Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 9, 2015

avathani Media Network

மட்டு.மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தகாலங்களைப் போன்று குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.கடந்த இருதினங்களில் இரண்டு படுகொலைகள் உட்பட நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாவடிவேம்பில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதுடன் அன்று மாலை திராய்மடுவில் பாழ் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை வவுணதீவில் 8 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதுடன் 30 வயது நபரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இNவேளை களுவாஞ்சிக்குடியில் மிளகாய்த்தூளை வீசி பெண்ணின் கழுத்திலிருந்த 6.5 பவுண் தங்கச்சங்கிலியை அபகரித்துச்சென்றுள்ளனர்.
ஏறாவூரில் சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.மட்டக்களப்பு நகரில் வீடுடைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைககளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-kathiravan
Read More
avathani Media Network

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனை-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நல்லாசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை இன்று 9 புதன்கிழமை இடம்பெற்றது.

இதன் போது மேற்படி விஷேட துஆப் பிரார்த்தனையை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) நடாத்தி வைத்தார்.

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட துஆப் பிரார்த்தனையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் , ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










Read More
avathani Media Network

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றி (பத்கன் முபீனா) மகத்தான வெற்றியாகும் காத்தான்குடி காழிநீதி பதி மௌலவி எஸ்.எம்.அலியார் தெரிவிப்பு-

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

புணர்வாழ்வு இராஜாங்;க அமைச்சராக இன்று சத்தியப்பிரமானம் செய்து  கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து காத்தான்குடி மெத்தை பெரிய ஜம்ஆ பள்ளிலாயலில் இன்று (09.09.2015) புதன்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஸலாத்துல் ஷூக்குர் தொழகை மற்றும் துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சத்தியப்பிரமானம் தொடர்பாக மௌலவி அல்ஹாபிழ் எம்.சாஜஹான (பலாஹி) அவர்களினால் விசேட உரை நிகழ்தப்பட்டதுடன்  காத்தான்குடி காழிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி) அவர்களினால் விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அப்பிழ்பழம், தோடம்பழம், ஈத்தம் பழம் என்பன வழங்கி ஆதரலாளர்கள் இறை இல்லத்தில் இபாதத்தின் மூலம் தங்கள் மகிழ்சிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி சம்மேளன பிரதி தலைவர் அப்துல் ஜவாத், அஷ்ஷெய்ஹ் மும்தாஸ் (மதனி) காத்தான்குடி முன்னாள் நகர முதல்வர் பிரதி நகர முதல்வர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட். கல்வி மான்கள், உலமாக்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டதினை காணக் கூடியதாக இருந்தது

தனக்கு கிடைத்த அமைச்சு பதவி மற்றும் பள்ளிவாயல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு  புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் விசேட செய்தி தொலை பேசி மூலமாக தெரிவிக்கப்பட்டது. 

















Read More
avathani Media Network

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு இராஜாங்க அமைச்சு. காத்தான்குடியில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்.

(எஸ்.எம்.எம். முஸ்தபா)

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு இன்று 09.09.2015 ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டதையொட்டி காத்தான்குடியில் முஹைதீன் மெத்தைபெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் அஸர் தொழுகையின் பின் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் சிரேஷ;ட உபதலைவர் மௌலவி எச்.எம். ஸாஜஹான் பலாஹி தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது. மௌலவி ஸாஜஹான் பலாஹி ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு அல்லாஹ் கொடுத்த மாபெரும் அருட்கொடையாகும். இதனை நாம் நன்றியுணர்வோடு அல்லாஹ்வுக்கு ஸூக்ர் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். 

இதில் எமதூரில் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியவர்கள் இதன் முலம் பயன்பெறும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார். 

இவ்வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அஷ;nஷய்ஹ் மும்தாஸ் மதனியின் தொலைபேசி ஊடாக ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து அமைதியான முறையில் மகிழ்ச்சியை அனுஷ;டிக்குமாறு அறிவுரை கூறினார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் அவர்களுடன் சார்ந்தவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. விசேட துஆ பிரார்த்தனையை மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி நிகழ்த்தினார்கள்.

இதில் சம்மேளன பிரதித் தலைவர் ஏ.எல். அப்துல் ஜவாத் முன்னாள் தவிசாளர் எஸ்எச்.எம். அஸ்பர் மற்றும் அமீன் மௌலவி ஹாலித் ஹஸன் மௌலவி உட்பட உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

ஆதரவாளர்களினால் இவ்வைபதில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களுக்கு அப்பிள் தோடம் பேரீத்தம் பழங்கள் இனிப்புப் பண்டங்கள் என்பன வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுவர்கள் வீதியில் பயணித்தவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கினர்.









Read More
avathani Media Network

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இனிப்பு பண்டங்களும்,குடிபானங்களும் வழங்கி கொண்டாட்டம்.படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டதையடுத்து அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று 9 புதன்கிழமை ஈடுபட்டனர்.

இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி முதலாம் குறிச்சி அபூ பக்கர் சித்தீக் வீதியில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வீதியால் சென்ற பொது மக்களுக்கு இனிப்பு பண்டங்களும்,குடிபானங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு காத்தான்குடியில் சில இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் பாட்டாசுகள் கொழுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




























Read More