419 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 37,441 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக அக்குழுவிடம் 8,978 வாக்குகள் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக எந்தக் கட்சிகளிடமும் 37,441 வாக்குகள் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்த கட்சிகளில் 36,867 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ.ல.மு.கா.வுக்கு 4வது ஆசனமும், அதற்கடுத்த நிலையில் 17,690 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.ஐ.வி.முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 25,651 விருப்பு வாக்குகள் பெற்ற கோ. கருணாகரம், 21,959 விருப்பு வாக்குகள் பெற்ற பிறின்ஸ் காசிநாதர், 19,431 விருப்பு வாக்குகள் பெற்ற சாம். தம்பிமுத்து, ஈரோஸ் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த 22,889 விருப்பு வாக்குகள் பெற்ற ஏ. குணசீலன், ஸ்ரீ.ல.மு.கா.வைச் சேர்ந்த 15,832 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களில் 07.05.1990ல் சாம். தம்பிமுத்து படுகொலை செய்யப்பட்டதால் ஜோஸப் பரராஜசிங்கம் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டார். ஈரோஸ் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த தமிழ் வேட்பாளர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியை வலியுறுத்தும் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்ததன் காரணமாக அக்குழுவின் வேட்பாளர் பட்டியலில் இறுதி வேட்பாளராக இடம்பெற்றிருந்த பஷீர் சேகுதாவூத் அவ்வியக்கத்தின் பிரிவினைப் போராட்டக் கொள்கையைக் கைவிட்டு இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்ற உறுப்பினரானார்.

10வது நாடாளுமன்றத் தேர்தல் - 16.08.1994
த.ஐ.வி.கூட்டணி  - 76,516 வாக்குகள், 
ஸ்ரீ.ல.மு.கா – 31,072 வாக்குகள், 
ஐ.தே.கட்சி – 23,244 வாக்குகள்
பொ.ஐ.முன்னணி – 19,278 வாக்குகள்
ரெலோ – 17,073 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 261,898 
அளிக்கப்பட்ட வாக்குகள்: 189,619 (72.40மூ)
இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 5 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 167,183 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்காகத் தேவைப்பட்ட வாக்குகளின் தொகை 41,795 வாக்குகளாகும்.
அதன்படி த.ஐ.வி.முன்னணியின் 76,516 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 41,795 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 34,721 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
3ம், 4ம், 5ம் ஆசனங்களுக்காக இப்போது எந்தக் கட்சிகளிடமும் 41,795 வாக்குகள் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 34,721 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.ஐ.வி.முன்னணிக்கு 3வது ஆசனமும், அதற்கடுத்த நிலையில் 31,072 வாக்குகளைப் பெற்றிருந்த ஸ்ரீ.ல.மு.காவுக்கு 4வது ஆசனமும், 23,244 வாக்குகளைப் பெற்றிருந்த ஐ.தே.கட்சிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 43,350 விருப்பு வாக்குகள் பெற்ற ஜோஸப் பரராஜசிங்கம், 17,450 விருப்பு வாக்குகள் பெற்ற பொன். செல்வராசா, 15,974 விருப்பு வாக்குகள் பெற்ற கே. துரைராஜசிங்கம், ஸ்ரீ.ல.மு.கா.வைச் சேர்ந்த 12,583 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 11,508 விருப்பு வாக்குகள் பெற்ற அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
11வது நாடாளுமன்றத் தேர்தல் - 10.10.2000

த.ஐ.வி.கூட்டணி  - 54,448 வாக்குகள், 
நுஆ - 53,646 வாக்குகள், 
ஐ.தே.கட்சி - 29,165 வாக்குகள், 
பொ.ஐ. முன்னணி - 16,510 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 275,485, 
அளிக்கப்பட்ட வாக்குகள்: 197,646 (71.74மூ)
இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 153,769 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களைப் பங்கிடுவதற்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் தேவைப்பட்ட வாக்குகளின் தொகை 38,442 வாக்குகளாகும்.
அதன்படி த.ஐ.வி.முன்னணியின் 54,448 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 38,442 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 16,006 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
அடுத்து, நுஆ கட்சியின் 53,646 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 38,442 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக அக்கட்சியிடம் 15,204 வாக்குகள் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக 38,442 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 29,165 வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கட்சிக்கு 4வது ஆசனமும், 16,510 வாக்குகளைப் பெற்றிருந்த பொதுசன ஐக்கிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 16,542 விருப்பு வாக்குகள் பெற்ற நிமலன் சௌந்திரநாயகம், 12,605 விருப்பு வாக்குகள் பெற்ற ஜோசப் பரராஜசிங்கம், நுஆ கட்சியைச் சேர்ந்த 22,975 விருப்பு வாக்குகள் பெற்ற முகைதீன் அப்துல் காதர், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 14,284 விருப்பு வாக்குகள் பெற்ற அலிசாஹிர் மௌலானா, பொ.ஐ.முன்னணியைச் சேர்ந்த 9,132 வாக்குகள் பெற்ற எஸ். கணேசமூர்த்தி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

12வது நாடாளுமன்றத் தேர்தல் - 05.12.2001
த.தே.கூட்டமைப்பு  - 86,284 வாக்குகள்
ஸ்ரீ.ல.மு.கா – 26,725 வாக்குகள்
பொ.ஐ. முன்னணி – 25,705 வாக்குகள்
ஐ.தே.கட்சி – 22,638 வாக்குகள்,
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 282,079
அளிக்கப்பட்ட வாக்குகள்: 192,383 (68.20மூ)
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 161,352 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்காக 40,338 வாக்குகள் தேவைப்பட்டன.
அதன்படி த.தே.கூட்டமைப்பின் 86,284 வாக்குகளில் 2ம், 3ம் ஆசனங்களுக்காக 80,676 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 5,608 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 40,338 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 26,725 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு 4வது ஆசனமும், 25,705 வாக்குகளைப் பெற்றிருந்த பொதுசன ஐக்கிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 24,475 விருப்பு வாக்குகள் பெற்ற ரி. தங்கவடிவேல், 20,279 விருப்பு வாக்குகள் பெற்ற ஜோசப் பரராஜசிங்கம், 20,675 விருப்பு வாக்குகள் பெற்ற கிருஷ்ணப்பிள்ளை, பொ.ஐ. முன்னணியைச் சேர்ந்த 19,787 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸைச் சேர்ந்த 17,497 வாக்குகள் பெற்ற முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

13வது நாடாளுமன்றத் தேர்தல் - 02.04.2004
த.தே.கூட்டமைப்பு  - 161,011 வாக்குகள்
ஸ்ரீ.ல.மு.கா - 43,131 வாக்குகள்
ஐ.ம.சு.கூட்டணி - 26,268 வாக்குகள். 
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 303,928
அளிக்கப்பட்ட வாக்குகள்: 254,023 (83.58மூ)
இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 3 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 230,310 வாக்குகளை எஞ்சிய 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்கு 57,577 வாக்குகள் தேவைப்பட்டன.
அதன்படி த.தே. கூட்டமைப்பின் 161,011 வாக்குகளில் 2ம், 3ம் ஆசனங்களுக்காக 115,154 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 45,857 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 57,577 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 45,857 வாக்குகளைக் கொண்டிருந்த த.தே. கூட்டமைப்புக்கு 4வது ஆசனமும், 43,131 வாக்குகளைப் பெற்றிருந்த ஸ்ரீ.ல.மு.காவுக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த 57,843 விருப்பு வாக்குகள் பெற்ற கே. கனகசபை, 50,545 விருப்பு வாக்குகள் பெற்ற தங்கேஸ்வரி கதிர்காமன், 44,457 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ். ஜெயானந்தமூர்த்தி, 38,633 விருப்பு வாக்குகள் பெற்ற கிங்ஸ்லி இராசநாயகம், ஸ்ரீ.ல.மு.கா.வைச் சேர்ந்த 21,232 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எஸ்.எஸ். அமீர்அலி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

14வது நாடாளுமன்றத் தேர்தல் - 08.04.2010
த.தே.கூட்டமைப்பு  - 66,235 வாக்குகள்
ஐ.ம.சு. முன்னணி – 62,009 வாக்குகள்
ஐ.தே.முன்னணி – 22,935 வாக்குகள்
த.ம.வி.புலிகள் - 16,886 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 333,644
அளிக்கப்பட்ட வாக்குகள்: 195,367 (58.56மூ)
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 168,065 வாக்குகளை எஞ்சிய 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் 42,016 வாக்குகள் தேவையாகின.
அதன்படி த.தே.கூட்டமைப்பின் 66,235 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 42,016 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 24,219 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
அடுத்து, ஐ.ம.சு. கூட்டமைப்பின் 62,009 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 42,016 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 19,993 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 42,016 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 24,219 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்புக்கே 4வது ஆசனமும், 22,935 வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த 20,569 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ். யோகேஸவரன், 18,485 விருப்பு வாக்குகள் பெற்ற பொன். செல்வாசா, 16,504 விருப்பு வாக்குகள் பெற்ற பி. அரியநேத்திரன், ஐ.ம.சு. கூட்டணியைச் சேர்ந்த 22,256 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 11,678 விருப்பு வாக்குகள் பெற்ற பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
17.08.2015ல் நடைபெறவுள்ள 15வது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாகவுள்ள கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் விபரங்களை இன்னும் 15 தினங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.







Read More