Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 5, 2015

avathani Media Network

இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலும் தற்போதைய அரசியல் சூழலும் எனும் தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம்


அன்புப் பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.


இடம் பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலும் தற்போதைய அரசியல் சூழலும் எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை மாலை இன்று 7.00 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதி குர்ஆன் சதுக்கத்தில் காத்தான்குடி முன்னால் நகரசபைத் தவிசாளர் அல்ஹாஜ் SHM அஸ்பர் JP அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் இந்நாள் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான தாஜுல் மில்லத் கௌரவ அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

அத்தோடு இன்னும் சில முக்கியஸ்தர்களும் இந்திகழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றார்கள். எனவே இம்மாபெரும் கூட்டத்தில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழு சார்பாக அன்போடு அழைக்கின்றோம்.
Read More
avathani Media Network

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வராத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் சபையில் பிரசன்னமாகாத உறுப்பினர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படும். அவ்வாறு பிரசன்னமாகாத உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமர் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்கள் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கும், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரிடமும் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்தல் மிகவும் பொருத்தமானது. நாட்டை முன்னோக்கி நகர்த்த, நாடாளுமன்றை வலுவானதாக மாற்ற வேண்டும். அதற்கு உறுப்பினர்கள் அமர்வுகளில் பிரசன்னமாவது மிகவும் அவசியமானது என பிரதமர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Read More
avathani Media Network

பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள இராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர்கள் 10 பேருக்கும் பிரதி அமைச்சர்கள் 38 பேருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையினால் இவ் அமைச்சர்கள் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்க தகவல் வட்டாரங்களுக்கமை எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்,

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில்,

சுஜீவ சேனசிங்க
ஹர்ஷ டி சில்வா
ருவண் விஜேவர்தன
ரஞ்சன் ராமநாயக்க
அஜித் பீ பெரேரா
மொஹமட் ஹலீம்
வசந்த சேனாநாயக்க
வசந்த அலுவிஹார
இரான் விக்ரமரத்ன
திலிப் வெதஆராச்சி
பாலித தேவரபெரும
ரவி சமரவீர
வடிவேல் சுரேஷ்
புத்திக்க பத்திரன
நிரோஷன் பெரேரா
ராதா கிருஷ்ணன்
தொண்டமான்
ஜே.சீ.அலவத்துவல
அஷோக் அபேசிங்க
அமீர் அலி
சம்பக்கா பிரேமதாஸ
துனேஷ் கன்கந்த
அனோமா கமகே
மலிக் சமரவிக்ரம
ஜயம்பதி விக்ரமரத்ன
மொஹமட் நவாவி

ஐக்கிய முக்கள் சுதந்திர முன்னணி சார்பில்

மொஹான் லால்
கெஹேலிய ரம்புக்வெல்ல
சிறிபால கம்லத்
தேனுக விதானகமகே
சந்திரசிறி கஜதீர
பிரியங்கர ஜயரத்ன
ஏ.எச்.எம்.பவுஸி
விஜயமுனி சொய்சா
லக்ஷ்மன் யாப்பா
பைஸர் முஸ்தப்பா
எம்.ஹிஸ்புல்லா

Source - tamilwin.com




Read More
avathani Media Network

பெளஸி, டிலான், அமுனுகம, விஜிதமுனி: அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை!

புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் விஜித் விஜித முனித சொய்சா ஆகி யோருக்கு நேற்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.
புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி தலைமையில் பதவி ஏற்றது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 11 எம்.பி.களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களாக மேற்படி ஐந்து எம்.பிகளுக்கும் அமைச் சுப் பதவிகள் வழங்கப்படாதது குறிப் பிடத்தக்கது.
இது தொடர்பாக வினவியதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, அமைச்சு நியமனம் தொடர்பாக ஜனாதிபதி தன்னுடன் பேசியதாகவும் தேசியப் பட்டியலினூடாக தெரிவு செய் யப்பட்ட அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்க முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான பிரேர ணைக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிகள் குறித்தும் கவனம் செலுத்தியே அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக அறிய வருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்விய டைந்த 7 எம்.பிக்கள் தேசியப் பட்டிய லினூடாக தெரிவானதோடு அவர்களில் எஸ்.பி. திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை தேசிய அரசாங்கத்தில் இணைந்த இ.தொ.க. செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி. செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
Read More