Featured Home (TOP)

Recent Comments

Saturday, November 7, 2015

avathani Media Network

கடலில் குளிக்கச் சென்ற 15வயது சிறுவனை காணவில்லை-படங்கள்

4-jpg
 (பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை பிரதேசத்திலுள்ள கடலில் குளிக்கச்சென்ற 15 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எட்டு நண்பர்களுடன் இவர் இன்று காலை குறித்த கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளார் எனவும் இவர்களுள் 7 பேர் தப்பிவந்துள்ள நிலையில் ஒருவரை நீர் இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரினால் இழுத்துச் செல்லப்பட்டவர் புதிய காத்தான்குடி-06 கர்பலா வீதியைச் சேர்ந்த  15 வயதுடைய அப்துல் அசீஸ் முஹம்மது சம்சாத் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





Read More
avathani Media Network

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்புரை

இன்ஷா அல்லாஹ் இன்று 8:30 மணிக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உம்ரா செய்வது பற்றிய சட்டதிட்டங்கள் உம்ரா செய்வது பற்றிய வீடியோக் காட்சிகள் போன்றவை திரையில் மக்களுக்கு காண்பிக்கப்படவுள்ளன. அனைத்த சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்குமாரு அன்பாய் அழைக்கிறோம்.
Read More
avathani Media Network

காத்தான்குடி கடலில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டான்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி  நதீயா  கடற்கரை பகுதியில்குளித்துக்கொண்டிருந்த 15 வயதுடைய முகம்மது சம்சாத் என் எனப்படும் சிறுவனே இவ்வாறு கடலலையில் அடித்துச்செல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
இன்று (07) நன்பகள் வேலையில் சுமார் 8 பேர் அலவிலான சிறுவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த போதே குறித்த சிறுவன் கடலலையில் அடித்துச்செல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தேடும் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது காலநிலை மாற்றத்தால் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் கடலில்
நீராடுவதனை தவிர்ப்பது சிறந்ததாகும்.இவ் விடத்தில் பொதுமக்கள் கவணமாக
இருத்தல் அவசியமாகும்.
Read More
avathani Media Network

மெகா சீரியல்

(காத்தான்குடி நிஷவ்ஸ்)

கிழவியும் குமரியும்
கிறுக்குத் தனமாய்
பல பல நாடகம்
பார்த்து ரசிக்கிறார்.
சேரியில் வாழும்
சின்ன வீட்டிலும்
சீரியல் பார்க்க
LCD உண்டு.

நாடகம் சொல்லும்
நாறிய கருத்தால்
கோடு ஏறிய
குடும்பங்கள் எத்தனை?
அடுத்தவன் மனைவிக்கு
ஆட்டையை போடல்
உடுத்த உடுப்புடன்
ஓடிப் போதல்
கொடுத்து உதவி
குழியைத் தோண்டல்
மருமகள் வாழ்வை
மாமியார் கெடுத்தல்
அருமையாய் பேசி
ஆம்பிளையை கவிழ்த்தல்
உரிமையைப் பேசி
உம்மாவைப் பிரித்தல்
தரித்திர நாடகத்
தாக்கங்கள் ஆயிரம்

இரண்டு வரிகளில்
இருக்கின்ற கதையை
இறப்பராய் இழுத்து
இருபது எபிசோட்டில்
கறப்பார் நேரத்தை
கன்றாவி காட்சி.

அடி மேல் அடிவைத்து
அம்மணி ஒருவர்
படியால் இறங்கி
பணிய வருவதை
ஒவ்வொரு படியாய்
ஓடும் கமரா
இவ்விரு படிகளுக்கு
இடையில விளம்பரம்
காலைத் தொடரில்
கணவனாய் வந்தவன்
மாலைத் தொடரில்
மாமனார் ஆவதை
பார்த்து ரசிக்கும்
பாமரத் தனத்தை
வார்த்தையில் சொல்ல
வசனங்கள் இல்லை.

(காத்தான்குடி நிஷவ்ஸ் -06/11/2015)
Read More
avathani Media Network

மழை வருவதும் தவளைகள் கத்துவதுமாய்..

(மார்க்க அறிஞர் PJ வருகையும், எதிர்ப்பலைகளும்)

(மதியன்பன்)

மேகம் கறுத்த போதே
சில தவளைகள்
மெல்லத் தலை நீடடின...

ஒப்பாரி வைப்பதற்கு
ஆமைகளையும், பாம்புகளையும்
அவை
அருகிலே வைத்துக் கொண்டன...

வற்றிப்போன குளத்திலே
வட்டமேசை போட்டு
மழையின் வரவைத் தடுக்க
மனுக்கள் தயாரித்தன...

ஏமாற்றித் திரியும்
சில
எருமை மாடுகள்
அதற்கு
ஒப்பமிட்டு ஒத்துழைப்பு வழங்கின...

மழை வேண்டாமென
கரப்பான் பூச்சிகள் சில
வீதியில் இறங்கி
ஆர்ப்பாட்டம் செய்தன...

பல்லிகள் பல
அதற்கு
பக்கவாத்தியம் பாடின...

காக்கைகள் சில
அவை பார்த்து
கரகோசம் செய்தன...

போதாக் குறைக்கு
பெருச்சாலியொன்று
மரத்திலே ஏறி நின்று
கூக்குரலிட்டது...

எல்லாமே பொய்த்துப் போக..
இடி மின்னல் முழக்கத்துடன்
பெரும் மழை வந்தது..
பெரும் பகுதியை கழுவிச் சென்றது.

போலியாய் கட்டிய
மணல் வீடுகள் அத்தனையும்
அந்த
அடை மழையில்
அழிந்து போயின...

மழை வருவதும்
தவளைகள் கத்துவதும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

-மதியன்பன்- 07.11.2015

Read More
avathani Media Network

3வது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெறுகின்றது-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இன்று 07 சனிக்கிழமை இடம்பெற்று வருகின்ற மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மேற்படி இளைஞர் பாராளுமன்றத  தேர்தலில் வாக்களிக்க இளைஞர்,யுவதிகள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இத் தேர்தலில் கடமையில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதோடு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளரும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காத்தான்குடி இஸ்ஸத் இளைஞர் கழகம் சார்பாக முஹம்மத் பதூர்தீன் முஹம்மத் சம்ஹான் யூஸ் இளைஞர்  கழகம் சார்பாக முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் சிஹாப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாகவும் ,காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1252 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஸமீலுல் இலாஹி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மாவட்டத்தில் 32 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்புதொகுதியில்மட்டக்களப்புகாத்தான்குடிஏ ாவூர்,ஆரையம்பதி,வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















Read More
avathani Media Network

கடந்த அரசின் பாவங்களை புதிய அரசு சுமக்க வேண்டிய நிலை!- பிரதமர்

கடந்தகால அரசாங்கத்தின் பாவத்தை சுமக்கவேண்டிய நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் உரிய கேள்விப் பத்திரங்கள் இன்றி ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேர த்தில் ஐ.ம.சு.மு எம்.பியான டலஸ் அழகப்பெரும, மலையக நெடுஞ்சாலை தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மலையக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சீன நிறுவனம் ஒன் றுக்கு கேள்விப்பத்திரம் இன்றி இதனை அமைக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதா யின் நஷ்டஈடு வழங்கவேண்டும். எனவே கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தத்துக்கு அமைய பணிகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இருந்தபோதும் குறித்த நிறுவனத்துக்கு வழங்காத ஏனைய பகுதிகளை உள்ளூர் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியும் பெறப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் பாவங்களையும் சுமக்கவேண்டிய நிலைமை தற்போதைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல் வருமான லக்ஷக்மன் கிரியல்ல, மத்திய நெடுஞ்சாலை முன்னைய அரசாங்கத்தைவிட குறைந்த வட்டி வீதத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும், இதுவே தமக்கும் முன்னைய அரசாங் கத்துக்கும் இடையிலான வித்தியாசம் என்றும் கூறினார்.
Read More
avathani Media Network

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. இலங்கைக்கு தென் கிழக்கே காற்றமுக்க நிலை ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை பெய்யக் கூடும்.
தற்போதைய காற்ற முக்க நிலை வலுவடையும் நிலை ஏற் பட்டால் நாடு முழுவதும் கடும் மழை, வெள்ளம், மண் சரிவு அபாயங்கள் ஏற்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
Read More
avathani Media Network

இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் 17ஆம் திகதி

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17ஆம் திகதிநடைபெறவுள்ளது
இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்தவர்களில் இரண்டாயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
இரட்டைக் குரிமை வழங்கும் விசேட நிகழ்வு அலரி மாளிகையில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்னவின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கTள்ளனர்.
Read More