Featured Home (TOP)

Recent Comments

Sunday, November 8, 2015

avathani Media Network

காரைதீவு பிரதேச செயலகத்தில் சுறு சுறுப்பாக இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
திகாமடுல்ல மாவட்ட பொத்துவில் தொகுதியின் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இன்று(07) காரைதீவு பிரதேச செயலகத்தில் மிகச் சுறு சுறுப்பாக இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரியாக செயற்பட்டார்.

மேலும், காரைதீவு பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.பரீட் வாக்கெடுப்பு நிலையப் பொறுப்பாளராகவும், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி யூ.எல்.ஏ.மஜீட் பிரதம கண்காணிப்பாளராகவும் செயற்பட்டனர். பொலிசாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இளைஞர், யுவதிகள் மிக உற்சாகத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இதனைப் பார்க்கும் போது 'பாராளுமன்றப் பொதுத் தேர்தல்' போன்று காட்சியளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இவ்வாக்களிப்பு மாலை 3.00மணிக்கு முடிவடையுமெனவும், வாக்களிப்பு முடிவுற்றவுடன் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும்' எனவும் வாக்களிப்பு நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.பரீட் தெரிவித்தார்.





Read More
avathani Media Network

நுரைஈரல் சத்திரசிகிச்சைக்கான உதவிகோரல்....

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நூரைஈரல்) வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப்பரிசோதனை செய்த செய்த வைத்தியர் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கான செலவுகள் 10 இலட்சங்களாகுமென்றும் 6 இலட்சம் ரூபாய்கள் உடனடியாக ஏட்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
கணவனை இழந்த இவரது தாய் நல்உள்ளம் கொண்டவர்களிடமிருந்து உதவி கோருகிரார்...
எனவே தயவுசெய்து கீழுள்ள அவரது வங்கி கணக்கிலக்கத்திற்கு தங்களால் முடிந்த பண உதவிகளினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆர்.எம். ஜெம்ஸாத்
செலான் வங்கி
க/இ 0740-01867329-101


Read More
avathani Media Network

நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியின் அவலம் குறித்து பொது மக்கள் ஆவேசம்

(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்.)

நிந்தவூர் 5ம் பிரிவுகுள்ளான இரண்டாம் குறுக்கு வீதியானது மக்களால்  அன்றாடம் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான வீதியாகும். தற்போது இவ்வீதி புணரமைக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. ஆனால் இவ்வீதியை புணரமைத்த கொந்தராத்காரர்களின் கைவரிசை என்னமோ அவ்வீதியில் நான்காம் சந்தியில் 15 அடி அகலத்தில் இவ்வீதியை முற்று முழுதாக போடாமல் விட்டதனால் தற்போது இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக இவ்வீதியில் அவ்விடத்தில் நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கின்றது. இது கொந்தராத்காரர்களுக்கு காட்சியாக இருப்பினும் மக்களுக்கு போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவுள்ளது.
மேலும் இவ்வீதியினுடாக மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த சிலர் அவ்விடத்தில் தேங்கி நிற்கும் நீரின் ஆழம் அறியாமல் விபத்துக்குள்ளானதில் கை,கால் உடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.  
இதனால் அப்பிரதேச மக்கள் இவ்வீதியை புணரமைத்த கொந்தராத்காரர்கள்மேல் கடும் வெறுப்புணர்ச்சியோடு றோடு போடுவெதென்றால் ஒழுங்கான முறையில் போடவேண்டும் இல்லையெனில் றோடு வேண்டாமென கூறுகின்றனர். இதனை சமுக நலன்பற்றுள்ள மனிதனாகயிருந்து பார்க்கும்போது பாதிக்கப்பட்ட மக்கள் வெறுப்புணர்ச்சியோடு கூறுவது நியாயமாகத்தான் தோன்றுகிறது.
மேலும் இவ்வீதியின் அவலம் தொடர்பாக பலதரப்புக்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்தபோது இதனை அலசி ஆராய்ந்தபோது சில தகவல்கள் வெளிவந்துள்ளன அதாவது தற்போது இவ்வீதியில் குளம்போன்று காட்சிதருகின்ற அந்த 10 அடிக்கு அப்பாலுள்ள தெற்கு வீதி பகுதி ஒரு கொந்தராத்காரருக்கும் வடக்கு வீதி பகுதி வேறு கொந்தராத்காரருக்கு கொடுத்ததனால் குளம்போன்று கட்சிதருகின்ற அந்த 10 அடி நான்காம் சந்தியை யார் போடுவதென்ற இழுபறியில் யானை போய் விட்டது வால் பொறுத்துவிட்டதென்ற நிலையில் கிடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
உண்மையில் இதுவொரு அநியாயத்துக்காக கொடுக்கப்பட்ட கொந்தராத் என்றுதான் சொல்லமுடியும் காரணம் இதுவொரு திட்டமிடலின்றி கொடுக்கப்பட்ட வேலைத்திட்டமாகும்.
ஆகையால் இவ்வீதி தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு இவ்வீதியின் அவலத்தினை சீர் செய்து தருமாறு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.    






Read More
avathani Media Network

பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் சுய வாழ்விலும் உயர்நிலையை அடைவர் -வளவாளர் தொழிலதிபர் உவைஸ் எம் பாஸில்

(பஷீர் அலி)
தமக்குள் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள மனநிலையை காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளும்போதே வாழ்வில் உயர்நிலையை அடையலாம். பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் சுய வாழ்விலும் உயர்நிலையை அடைவர் என தலைமைத்துவ பயிற்சி வளவாளரான தொழிலதிபர் உவைஸ் எம் பாஸில் தெரிவித்தார்.
கண்டி மடவளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்காக இடம்பெற்ற விஷேட பயிற்சி முகாமில் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'ஹாதிமுல் உம்மா வெல்பெயார் எசோஸியேஷன்' (குவா)  அமைப்பின் ஏற்பாட்டில் மடவளை கார்டியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனுபவப்பகிர்வு மற்றும் செயற்பாட்டு வழிமுறை நுட்பங்களுடாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த உவைஸ் எம் பாஸில் மேலும் தெரிவித்ததாவது.
பொதுமக்களுக்கு தீங்கு செய்யும் காரணிகளை கண்டால் உரியவர்கள் அதனை செய்து கொள்ளட்டும் என்ற சுயநலத்துடன் விலகிச் செல்வது மனிதத் தன்மை அல்ல. இந்தத் தீங்கில் இருந்து பிறரைக் காப்பது எப்படி என முயற்றசிப்பவரே தலைமைத்துவப் பன்பு கொண்ட மனிதர். தூய்மையான எண்ணத்துடன் ஒரு பொது வேலையை செய்யும்போது நமக்கு உதவியாக பலர் வந்து இணைந்து கொள்வர் என்பது யதார்த்தபூர்வமான உண்மையாகும். அதனை விடுத்து, தனியாக என்னால் இதனை சாதிக்க முடியாது என விலகிச் செல்பவர்கள் தலைமைத்துவ ஆற்றல் அற்றவர்களே.
பொதுநல வேலைகளை செய்ய முற்படும்போது பல தடைகள் வரலாம் அதனை பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் பொது வாழ்விலும் சுய வாழ்விலும் உயர் நிலையை அடைந்து கொள்கின்றனர்.









Read More
avathani Media Network

குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
-----------
அறபுக்கல்லூரியை தொடர்பு கொள்ள:
National Thawheedh Jamaath (NTJ)
296, FC Road,                                           
New Kattankudy – 03,
Sri Lanka.
Phone : 0652248630
Web   : www.ntjweb.com
Facebook : NTJ Media
Read More
avathani Media Network

சமூக நீதிக்கும் நல்லாட்சிக்காயும் உரத்து ஒலித்த குரல் ஓய்ந்து விட்டமை தேசத்தின் பேரிழப்பாகும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)



 (மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மறைவையொட்டி NFGGயின் அனுதாபச் செய்தி)

சமூக நீதிக்கும் நல்லாட்சிக்காயும் உரத்து ஒலித்த குரல் ஓய்ந்து விட்டமை தேசத்தின் பேரிழப்பாகும் என மதிப்புக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மறைவையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மரணம் மிகுந்த கவலையை அளிக்கிறது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதனை சம்பிரதாய பூர்வமான அனுதாபச் செய்தியாக கருதவில்லை. அதனையும் தாண்டி, நீதிக்கான போராட்டத்தின் சக பயணி ஒருவரை இழந்து விட்டோம் எனும் வலியையும் வேதனையையும் ஆழமாக உணர்கிறோம்.
நமது இலங்கைத் திரு நாட்டில்  சமூக நீதியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துவதற்காகவும், ஜனநாயக மீட்புக்கும், அதிகார துஷ்பிரயோகத்தை முறியடிப்பதற்குமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்திற்கு தலைமை வழங்கிய மகத்தான ஆளுமை அவர்.
கடந்த பல வருடங்களாக அவரது தலைமையில் இயங்கிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயலூக்கமிக்க பங்காளியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இருந்து வருகிறது. மரியாதைக்குரிய சோபித தேரர் அவர்கள் எம் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார். அப்படியான ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டோம். இந்த இழப்பை ஈடு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே.
இந்த நாடு மிகப் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்த நெருக்கடி மிக்க தருணத்தில், மரியாதைக்குரிய தேரர் அவர்கள் ஆற்றிய துணிகரமான, காலப் பொருத்தம் மிக்க அர்த்தபூர்வமான பங்கையும் பணியையும் வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சமூக நீதியையும் நல்லாட்சியையும் நிலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் எப்போதும் யாருக்கும் அஞ்சாமல் துணிந்து குரல் எழுப்பிய அசைக்க முடியாத ஆளுமை அவர். அநியாயக்கார ஆட்சியாளர் முன்னிலையில் உண்மையை உரத்துப் பேசிய அந்தக் குரலை இனிக் கேட்க முடியாது என்பது எவ்வளவு பாரிய இழப்பு. இப்படி ஒரு குரலுக்காக இந்த தேசம் இனி எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.
பாரபட்சம், பக்கச் சார்பின்றி எல்லா சமூகங்களையும் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்து செயற்பட்ட, இந்த நாட்டின் பன்மைத் தன்மையை- குறிப்பாக சிறுபான்மை சம்மொகங்களின் உள்ளக் கிடக்கைகளை - புரிந்து செயற்பட்ட அவரது மன விசாலத்தை இந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மனதார மெச்சுகிறது.
நாட்டில் ஆட்சி முறை மாற்றம் அவசியம் என்பதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து, கொழும்பு புதிய நகர மண்டபத்தில் முதன் முதலில் நடத்திய பொதுக் கூட்டத்திலும், தேர்தலுக்குப் பிந்தி 'மாற்றத்திற்குப் பங்களித்த மக்களைப் பாராட்டுவோம்' என்ற கருப்பொருளில் கொழும்பில் நடத்திய கூட்டத்திலும் மரியாதைக்குரிய தேரர் அவர்கள் முக்கிய பேச்சாளராகக் கலந்து கொண்டமையை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்வது பொருத்தமானது.
எதிர்வரும் நவம்பர் 25 இல் நடைபெறவுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பேராளர் மாநாட்டில் மரியாதைக்குரிய தேரர் அவர்கள் ஒரு முக்கிய பேச்சாளராக அழைக்கப்பட இருந்தார். இனி அவர் நம் மத்தியில் இல்லை. ஆனாலும் அவரது நினைவுகள் வாழும்.
சம்பிரதாயபூர்வமான ஒரு மதகுருவின் பணிகளுக்கு அப்பால் சென்று, அவர் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த மதிப்புணர்வுடனும் நன்றியுணர்வுடனும் நினைவு கூர்கிறது.
மதிப்பிற்குரிய தேரர் அவர்கள் எவ்வாறான ஆட்சி முறை மாற்றத்திற்கும், அர்த்தபூர்வமான நல்லாட்சிக்கும் உழைத்தாரோ, அதனை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்திக் காட்டுவதே அவருக்குச் செய்யும் உண்மையான கைமாறாய் அமையும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகிறது.
Read More
avathani Media Network

காத்தான்குடி கடலில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு .லுஹர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம்..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
நேற்று சனிக்கிழமை (07)மதியம்  காத்தான்குடி நதீயா  கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த A.A.M. சம்சாத் எனும் 15 வயது சிறுவனது ஜனாஸா  இன்று நள்ளிரவு 1.00 மணியளவில் மீட்க்கப்பட்டுள்ளது.
(இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்)
காணாமல்போன கடற்கரை பகுதியிலேயே குறித்த சிறுவனின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவனின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகை யின் பின்னர் புதிய காத்தான்குடி அக்பர் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை இடம் பெறவுள்ளதாக தெறிவிக்கப்படுகிறது..
Read More
avathani Media Network

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதியிலும் தமிழ் இளைஞர் வெற்றி

தற்போது நடைபெற்று முடிந்த மூன்றாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதியிலும் தமிழ் இளைஞர் வெற்றி பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கல்குடா தொகுதியில் ஆறு பிரதேச செயலக பிரிவில் இருந்து பன்னிரண்டு பேர் வேட்பாளராக போட்டியிட்டதில் கு.ஜெபக்குமார் 2304 வாக்குகளையும், மட்டக்களப்பு தொகுதியில் ஐந்து பிரதேச செயலக பிரிவில் இருந்து பன்னிரண்டு பேர் வேட்பாளராக போட்டியிட்டதில் எ.பயஸ்ராஜ் 1564 வாக்குகளையும், பட்டிருப்பு தொகுதியில் மூன்று பிரதேச செயலக பிரிவில் இருந்து எட்டு பேர் வேட்பாளராக போட்டியிட்டதில் பி.வதீஸ்குமார்; 431 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியுள்ளர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக மூன்று பேரை தெரிவு செய்வதற்காக 32 வேட்பாளர்கள் போட்டியிடும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் 18607 பேர் மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்.
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More