Featured Home (TOP)

Recent Comments

Monday, November 9, 2015

avathani Media Network

கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீனுக்கு கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கான வித்தகர் விருது' வழங்கி கௌரவிப்பு !

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழா 2015ல் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் (முஹம்மட் இஸ்மாயில்) கலை இலக்கிய  ஊடகத்துறைக்கான வித்தகர் விருதினை பெற்றுள்ளார்.
 
திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் (08.11.2015) ஞாயிறு மாலை மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் கௌரவ  அதிதிகளாக விவசாய அமைச்சர் கீ.துரைராசசிங்கம், சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்,கல்வி அமைச்சின் செயலாளர் Nஐ.டி.எம்.எஸ்.அசங்க அபேவர்தன பண்பட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை வழங்கி வைத்தனர்.

ஆல்ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸடீன் கலை இலக்கிய ஊடகத்துறை வரலாற்றில் 40வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். கடந்த காலங்களில்; செய்திச் சிமிழ், இரத்தின தீபம், வாழும் போதே வாழ்த்துவோம், உயர்ந்;த மண்ணின் உன்னத விருது உட்பட மாவட்ட ரீதியில் பல விருதுகளை பெற்றுள்ளார். அத்துடன் 2009ஆம் ஆண்டு தேசிய ரீதியில் கலாசார அமைச்சினால் ஊடகத்துறைக்கான கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகத்துறையில் உள்நாட்டில் அரச தனியார் அச்சு இலத்திரனியல் நிறுவனங்களில் பணியாற்றுவதுடன் வெளிநாட்டு செய்திச் சேவை நிறுவனங்களான ராய்ட்டர் செய்திச் சேவை லண்டன் தீபம் என்பவற்றுக்கும் செய்திகளை வழங்குபவராகவும் இருந்து வருகின்றார்.
ஊடகத்துறையில் மர்ஹூம் எச்.எம்.பீ..மொஹடீன் இவரது ஆசான் ஆவார்.

 இவரது ஊடகத் துறை வாழ்வில் ஒரே கட்சியைச் சேர்ந்த மூன்று படிநிலை பதவிகளை வகித்தவர்களுக்கு  இவர் ஊடகப் பணியாளராக பணிபுரிந்தார் . 

 அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமைச்சர்  மர்ஹூம் எம்.எச்.அஷ்ரப் அவர்களின் ஊடக இணைப்பதிகாரியாக சுமார் 5 வருடங்கள் மரணிக்கும் வரை அவருடன் செயற்பட்டுள்ளர்.
 
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளராகவும் அமைச்சராகவும் இருந்த எ.எல்.எம் அதா உல்லாவின் சிரேஷ்ட ஊடக இணைப்பதிகாரியாகவும் , மேலும் 
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி .ஹசன் அலி அவர்களின் அமைச்சுக்கான ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
 
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரான இவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று முழு நேர ஊடகப்பணியில் ஈடுபட்டு வருகின்றார் மேலும் இவர் ஊடகத்துறை டிப்ளோமா , பட்டமேற்கல்வி டிப்ளோமதாரியும் ஆவார். அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மர்ஹூம்களான மீராசாஹிபு அவ்வாக்குட்டி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரராவார்.






Read More
avathani Media Network

கட்டாக் காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் -படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை ,ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அழைந்து திரியும் கட்டாக் காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் ஈடுபட்டுள்ளர்.

இந் நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை ,பிரதேச சபை ஊழியர்களின்; உதவியுடன் பிரதான வீதிகளில் அழைந்து திரிந்த 9 கட்டாக் காலி மாடுகளை போக்குவரத்து பொலிசார் பிடித்துள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலாலிடம் கேட்டபோது  5 தினங்களுக்குல் இக் கட்டாக் காலி மாடுகளின் உரிமையாளர்களிடம் 1 மாட்டுக்கு 5000.ரூபா வீதம் நகர சபை ,பிரதேச சபை ஆகியவற்றுக்கு தண்டப் பணம் அறவிட்டு கொடுப்பதோடு இவர்களிடம் இந்த மாடுகளை இனிமேல் வீதிகளில் அழைந்து திரிய விடமாட்டேன் என்று வாக்கு மூலம் பெற்று இறுதி எச்சரிக்கை வழங்கி குறித்த கட்டாக் காலி மாடுகளை விடுவிப்பதாகவும் அதன் பின்னர் அந்த மாடுகள் வீதியில் அழைந்து திரியும் போது பிடிபட்டால் அதற்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.

குறித்த கட்டாக் காலி மாடுகளினால் வீதி விபத்து இடம்பெறுவதாகவும் இதனால் கட்டாக் காலி மாடுகளை வீதிகளில் அழைந்து திரிய விட வேண்டாம் என காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.









Read More
avathani Media Network

யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஓர் இனம் முஸ்லிம் இனம்- உலமா கட்சி


விசாரணை பொறிமுறைக்கான காலம் 1985ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பவேண்டும்
என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறை வேற்றியிருப்பதை உலமா
கட்சி வரவேற்பதுடன் இது பற்றி பாராளுமன்றில் கவன ஈர்ப்பு பிரேரணை கொண்டு
வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சி தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,

இலங்கையின் யுத்த கால விசாரணை என்பதை உலமா கட்சி பல காலமாக வலியுறுத்தி
வருகிறது. இதனையே அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்
மாணவர்களும் தமது ஆர்ப்பாட்டத்தின் மூலம்
வலியுறுத்தி இருந்தனர்.

யுத்த கால விசாரணையை 2009டன் மட்டுப்படுத்த சிலர் முயற்சிப்பதன் மூலம்
உண்மைகளை புறக்கணிக்க இடமளிக்க முடியாது.

யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஓர் இனம் என்றால் அது
முஸ்லிம்களாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டின்
ஒருமைக்காக பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தகைய உண்மைகளை கொண்டு வந்து அநியாயக்காரர்களை விசாரிக்கக் கூடிய
வகையில் அமைய வேண்டுமாயின் யுத்த விசாரணையின் கால் எல்லை என்பது 1985 என
இருக்க வேண்டும் என்பதை எவராலும் புறந்தள்ள முடியாது.

இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்படும் போதே
இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களும் சம பங்காளர்கள் என்பதை
சர்வதேசம் புரிந்து கொள்ளும். இதற்கான முயற்சியில் முஸ்லிம்களின் அதிக
வாக்குகளை பெற்ற கட்சி என்ற வகயில் முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய கடப்பாடு உண்டு.

ஆகவே அக்கட்சியின் இத்தீர்மானம் பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய
ஒன்றாகும் என்பதுடன் வெறுமனே பிரேரணை வேற்றியதுடன் அமைதியாகி விடாது
அதற்கான முயற்சிகளை பாராளுமன்றத்திலும்
அதற்கு வெளியிலும் முன்னெடுக்க வேண்டும் என உலமாகட்சி வலியுறுத்துகிறது.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

அட்டப்பள்ளம் அஸ்-சஹிதா வித்தியாலயத்தில் 'காசிமியா' நூலக கட்டிடத் திறப்பு விழா. -சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர், அட்டப்பள்ளம் அஸ்-சஹிதா வித்தியாலய மாணவர்களின் பெருந் தேவைகளில் ஒன்றாக இருந்து வந்த 'காசிமியா' நூலகக் கட்டிடத் திறப்பு விழா இன்று சஹிதா வித்தியாலய வளாகத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் ஏ.எம்.அன்வர் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.அன்சார் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். 

'பிரதியமைச்சர் பைசால் காசீமின்; ரூபாய்.10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், அவரின் தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இக் 'காசிமியா' நூலகத்தினால் இப்பிரதேசத்திலுள்ள பல்லாயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் நன்மையடையவுள்ளனர்'என்று வித்தியாலய அதிபர் அன்வர் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு பேசுகையில் ' இப்பிரதேச பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  அரசாங்கத் தொழிலுக்கு அனுப்ப விரும்பினால், அவர்களை கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரப்) பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியெய்த வைக்க வேண்டும். இல்லையேல் அரச தொழிலுக்குள் நுளைய முடியாது' எனத் தெரிவித்தார்.















Read More
avathani Media Network

உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில்

(எம்.எச்.எம்.அன்வர்)

மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கான 'உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை' எனும் தலைப்பில் செயலமர்வு இன்று (09.11.2015) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது 
சமூக சேவை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இ;ச்செயலமர்வில்  உளவளத்துணை வைத்தியர் திரு கடம்பநாதன் அவர்களால் விரிவுரை இடம்பெற்றதுடன் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மக்களோடு தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் உளவளம் தொடர்பான அனுகுமுறைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக விளக்கமளித்தார்
அத்துடன் இது தொடர்பான சிக்கல்கள் மனஅழுத்தங்கள் ஏற்படும்போது தன்னை சந்தித்து ஆலோசனைகளையும் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்
மேற்படி நிகழ்வுக்கு மன்முனை வடக்கு ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி காத்தான்குடி வவுனதீவு மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் திவிநெகும உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி   உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது







Read More
avathani Media Network

SMS

(காத்தான்குடி நிஷவ்ஸ்)
சதக் காசுக்கு
சந்தையில் வாங்க
இதப் போல இங்க
இன்னொன்று மலிவில்லை.
பேச்சுக் கொடுத்தால்
பிரேக் இல்லா ஆக்களுக்கு
SMS அனுப்பி
இலகுவாய் தப்பலாம்
உரத்துக் கத்தி
உரையாட முடியாட்டி
சைலண்டா வேலையை
சாதிக்க உதவும்
வாய் விட்டு சொல்லா
வகையறா விடயங்களை
மனம் விட்டு சொல்ல
மார்க்கமாய் அமையும்
ஆங்கிலத் தமிழ் என்னும்
அரை குறை மொழியொன்று
ஓங்கி வளர
உதவிய சேவை
கண்ணயர்ந்து தூங்கையில்
கணீரென்று அடிக்கும்
என்னவென்று பார்த்தால்
இழவு விளம்பரம்
விலைக் கழிவு message களால்
வெறிச்சோடும் purseகள்
அலைக் கழிக்க வைக்கும்
அழைப்பு SMSகள்
குறுந் தகவல் சேவையால்
இருந்த உறவு வளர்வதும்
அறுந்த உறவு தொடர்வதும்
சிறந்த சேவை எனினும்
மருந்து போல் பாவித்தலே
சிறந்ததாய் அமையும்.
(காத்தான்குடி நிஷவ்ஸ் -09/11/2015)

சதக் காசுக்கு
சந்தையில் வாங்க
இதப் போல இங்க
இன்னொன்று மலிவில்லை.
பேச்சுக் கொடுத்தால்
பிரேக் இல்லா ஆக்களுக்கு
SMS அனுப்பி
இலகுவாய் தப்பலாம்
உரத்துக் கத்தி
உரையாட முடியாட்டி
சைலண்டா வேலையை
சாதிக்க உதவும்
வாய் விட்டு சொல்லா
வகையறா விடயங்களை
மனம் விட்டு சொல்ல
மார்க்கமாய் அமையும்
ஆங்கிலத் தமிழ் என்னும்
அரை குறை மொழியொன்று
ஓங்கி வளர
உதவிய சேவை
கண்ணயர்ந்து தூங்கையில்
கணீரென்று அடிக்கும்
என்னவென்று பார்த்தால்
இழவு விளம்பரம்
விலைக் கழிவு message களால்
வெறிச்சோடும் purseகள்
அலைக் கழிக்க வைக்கும்
அழைப்பு SMSகள்
குறுந் தகவல் சேவையால்
இருந்த உறவு வளர்வதும்
அறுந்த உறவு தொடர்வதும்
சிறந்த சேவை எனினும்
மருந்து போல் பாவித்தலே
சிறந்ததாய் அமையும்.
(காத்தான்குடி நிஷவ்ஸ் -09/11/2015)
Read More
avathani Media Network

நிந்தவூர் மதீனாவில் சிறப்பான வாசிப்பு மாதக் கொண்டாட்டங்கள். -கல்விப் பணிப்பாளர் சலீம் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் கமுஃஅல்-மதீனா மகா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் வாசிப்பு மாதக் கொண்டாட்டங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டலில், மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரி பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதியூ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், கல்லூரி முதல்வர் எஸ்.அஹமது ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பாடசாலை மைதானத்தைச் சுற்றியுள்ள மரங்கள் யாவும் காற்றடைத்த பந்துகளால் அலங்கரிக்கப்பட்டு, வாசிப்புக் கொட்டகைகள், திறந்த வெளி நூலகம் என்பன அமைத்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.







Read More
avathani Media Network

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு மாகாண சாஹித்திய விருது

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று 8 ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணாமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற போது 2014ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது காத்தான்குடியைச சேர்ந்த கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான  ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்படுவதையும் அருகில் மாகாண விவசாய அமைச்சர் கவிஞர் ரி.துரைராஜசிங்கம் ,கல்வி அமைச்சர் கே.தண்டாயுதபாணி ,மாகாண கலாசாரப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட அதிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.






Read More
avathani Media Network

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைநகரிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் நலன் கருதி மேலதிக பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைகருதி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும், என இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் நோக்கி செல்லும் பயணிகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தில் அதிகரித்துள்ளதுடன், நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தூர பிரதேசங்களுக்கான பயணிகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சொந்த ஊருக்கு சென்று கொழும்புக்கு திரும்புவோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More
avathani Media Network

நவம்பர் 12 துக்கதினமாக பிரகடனம்

மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாராளுமன்ற மைதானத்தில இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினத்தை (12) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Read More