Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 22, 2015

avathani Media Network

SLMC தலைவர் றவூப் ஹக்கீம் NFGG காரியாலயத்திற்கு விஜயம்


(NFGG ஊடகப்பிரிவு)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் சற்றுமுன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயத்திற்கு வருகை தந்தார்.
காத்தான்குடியில் நேற்று ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்கு மட்டக்களப்புக்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் ஒரு கட்டமாகவே இந்த விஜயம் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய செயலாளர் MACM.ஜவாகிர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் றவூப் ஹக்கேம் உரையாற்றினார்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னையின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயாலயத்தில் திரண்டு இருந்தனர்.













Read More
avathani Media Network

இன்று NTJ அமைப்பு நடாத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் முழுமையான கானொளி

ஹஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றப் பதவி கிடைத்த பின் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் நடாத்திய காடைத்தனமான தாக்குதலைக் கணடித்தும்; ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும் இன்று காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடாத்திய கண்டண ஆர்ப்பாட்டத்தின் முழுமையான கானொளி

இங்கே கிளிக் பண்ணவும்

https://mail.google.com/mail/u/0/?tab=wm#inbox/14f5632606421881





Read More
avathani Media Network

ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்களின் அடாவடித்தனத்தைக் கண்டித்து தேசிய தௌவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய கண்டன ஆர்ப்பாட்டம்


(அபூ நிதா)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேயசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றப் பதவி வழங்கப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆதரவாளர்களால் காத்தான்குடியில் பரவலாக பட்டாசு கொழுத்தி நேற்றைய தினம் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றன.

இதன்போது ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் நாத்தப்பட்ட வன்முறகளையும் எதிர்ப்பு கோசங்களையும் தேசிய தவ்ஹீத் பள்ளிவாயல் மீதான தாக்குதல் மற்றும் அங்கு தொழுகைக்காக வந்திருந்தவர்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதல் போன்வற்றைக் கண்டித்து இன்று (22.08.2015) லுஹர் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயல் முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதுடன் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவும் ஊட்டப்பட்டது.

இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பொலிஸாரின் நீதி மன்ற அறிவுறுத்தல் மௌலவி ஸஹ்றான் அவர்களி;ன உரை அனைத்தும் இங்கு முழுமையாக ஒளி வடிவத்தில் இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக நீங்கள்  பார்க்கலாம்


















Read More
avathani Media Network

இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ் எச் எம். அஸ்பர்

(அபூ அல்தாப்)

நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வேண்டு மென்றே திட்டமிடப்பட்டு எம்மீது சேறுபூசுகின்றனர் இவ்வாறு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 

பட்டாசு கொழுத்தி வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட மக்களை வேண்டுமென்றே நல்லாட்சி சகோதர்கள் திட்டமிட்டு ஹிஸ்புல்லாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக நேற்றைய தினம் வன்முறையில் ஈடுபட்டனர்
எங்கள் ஆதரவு சகோதரர் ஒருவரை என் டி ஜே பள்ளியில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர் அதனைத்தொடர்ந்து பொலிசார் சமூகமளித்து அந்நபரை மீட்டு வந்தனர்

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல்  பதவியினை காழ்ப்புணர்வின் காரணமாகவும் ஹிஸ்புல்லாவைத் தோற்;கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அவரை கொச்சைப்படுத்தி பதவியிலிருந்து இறக்கி ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர் 

கொழும்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் தற்போது ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி ஏனைய சமூகங்கள் எம்மைப்பற்றி கேவலமாக சித்தரிக்கின்றன 

தேசியப்பட்டியல் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் வீதியில் இறங்கிப்போராடுவர் ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவியினை பறிக்க களமிறங்கியுள்ளனர் 
இவர்களின் நல்லாட்சி இதுதானா எனக்கேட்க விரும்புகிறேன் 

றவூப் ஹக்கீம் வீட்டில் தேசியப்பட்டியல் கேட்டு படையெடுக்கும் இவர்கள் 25 வருடம் அரசியல் அனுபவமுள்ள ஒரு முன்மாதிரியான தலைவர் ஹிஸ்புல்லாவை தோட்கடித்து சேறுபூச எத்தனிக்கின்றனர் இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என கேட்கவிரும்புகின்றேன் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்



Read More
avathani Media Network

NFGGயின் கவனயீர்ப்புப் போராட்டம்

(NFGG ஊடகப்பிரிவு)
நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. 

இப்பேரணி, இன்று காலை பத்து மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெற்றது. 

இந்தப் பேரணியில் கொழும்பு மற்றும் அதனைச்சூழவுள்ள பல இடங்களையும் சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் ஆதரவாளர்களினால் நேற்றைய தினம் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களைக்கண்டித்து தமது கண்டன அறிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தது. திருகோணமலையில் நடைபெரும் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ள காரணத்தினால், இக்கண்டன அறிக்கையினை உடனடியாக அவரிடம் சமர்ப்பிப்பதற்கான உத்தரவாதத்தினை ஜனாதிபதி உயர் அதிகாரிகள் வழங்கியிருந்தனர். 

அத்துடன் ஊடகங்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இவ்வன்முறைச்சம்பவங்கள் குறித்த தமது கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளதுடன் தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

மக்கள் தொடர்ந்தும் அமைதியினைப் பேண வேண்டுமென  NFGG மக்களைக் கேட்டுக்கொள்கின்றது. அத்துடன் இப்பேரணியில் கலந்து கொண்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும், ஊடக ஒத்துழைப்பை வழங்கிய ஊடகவியலாளர்களுக்கும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.






Read More
avathani Media Network

ஜனாதிபதி அவர்கள் காத்தான்குடியில் நல்லாட்சியின் செயற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் வேண்டுகோல் விடுத்துள்ளார்.


அவரது வேண்டுகோலில் மேலும் தெரிவிக்கையில் கடந்த பல வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த ஊழல் மோசடி மற்றும் கொலை கொள்ளை ஆட்கடத்தல் அரசியல் பழிவாங்கள் போதைப்பொருள்களுடன் தொடர்பு போன்ற இன்னும் பல விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மக்கள் ஒன்றுபட்டு ஜனவரி 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்குமாறு விடுத்த வேண்டுகோலை ஏற்று மக்கள் முழுமையாக வாக்களித்தனர். அதன் மூலம் ஜனாதிபதி அவர்கள் வெற்றி பெற்று நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தினீர்கள் நாட்டில் நல்லாட்சியை மலர வேண்டும் என்பதில் மிகவும் அர்ப்பனிப்போடு செயற்பட்வர்களில் காத்தான்குடி மக்களின் பங்களிப்பு மிகக்காத்திரமானது என்பதை ஜனாதிபதி அவர்கள் மறந்திருக்க முடியாது

அவ்வாறு பல்வேறு கழுத்தறுப்பு குழிபறிப்புகளுக்கு மத்தியில் போராடிப் பெற்றெடுத்த நல்லாட்சியை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கு முன்னால் ஜனாதிபதி மைந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பாரிய தடைகளையும் இடையூறுகளையும் சதிகளையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்த போது தன்னிடம் மக்களால் ஓப்படைக்கப்பட்ட நல்லாட்சியை பாதுகாத்து மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு உன்னதமான நோக்கோடு உடனடியாக பாரளமன்றத்தை களைத்து மீண்டும் எதிர்வரும் புதிய பாராளமன்றத்திற்கு ஊழல் மோசடி போதைப்பொருள்களோடு தொடர்பு இல்லாத கன்னியமான மக்கள் நலன் சார்ந்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறும் நல்லாட்சிக்கும் தனது வெற்றிக்கும் வாக்களித்தவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோல் விடுத்தீர்கள். 
அதனை ஏற்று கடந்த காலத்தில் நல்லாட்சியை விரும்பாத ஊழல் மோசடிக்காரர்களை நடந்து முடிந்த பாராளமன்றத்தேர்தலில் தேற்கடித்து நல்லாட்சிக்கும் உங்களது வெற்றிக்கும் பங்களிப்புச் செய்தவர்களை வெற்றிபெறச் செய்தோம் ஆனால் நீங்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்வர்களை மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் காத்தான்குடிக்கு நியமித்து கடந்த காலத்தில் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களின் பள்ளிவாயல்களையும் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் தாக்கி உடமைகளை சேதப்படுத்தி கர்ப்பினித்தாயையும் இன்னும் பலரையும் உயிர் ஆபத்துக்குள்ளாகும் வரையும் தாக்குதல் நடாத்தி அவர்கள் மூலம் நல்லாட்சியை மீண்டும் குழி தோன்றிப் புதைத்து விட்டீர்கள் இதனை ஜனநாயகத்தை விரும்பும் எவரும் அங்கிகரிக்க மாட்டார்கள் 

இது புதிய பாராளமன்ற அமர்வுக்கு முன் நல்லாட்சிக்கு அடிக்கப்பட்ட ஒரு சாவுமணியாகும் நல்லாட்சியே தனது இலக்கு என அயராது உழைக்கும்  உங்களது கட்சியில் நீங்கள் வழங்கிய தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவமே காத்தான்குடியில் காடைத்தனம் புறிவதற்கு வழிகோலியுள்ளது அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றாக வேண்டும் இச்செயற்பாட்டினை எந்தவொரு ஜனநாயகவாதிகளாளும் ஏற்றுக்கொள்ள முடியாது 
உங்களது கட்சி பாராளமன்ற பிரதிநிதியை நல்லாட்சியின் செயற்பாட்டிக்குள் கொண்டுவர முடியாது போனால் எவ்வாறு ஏனைய கட்சி பாராளமன்ற பிரதிநிதிகளிடம் நல்லாட்சிக்கான ஆதரவினை பெற்றுக் கொள்ள முடியும் எனவே காத்தான்குடியில் நல்லாட்சியை நிலைநாட்ட ஏனைய ஜனநாயகத்தை விரும்பும் அரசியற் கட்சிகளும் தனது கட்சியின் செயற்பாட்டை நல்லாட்சியை நோக்கியதாக செயற்படுத்த ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோல் விடுத்தார்      
  

Read More
avathani Media Network

குறுக்கு வழியூடாக தேசியப்பட்டியல் பெற்றவர்கள் இன்று வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளதை கண்டிக்கின்றோம் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

(அபூ அல்தாப்)

குறுக்கு வழியூடாக தேசியப்பட்டியல் பெற்றவர்கள் இன்று வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளதை கண்டிக்கின்றோம் இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் 
கடந்த பொதுத் தேர்தலின்போது நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாம் பல தியாகங்கள் அர்ப்பணிப்புகள் ஏன் உயிரைக் கூட பணயம் வைத்து தேர்தலில் போட்டியிட்டோம் ஆனாலின்று குறுக்கு வழியூடாக தேசியப்பட்டடியல் பெற்ற முன்னாள் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தனக்கு தேசியப்பட்டியல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடியாட்களைக் கொண்டு அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துள்ளார்

காத்தான்குடி பாலமுனை ரிதிதென்ன காங்கேயனோடை போன்ற கிராமங்களுக்குள் சென்று மக்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர் நல்லாட்சியை விரும்பாதவர்கள் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தேசியப்பட்டியல வழங்கப்பட்டமையிட்டு மனவேதனையடைகின்றோம் எனவே அவருக்கு வழங்கப்பட்டதை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மீண்டும் வாபஸ் பெறவேண்டும்

சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மதஸ்தாபனங்கள் மற்றும் வரத்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. பட்டாசுகளைக் கொழுத்தி வீடுகளுக்குள் போட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளோம் அவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்

Read More
avathani Media Network

காத்தான்குடி -வன்முறை தொடர்பிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும்- முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டதாக  காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்டிடம் கேட்ட போது வன்முறை தொடர்பிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.


Read More
avathani Media Network

வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களினால் சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.




Read More
avathani Media Network

வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் பொலிசாருக்கு உத்தரவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை யாராக இருந்தாலும் சரி கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிசாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில்  நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி களிப்பின் போது இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.


Read More
avathani Media Network

காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா பள்ளிவாயல் தாக்கப்படவில்லை –பள்ளிவாயல் தலைவர் ரவூப்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடியில் வன்முறை இடம்பெற்ற இடங்களை சுட்டிக்காட்டும் போது தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலும் ,தாருல் அதர் அத்த அவிய்யா பள்ளிவாயலும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார் இது தொடர்பில் தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.ரவூபிடம் கேட்ட போது அவர் தெரிவிக்கையில் இந்த சம்பவத்தில் எமது பள்ளிவாயலான தாருல் அதர் அத்த அவிய்யா தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவோ முற்றுகையிடப்படவோ இல்லை என தெரிவித்தார் அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

Read More
avathani Media Network

முன்னாள் எம்.பி. ஹிஸ்புல்லாஹ்வை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் இருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் வேண்டுகோள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 21 வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நேற்று 21 வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

Read More
avathani Media Network

காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கை - ஒலி வடிவம்

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் கிடைத்ததைத் தொடர்ந்து காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கை

இங்கே கிளிக் பண்ணவும்.

https://soundcloud.com/avathani-media/ptt-20150822-wa0002




Read More
avathani Media Network

மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்

-அபூ அல்தாப்-

இன்று ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் அறிவிக்கப்பட்டதையடுத்து வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் தேசிய தௌகீத் ஜமாஅத் அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கியதையடுத்து சில இடங்களில் இரு சாராருக்குமிடையில் கைகலப்பும் இடம்பெற்றது இதன்போது பலர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று அங்கு காயமுற்றவர்களை பார்வையிட்டதுடன் தேசிய தௌகீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடினார் 
இது தொடர்பான படங்களை காணலாம்









Read More