Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 24, 2015

avathani Media Network

சேருநுவர முத்துச்சேனைச் சந்தியில் விபத்து இருவர் பலி

சேருநுவர பொலிஸ் பிரிவு முத்துச்சேனைச் சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) மாலை உல்லாசப் பயணிகளுடன் சென்ற பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதியதனாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read More
avathani Media Network

பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.
Read More
avathani Media Network

பஸ் – லொறி விபத்து; 35 பேர் காயம்!

தம்புள்ளை, இனாமலுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 25 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த ஏனையவர்கள் சிறு காயங்கள் என்பதனால் வேறு வாகனங்களில் சென்றுள்ளனர்.
பொலன்னறுவை, சிறிபுர வில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கெண்டிருந்த பஸ் ஒன்று, சீமேந்து ஏற்றிக் கொண்டிருந்த லொறியின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Read More
avathani Media Network

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி ஒரு உறுப்­பி­னரும், காத்­தான்­குடி, ஏறாவூர் நகர், கோற­ளைப்­பற்று மத்தி, கோற­ளைப்­பற்று மேற்கு ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி ஒரு உறுப்­பி­னரும், மண்­முனை மேற்கு, மண்­முனை தென்­மேற்கு, மண்­முனை தென் எருவில் பற்று, மண்­மு­னைப்­பற்று, போர­தீ­வுப்­பற்று ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்கி மற்­று­மொரு உறுப்­பி­ன­ரு­மாக மூன்று பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
இந்த இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்கல் எதிர்­வரும் 28 ஆம் திகதி புதன்­கி­ழமை ஒவ்­வொரு பிரதே செய­ல­கத்­திலும் நடை­பெ­ற­வுள்­ளது.
இந்த தேர்தல் வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்­காக அந்­தந்தப் பிர­தேச செய­லா­ளர்கள் அல்­லது பிர­தேச செய­லா­ள­ரினால் நிய­மிக்­கப்­படும் பிர­தி­நிதி, தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் பிர­தேச இளைஞர் சேவைகள் அதி­காரி, பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அல்­லது அவ­ரினால் நிய­மிக்­கப்­படும் பொலிஸ் அதி­காரி, மற்றும் அந்­தப்­பி­ர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள சமூக சேவை நிறு­வ­ன­மொன்றின் நிறை­வேற்­றுக்­குழு பிர­தி­நிதி மற்றும் பிர­தேச இளைஞர் சம்­மே­ள­னத்­தினால் நிய­மிக்­கப்­படும் தேர்­தலில் போட்­டி­யி­டாத பிர­தி­ நி­தி­ ஆகியோர் நிய­மிக்­கப்படவுள்ளனர்.
இந்த தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா ளர் இளைஞர் கழக நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ராக இருப்­ப­துடன் குறித்த பிர­ தேச செய­லாளர் பிரிவில் நிரந்­த­ர­மாக வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். அத்­து டன் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டா­த­வ­ராக இருத்தல் வேண்டும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சம்மேளன பிரதிநிதி மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் ஆகியோர் இத் தேர்தலில் போட்டியிட முடியாது என இம் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் மேலும் தெரிவித்தார்.
virakesary
Read More
avathani Media Network

'தாபிந்து முத்து' முத்தான வியர்வை வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பில்

(எம்.எச்.எம்.அன்வர்)

திவினெகும திணைக்களத்தின் அணுசரணையில் தாபிந்து முத்து முத்தான வியர்வை வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பில் நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் இன்று (24.10.2015)இடம்பெற்றது
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் திவினெகும உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் இனிப்பு பண்டங்கள் மிக்ஷர் வகைகள் பாய் பெட்டி வகைகள் மரக்கன்று வகைகள் சட்டி பானைகள் நெசவு சாரண் பெட்சீட் வகைகள் பூ வேலைப் பொருட்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன

மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கண்காட்சியினை திறந்து வைத்தார்

மேற்படி நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் மாவட்ட கணக்காளர்  பிரதேச செயலாளர்கள் திவிநெகும முகாமையாளர்கள் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திவிநெகும பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர் 









Read More
avathani Media Network

மஹிந்தவினால் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்ட நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை அம்பலம்! (படங்கள் இணைப்பு)

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார்.
மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.
மாளிகையின் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து ரகசியக் குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஏ.சி. வசதி, தொலைபேசி , இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கமெராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடங்கியிருந்தன.
மாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தமிழ் ஊடக அதிகாரி ஆர்.எப். அஷ்ரப் அலீயும் இந்த ஊடகவியலாளர் குழுவில் ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழ் ஊடகவியலாளராக நிலக்கீழ் அதிசொகுசு மாளிகையை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.







Read More