Featured Home (TOP)

Recent Comments

Monday, September 14, 2015

avathani Media Network

அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரழி) ஆட்சிபோன்று அமையவேண்டும் – மஹிந்த

தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியினையிட்டு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
சகல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்ப்பது ஜனநாயம், இந்த ஜனநாயகத்தை எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த ஜனநாயகத்தைப் பற்றி இஸ்லாம் மதம் குர்ஆன், ஹதீஸ் மூலம் மிக ஆனித்தரமாக வலியுறுத்தி கூறியுள்ளது. அதனை நாம் தற்போது எமது நாட்டில் நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை எல்லோரும் பெரும் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தொடர்ச்சியாக நாம் ஜனநாயக வழிமுறைகளில் ஒற்றுமையாக அடம்பன் கொடிபோல் செயற்படவேண்டும். நாம் சிங்கள மொழியில் கேட்டாலும், அரபு மொழியில் கேட்டாலும், ஆங்கில மொழியில் கேட்டாலும், தமிழ் மொழியில் கேட்டாலும் கேட்கின்ற விடயம் ஒன்றுதான் அதுதான் ஜனநாயகம் அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய ஆட்சியின் கலிபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான் , அலி (ரழி) ஆகியோர்களின் காலங்களில் எவ்வாறு ஜகநாயக ரீதியில் ஆட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்ததோ, அதேபோன்று அவர்கள் செய்த அந்த ஆட்சியை நாம் மிகத் தெளிவாக விளங்கி இன மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)
– அபு அலா –
Source - dailyceylon

Read More
avathani Media Network

4 மணி நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து சட்டத்தை மீறிய 152 பேருக்கு எதிராக போக்குவரத்து பொலிசார் சட்ட நடவடிக்கை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் ,வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை அமுல்படுத்தும் நோக்கிலும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுவுகளிலும் கடந்த 11 வெள்ளிக்கிழமை வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வீதியில் நடத்திய சோதனையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணிந்து செல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 141 பேருக்கும் சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகனக் காப்புறுதி இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 10 பேருக்கும் போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 1 ஒருவருக்கும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார் ஜெயலால் தெரிவித்தார்.

மேற்படி வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறிய இவர்கள் 14 தினங்களுக்குள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு சென்று அவர்களுக்கான தண்டப்பண பற்றுச் சீட்டை பெற்று அதை செலுத்த வேண்டும். இதற்கு தவறுபவர்கள் காத்தான்கடி பொலிசாரினால் கூறப்படுகின்ற தினத்திற்கு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் மேலும் தெரிவித்தார்.

இவ் வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து போக்குவரத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

மேற்படி வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணித்து செல்லாமல் மோட்டார் சைக்கில் செலுத்திய 141 பேர்களில் அதிகமானோர் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழுகைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Read More
avathani Media Network

கொட்டதெனியாவ சிறுமி கடும் பாலியல் வல்லுறவுக்கு பின்னரே கொலை!

கொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
துணித் துண்டு ஒன்றினால் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பொலிஸார் அதிபர் விசாரணை குழுக்களை அமைத்துள்ளார்.
Read More
avathani Media Network

பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது - முஸ்லிம் உலமா கட்சி ...


இறுதி யுத்த குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு

இடமளிக்க முடியாது என்ற பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்து
வரவேற்கத்தக்கது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.



இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் யுத்தம் என்பது அதன் இறுதிக்கட்டம் மட்டுமல்ல, மாறாக 80
களிலிருந்தே பார்க்க வேண்டும் . போர்க்குற்றம் என்று பார்த்தால் இலங்கை
இராணுவம் மட்டுமல்ல தமிழ் போராளி குழுக்களும் பாரிய குற்றங்களை
செய்துள்ளன. இன்று சர்வதேச விசாரணைய கோரும் புலி ஆதரவாளர்கள், ஈ பி
ஆர் எல் எஃப் டெலொ போன்ற இயக்கங்கள் முஸ்லிம் மக்களுக்கெதிராக பல
கொலைக்குற்றங்களை இழைத்துள்ளன. இதற்காக இத்தகைய தமிழ்
கட்சித்தலைவர்களையும் சர்வதேசம் விசாரிக்க வேண்டும் என கூறினால் அதனை
ஏற்றுக்கொள்வார்களா என்று நாம் கேட்கிறோம்.



யுத்தக்குற்றம் என்பது இலங்கை இராணுவம் மட்டும்தான் என்பது போலும் ,
தமிழ் இராணுவம் நல்ல பிள்ளைகள் போன்று கருத்துச்சொல்வது நியாயமாகாது.
உண்மையில் தமிழ் இராணுவமே ஈவிரக்கமற்ற படுகொலைகளை செய்துள்ளது. 89ம்
ஆண்டு சரணடைந்த முஸ்லிம் பொலிசாரின் கைகளைக்கட்டி விட்டு இன்றைய ஐ.எஸ்
தீவிரவாதிகளை விட அந்த முஸ்லிம்களை கொன்றதை அந்த இராணுவத்தை உருவாக்கிய
டெலோவும், ஈபி ஆர் எல் எப்பும் சர்வதேச நீதி மன்றத்தில்
பதிலளிக்க முன் வருமா?
ஆகவே யுத்த காலத்தில் அனைத்து தரப்புமே யுத்த மீறல் செய்துள்ளன.



அவற்றை விசாரிக்கும் தார்மீக உரிமையும் சர்வதேசத்துக்கு இல்லை. ஆகவே
இலங்கைப்பிரச்சினைகளை இலங்கையிலேயே விசாரிக்க வேண்டும் என்பதே
உலமா கட்சியின் நிலைப்பாடாகும். இதே நிலைப்பாட்டை புதிய பிரதி பாதுகாப்பு
அமைச்சரும் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும் என உலமா கட்சி
தெரிவித்துள்ளது .



(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

துல்ஹஜ் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று..


ஹிஜ்ரி 1436 துல்ஹஜ் மாதத்திற்கான  தலைப்பிறையினை தீர்மானிக்கும் மாநாடு
இன்று 14-09-2015 திங்கள் கிழமை மஹ்ரிப் தொழுகைய தொடர்ந்து கொழும்பு
பெரிய பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா,பெரிய பள்லிவாயல்
நிர்வாகிகள்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள்,
உலமாக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் எப்பாகத்திலேனும் பிறை தென்பட்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி
இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல்  உலமா
பிறை குழு  பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது...
0714817380
0115234044
0112432110
0112434651

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சரும் - அரசியலமைப்பின் 19ம் திருத்தச் சட்டத்தின் படியான அதிகாரங்களும் வேறுபாடுகளும்.

(பல வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது பிரசுரிக்கப்படுகிறது)

இராஜாங்க அமைச்சர் என்பவர் அமைச்சரவை(கபினட்) உறுப்பினர் அல்லாத அமைச்சராவார். அரசியலமைப்பின் உறுப்பரை 44(1) இராஜாங்க அமைச்சரை இவ்வாறே வரையறை செய்கிறது. பிரதியமைச்சர் என்பவர் கபினட் அமைச்சருக்கு உதவியாக/பதிலாக நியமிக்கப்படும் அமைச்சராவார். (உறுப்பரை 45(1)). பிரதியமைச்சர் கபினட் உறுப்பினர் அல்லாத அமைச்சர் என அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. ஆயின் பிரதியமைச்சர் ஒருவர் கபினட் அமைச்சருக்கு பதிலாக அல்லது அவர் இல்லாத போது கபினட் கூட்டங்களில் பங்குபற்ற முடியும். ஆனால் இராஜாங்க அமைச்சருக்கு கபினட் அந்தஸ்து இல்லை.

பிரதியமைச்சர் தனக்கு தனியாக செய்வதெற்கென தனது கபினட் அமைச்சரால் குறித்தொதுக்கப்பட்ட கடமைகள் உட்பட தனது கபினட் அமைச்சரின் சகல விடயங்களிலும் அவருக்கு உதவி செய்ய முடியும் என்பதுடன் கபினட் அமைச்சர் சார்பில் செயற்படவும் முடியும். ஆனால் இராஜாங்க அமைச்சர் தனக்கு தனது கபினட் அமச்சர் மூலம் செய்வதற்கு குறித்தொதுக்கப்பட்ட கடமைகளை மாத்திரமே செய்யமுடியும். (உறுப்பரை 44(5)). கபினட் அமைச்சரின் ஏனைய விடயங்களில் இராஜாங்க அமைச்சர் தலையிட முடியாது.மேலும் என்னென்ன விடயங்கள் இராஜாங்க அமைச்சருக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பதை கபின்ட் அமைச்சரே தீர்மானிப்பார்.
இரண்டு அமைச்சர்களும் என்னென்ன அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி பிரதமரின் ஆலோசணையுன் தீர்மானிப்பார். (உறுப்பரைகள் 45(2), 44(1))
இராஜாங்க அமைச்சர் தான் நிறைவேற்றிய கடமைகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் முழு அமைச்சரவைக்கும்(கபினட்) பொறுப்புக்கூற வேண்டும். (உறுப்பரை 44(4)). ஆனால் பிரதியமைச்சரின் கடமைகளுக்கு கபினட் அமைச்சரே பாராளுமன்றில் பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சரவைக்கு பொறுப்பக்கூறும் கடப்பாடு இல்லை. கபினட் அமைச்சர் இல்லாத போது அவர் சார்பில் பிரதியமைச்சர் பாராளுமன்றில் பொறுப்புக்கூற வேண்டும்.
அமைச்சரவைப் பத்திரங்களை தயாரிக்கும் பொறுப்பு கபினட் அமைச்சருக்கே உரியது. இதில் இராஜாங்க அமைச்சர் தலையிட முடியாது. ஆனால் பிரதியமைச்சர் தனது கபினட் அமைச்சருக்கு அவற்றை தயாரிப்பதில் உதவி செய்ய முடியும்.
ஜனாதிபதி தான் விரும்பும் நேரத்தில் இராஜாங்க அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சை மாற்ற முடியும் (உறுப்புரை 44(3)). பிரதியமைச்சர் தொடர்பில் இவ்வாறான ஏற்பாடு எதுவும் அரசியலமைப்பில் இல்லை.
எனவே இராஜாங்க அமைச்சர் என்பவர் அதிகாரத்திலும் கடமையிலும் பிரதியமைச்சருக்கு அடுத்தபடியான நிலையிலே தான் செயற்படுகிறார்.

Mohame Rizvy யின் முகநூலில் இருந்து...
Read More