Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 1, 2015

avathani Media Network

8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பமானதோடு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் இதன்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார். 





















Read More
avathani Media Network

17 வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா-10.09.2015



7 வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா எதிர் வரும் 10.09.2015 அன்று மாலை 3.00 மணிக்கு இலங்கை மன்ற கல்லூரி கேட்போர்க் கூடத்தில் நடைபெறும்.

 இவ்விழாவில் கலாநிதி ஹரிஸ்சந்திர விஜயதுங்க சிறப்பு அதிதியாக் கலந்துக் கொள்வார்.

சிங்களத்திலான சிறப்புரையை பேராசிரியர் தயா அமரசேகர அவர்களும், தமிழிலான சிறப்புரையை தில்லை நடராஜா அவர்களும் ஆற்றுவார்கள்.

இவ்விழாவில்  2014 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கள, தமிழ,; ஆங்கில, மொழிகளில் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை , சிறுவர் இலக்கியம், இளைஞர் இலக்கியம்,  சிங்கள-தமிழ் மொழிபெயர்ப்பு  மற்று ம் வெளிவந்த நூல்களில்  முதல் சிறந்த நூல், போன்ற வகையான நூல்களில் தெரிவுச் செய்யப்ட்ட நூல்களின் விபரம்;, அங்கு அறிவிக்கப்பட்டு பணப் பரிசில்களும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டும்.

மேலும் மும்மொழிகளில் நீண்ட காலமாக இலக்கியப் பணி ஆற்றிய மூவருக்கு கொடகே வாழ்நாள்; சாகித்திய விருதுகளும் வழங்கப்படும். அந்த வரிசையில் இம்முறையிலான கொடகே தேசிய சாகித்திய விழாவில் சிங்களம், தமிழ,; ஆங்கிலம் ஆகிய  மொழிகள் மூலம் நீண்ட காலமாக இலக்கியப் பணி ஆற்றிய முறையே திரு சந்ததஸ் கோபர ஹேவா அவர்களுக்கும், திரு நந்தினி சேவியர் அவர்களுக்கும், திருமதி விஜிதா பெர்ணான்டோ ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.





Read More
avathani Media Network

அவதானி நிறுவனத்தின் மற்றுமொரு சமூக நல வேலைத்திட்டம்

அவதானி மீடியா நெட்;வேர்க் நிறுவனத்தினால் மேற் கொள்ளப்பட்டு வரும் சமூக நல வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக வாய்பேச முடியாத பாடசாலை மாணவி ஒருவருக்கு அண்மையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அவதானி நிறுவனத்தின் தலைவர் மதியன்பன் மஜீத் அவர்கள் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.   

Read More
avathani Media Network

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் உங்களது கடமையும்- அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கு பகிரங்க மடல்










AM.பர்ஸாத்,
C 13/4, தக்வா வீதி,
புதிய காத்தான்குடி-03.
31.08.2015


தலைவர்/ செயலாளர்,
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா,

அன்புடையீர்,          
அஸ்ஸலாமு அலைக்கும்.


கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றும் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டும் பாராளுமன்றம் செல்லவுள்ள முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிகளைப் பாராட்டி> கௌரவிக்கும் நிகழ்வொன்றினை தங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றமை தொடர்பில் பொது மக்களாகிய நாம் ஒரு சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இம்மடலினை எழுதுகின்றோம்.

எமது சமூகம் சார் பிரதிநிதிகள் நாடாளுமன்றிக்கு தேர்வு செய்யப்பட்டமையை பாராட்டி கௌரவித்தல் என்பது உண்மையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமெனினும்> இந்நாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவ நிறுவனம் என்ற ரீதியிலும் மக்களுக்கு வகை கூறும் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையிலும் அ.இ. ஜம்மிய்யத்துல் உலமாவிற்கு  பாராட்டு விழாவிற்கு முந்தியதான சில கடமைப்பாடுகள் இருப்பது தொடர்பில் நாம் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகி> முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக அங்கு செல்லவுள்ள 21 உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் இதற்கு முன்பாகவும் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தவர்களேயாகும். இவர்கள் கடந்த காலங்களில் மக்களின் ஆணையைப்பெற்று> பதவிக் கதிரைகளுக்குச்சென்ற பின்னர் எமது சமூகத்தின் உரிமைகள்> இருப்பு தொடர்பில் எவ்வாறு சுயநலமாக நடந்து கொண்டார்கள் என்பதும்> எமக்காக இவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு தடவையேனும் வாய்திறந்து குரல் கொடுக்கவில்லை என்பதும் நாம் அறிந்த விடயமாகும்.

ஆனால் இவர்கள் அதற்காக வருந்தியதாகவோ  மக்களிடம் மன்னிப்புக் கோரியதாகவோ தெரியவில்லை. அத்துடன் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ளவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கவோ இது வரை முயற்சித்ததாகவும் தெரியவில்லை.

எனவே, நிங்கள் அவர்களை அழைத்து கௌரவித்து பாராட்டுதற்கு முன்பாக செய்ய வேண்டிய பொறுப்பு மிக்க பணி ஒன்று உங்களுக்கு இருப்பதாக நாம் கருதுகின்றோம். அதுதான் அவர்களின் கடந்தகால தவறுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டி.  அவர்களின் பிழைகளைக் கண்டித்து அவர்களை எதிர்வரும் பாராளுமன்றத்திலேனும் பொறுப்புடன் செயற்பட வழிகாட்ட வேண்டியது ஆகும்.

காரணம், இத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மலர்ந்திருக்கின்ற இந்த நல்லாட்சி அரசிலாவது. இவர்கள் எமது சமூகத்தின் அபிலாசைகள். தேவைப்பாடுகள் அடிப்படை உரிமைப்பிரச்சனைகள் தொடர்பில் அரசுடன்  பேரம் பேசல்களில் ஈடுபடாது. மீண்டும் தமக்கான அமைச்சுப் பதவிகள் அதிகாரங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்களிலும் திறை மறைவுப் பேச்சு வார்த்தைகளிலும்  ஈடுபட்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. தமிழ் சமூகம் சார் அரசியல் தலைமைகள் ஜனாதிபதியினை சம்பூருக்கே அழைத்து. மீட்டெடுக்கப்பட்ட  காணிப்பத்திரங்களை அவரின் கையினாலேயே   பொது மக்களுக்கு வழங்கி வைக்கின்ற அளவிற்கு. ஜனாதிபதியுடனான பேரம் பேசல்களை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி செயற்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்ற பொழுது. எமது அரசியல் தலைமைகளின் சுயநலமாக போக்கு பெரும் ஏமாற்றத்தையே எமக்குத் தருகின்றது.

அத்தோடு மட்டுமல்லாது. பாராளுமன்றத்திற்கான பதவிகள் வழங்கப்பட்ட மறு நிமிடமே எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் மேற்கொள்கின்ற மற்றுமொரு சுயநலமான விடயம்தான். தனது அதிகாரத்தின் கீழ் வருகின்ற அனைத்து பதவிகளையும். தொழில் வாய்ப்புகளையும் தனக்கு மிக வேண்டப்பட்டவர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் தகுதி தராதரமின்றி பங்கீடு செய்வதாகும். கடந்த காலங்களில் இச்செயற்பாடானது. எமது சமூகம் குறித்த மோசமான ஒரு மதிப்பீட்டினை மாற்று மத சகோதரர்களின்  மத்தியில் ஏற்படுத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக காணப்பட்டு வந்தது.

எனவே தகுதியும் தரமும் இருக்கின்ற நபர்களுக்கு இவ்வாறான பதவிகளையும் பொறுப்புகளையும் பொது நோக்கோடு இன மத பேதமின்றி வழங்குகின்ற வஃதாவினை நீங்கள் இவர்களிடமிருந்து பெற்றெடுக்க வேண்டும்.

இம்முறை பொதுத்தேர்தலானது. மிக குறைந்தளவிலான வன்முறைகள் பதிவு செய்யப்பட்ட தேர்தலாக மாறி. அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஆயினும் எமது முஸ்லிம் பிரதேசங்களிலேயே உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுகின்ற அளவிற்கு. தேர்தல் வன்முறைகள் பதிவு செய்யப்பட்டு எமது சமூகத்தின் மரியாதை கேள்விக்குட்படுத்தப்பட்டது.

குறிப்பாக காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தலுக்குப் பிந்தியதான வன்முறைச் சம்பவங்கள். பள்ளிவாயிலில் வணக்கங்களில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது   மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் போன்றன பிற மத சகோதரர்களின் கண்டனங்களுக்கும் உட்படுகின்ற அளவிற்கு நிலமையை மோசமாக்கிச் சென்றது.

எனவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுக்கு தூபமிட்ட அரசியல் வாதிகளும்கூட  உங்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தர இருக்கின்றனர். எனவே இப்படியானவர்களின் பிழையான அரசியல் கலாச்சாரத்தினை மக்களுக்கு தோலுரித்துக்காட்ட வேண்டிய சமூகப்பொறுப்பு வாய்ந்த நிறுவனமான நீங்கள். இவர்களை அழைத்து பாராட்டு விழா நடத்துவதென்பது. இவ்வாறான காடைத்தன அரசியலை ஊக்குவிப்பதற்கு சமமானதாகும்.

எனவே இவ்வாறான அரசியல் தலைமைகளை வெறுமனே அழைத்து. அவர்களின் குறைகளையும் தவறுகளையும் மறைத்துக் கொண்டு அவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற முகஸ்துதி அரசியல் என்பது அள்ளாஹ்வின் பார்வையில் மிக பாவமான ஒன்றாகும்.

இவ்வாறு ஐந்து வருடங்களுக்கொரு முறை எமது சமூகத்தலைமைகளை அழைத்து. பாராட்டுவதற்குப்பதிலாக இந்த ஐந்து வருடங்களுக்கும் இவர்களை சரியாக வழி நடாத்துகின்ற இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற. பிழைகளை கண்டிக்கின்ற பாரிய பொறுப்பு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவிற்கு இருக்கின்றது.

எதிர்காலத்தில் அவ்வாறான வழிகாட்டல்களைப் பின்பற்றி மார்க்க விழுமியங்களையும் வறையறைகளையும் பேணி சமூக நல அரசியலை மேற்கொள்கின்ற தலைமைத்துவங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி. அவர்களை மக்கள் மன்றங்களில் நீங்கள் பாராட்டி கௌரவிப்பீர்களாக இருந்தால். நிச்சயமாக அதுதான் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கைமாறு செய்வதாகவும். அள்ளாஹ்விடத்தில் ஏற்றம் மிக்கதாகவும் அமைய முடியும்.

எனவே, இதன் பின்னராவது ஐந்து வருடங்களுக்கொரு முறை இவர்களை பத்தோடு பதினோராவது அமைப்பாக இருந்து. பாராட்டி கௌரவிப்பதை விடுத்து குறைந்தது மூன்று மாதங்களுக்கொரு முறையேனும் எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை அழைத்து. அவர்களின் செயற்பாடுகளை மீள்வாசிப்பிற்குட்படுத்தி. அவர்களின் எதிர்கால திட்டங்கள் மீதான விவாதங்களை ஏற்பாடு செய்து. அவர்களை முறையாக வழி நடாத்த தாங்கள் முன்வர வேண்டுமென வினயமாக நாம் வேண்டிக்கொள்கிறோம்.

அதுதான் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உண்மையிலேயே ஒரு தலைமைத்துவ நிறுவனமாக இருந்து தாங்கள் ஆற்ற வேண்டிய மிகப்பாரிய பணி என்பதினை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். அள்ளாஹ் எம் அனைவரின் பணிகளையும் சீர்படுத்தித்தருவானாக.

நன்றி
இவ்வண்ணம்

..................................


AM.பர்ஸாத் (0772659528)

பிரதிகள்

1.   தலைமைத்துவசபை, தேசிய சூறாசபை,
2.   முஸ்லிம் கவுன்சில்,

Read More
avathani Media Network

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 16 சிறிய குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பு, சிறுதானிய விதைகள் விநியோகம் என்பன 157.6 மில்லியன் செலவில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் புனரமைக்கப்படவுள்ளன.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஐந்தாண்டு அபிவிருத்தித்திட்டத்தில் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டத்தின் கீழேயே இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று 31 திங்கட்கிழமை நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
 
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி ரோகினி சிங்கராஜா, ஆலோசகரும் விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான கலாநிதிடி.பி.ரி.விஜயரெட்ண, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தின் போது, உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
 
உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இந்த வருடத்தில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சோதயன் குளம், அத்திக்காட்டுக் குளம், இலுப்பைக் குளம், குறுக்கானமடுக் குளம், நவுண்டல்யமடுக் குளம், தரணிக்குளம், தரவைக்குளம், மியான்கல் குளம், கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிரிமிச்சையோடைக் குளம், ஆனை கட்ட காடு குளம் அகிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
 
அதே நேரம், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியான்டமுன்மாரிக்குளம், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பழுகாமம் பிரதான வாய்க்கால், புழுக்குணாவை அணைக்கட்டு வாய்க்கால், கடுக்காமுனைக் குளம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மகிழூர் முனைக் குளம் மற்றும் வாய்க்கால், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடைச்சகல் குளம் ஆகியனவும் புனரமைக்கப்படவுள்ளன.
 
இந்தக் கூட்டத்தில், பிரதேச செயலாளர்கள், விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், உதவிப்பிரதேச செயலாளர்ளும் பங்கு கொண்டனர்.
 







Read More
avathani Media Network

தமிழ் மொழி கற்க 192 சிங்­கள பொலிஸார் இணைவு

இன­வி­வ­கார நல்­லி­ணக்க அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்­கள ஏற்­பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்­க­ளத்­தினால் நடத்­தப்­படும் தமிழ் மொழி டிப்­ளோமா கற்கை நெறியை மேற்­கொள்ள 192 சிங்­கள பொலிஸார் இன்று மட்­டக்­க­ளப்­பில இணைந்து கொண்­டனர்.
மட்­டக்­க­ளப்பு கல்­லடி பொலிஸ் பயிற்சி கல்­லூ­ரியில் இப்­ப­யிற்சி நெறிகள் நேற்று பயிற்சி பரி­சோ­தகர் ஐ.பி.பேரின்­ப­ராசா தலை­மையில் ஆரம்­ப­மா­னது.5 மாதங்­களை கொண்ட இப்­ப­யிற்சி நெறி 11 ஆவது பயிற்சி முகா­மாகும்.இதற்கு முன்னர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 1400 சிங்­கள பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் தமிழ் மொழி டிப்­ளோமா கற்கை நெறி­யினை பூர்த்தி செய்து வெளி­யேறியுள்­ளனர்.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் மட்­டக்­க­ளப்பு பிராந்­திய பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே. திஸ்­ஸா­நா­யக்க தமிழ் கற்கை நெறிக்­குப்­பொ­றுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ். ஜின­தாச உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.
மாவட்­டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.
Read More
avathani Media Network

பூர்வீக இடங்களில் முஸ்லிம்கள் குடியேறுங்கள்: டெனிஸ்வரன்

மன்னார் மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மன்னாரில் உள்ள தமது பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் என வட மாகாண கிராமிய அமைச்சர் பா. டெனிஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தளம் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கலூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அங்கு சந்தித்து கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்திலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை விரைவாக மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் இனம் என்பதை கடந்து நாம் அனைவரும் வடக்கு மக்கள் என்னும் ஓர் பார்வையிலே சேவையாற்றுகின்றேன். வெறுமனே பேச்சில் மாத்திரமல்ல இன ஒற்றுமை என்பது அது நமது செயல்ப்பாட்டிலும் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.


Read More