Featured Home (TOP)

Recent Comments

Monday, November 23, 2015

avathani Media Network

ஜனாதிபதி விஞ்ஞான விருது வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதி விஞ்ஞான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பத்தரமுல்லை வாட்டஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.இந்நிகழ்வை விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருது வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் முஹம்மட் நாஜிம் 2013 ம் ஆண்டு விஞ்ஞான பதிப்பு ஒன்று வெளியிட்டமைக்காக இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Read More
avathani Media Network

பொத்துவிலில் இடம்பெற்ற இலவச இரத்ததான முகாம்

(மரியமின் புத்திரன்)
பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ஜும்ஆபள்ளிவாசல் மற்றும் தில்ஷாத் அஹமத் பௌண்டேசன் இணைந்துவழங்கிய இரத்ததான முகாம் 2015-11-22ம் திகதி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காலை 8.00 மணிதொடக்கம் நன்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றது. பொத்துவில் 
ஆதாரவைத்தியசலையில் இடம்பெற்ற இலவச இரத்ததான நிகழ்வுக்கு அதிகளவான சுகதேகிகள் வருகை தந்திருந்தபோதும் இரத்தவங்கியின் இடப்பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை நிருவாகத்தினரால் குறிப்பிட்டளவானோரிடமிருந்தே இரத்தம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பொத்துவில் இரத்ததான அமைப்பின் அமைப்பாளர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக்(S.P.H.I) நன்றிகளைத் தெரிவிக்கின்றார்.


Read More
avathani Media Network

ஒஸா வினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு- கவிதைப் போட்டி

எமது சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (ஒஸா) பல்வேறுபட்ட சமூக துயர் துடைப்பு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. எமது அமைப்பினது ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காத்தான்குடி இளங் கவிஞர்களை ஊக்குவிக்குமுகமாக கவிதைப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது. கடந்த 5 வருடங்களுக்குள் எமது இலக்கியம் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் விரல் விட்டு எண்ணும் விலாசங்களே மின்னுகின்றன.
இது எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது .இதனால் 'குறுனிக்கற்களும் குகைகளைக்கட்டாதா' ?; என்ற அனுமாப்பில் இப்போட்டியினை நடாத்த தீர்மானித்தோம். இது இளங் கவிஞர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.எனவே இளம் கவிஞர்கள் இவ்வாய்ப்பை தவறவிடாது குறித்த நிபந்தனைகளின் அடிப்படையில் கவிதைகளை தாமதியாது  எமக்கு அனுப்பி வையுங்கள். 
மூத்த இலக்கிய நடுவர்களால் தெரிவு செய்யபடும் முதல் மூன்று கவிதைகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படும். தொடர்ந்து தெரிவு செய்யப்படும் 10 கவிதைகளுக்கு சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்படும் .இக் கௌரவிப்பு நிகழ்வ்வு எமது அமைப்பினது விழாவொன்றில் நடைபெறும் என்பதனையும் மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். 
நிபந்தனைகள்
இளங் கவிஞர்கள் மாத்திரமே பங்கு பற்ற முடியும் 
காத்தான்குடியையும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்தவர்களே போட்டியில் இணையலாம்  
வயதெல்லை கிடையாது. 
நாம் கீழ்குறிப்பிடும் மூன்று தலைப்புகளுக்குள் மாத்திரமே கவிதைகள் எழுதப்படல் வேண்டும் 
புதுக்கவிதையாகவோ மரபுக்கவிதைகளாகவோ இருக்கலாம் 
எதுவானாலும் 48 வரிகளுக்குள் உள்ளடக்கப்படல் வேண்டும் 
தங்களது பெயர் முகவரிகள் தொடர்புகள் பற்றிய விபரங்கள் பிறிதொரு கடதாசியில் எழுதப்படல் வேண்டும்
கவிதை ,கணணி தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும் கைஎழுத்தில் அனுப்பப்படும் கவிதைகள் நிராகரிக்கபடும்.
தபால் ,ஈமெயில் (மின் அஞ்சல்) ஊடாக அனுப்பலாம் 
முடிவுத்திகதி 13.12.2015 காலை 10.00 மனிக்கு முன்னர் எமக்கு கிடைக்கப் பெறல் வேண்டும்
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 
தலைப்புகள்:
  ஓயாது உழைக்கும் ஒஸா
  உதவியே உந்தன் உயிர்
  சமூதாயத்தை நேசிக்கும் சத்திய இயக்கம் 
அனுப்பவேண்டிய முகவரிகள்:


§  Ilmi ahamed lebbe (President- OSA)
34/2 Weaving center road, New kattankudy.03

§  milmeahamedlebbe@gmail.com











Read More
avathani Media Network

முஸ்லிம் என்பதால் மாளிகைக்காடு ஹலீலுர்ரஹ்மானுக்கு நடந்த அநீதி : தவிசாளர் பிரதி தவிசாளரானார்



அபூபக்கர் ஹலீல் ரஹ்மான் எனும் முஸ்லிம் மகனுக்கு காரைதீவு மத்தியஸ்த சபையில் இடம்பெற்றிருக்கும் அநீதியை தட்டிக்கேட்பது யார் ?  கடந்த 2015.09.15 ம்திகதியன்று மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் தவிசாளராக

நியமிக்கப்பட்டிருந்த இவர் கடந்த மே மாதம்  நடைபெற்ற தேர்வில் அதிகூடிய புள்ளிகளை பெற்றிருந்தார் என்ற காரணத்தினால் இவரை மத்தியஸ்த சபை ஆணைக்குழு தவிசாளராக நியமித்திருந்தது. 

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஹிந்து சகோதரர்கள்  இனவாதம் எனும் நஞ்சை கக்கி இவரை பிரதி தவிசாளராக பதவி இறக்கியுள்ளனர். தமிழர்கள் அதிகமாக வாழும் காரைதீவில் தமிழர்கள் தான் சகலத்திலும் முன்னிலை  வகிக்க வேண்டும் என்பது முட்டாள் தனம். இவ்வளவு காலமும் ஒரே தாய் மக்களாக வாழ்ந்துவரும் தமிழ்,முஸ்லிம் சகோதரர்களின் ஒற்றுமையை சீரழிக்க சில பதவியாசை பிடித்த கயவர்களின் சதியை நன்கு உணர்ந்து நடுநிலையாக சிந்தித்து உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களை வேண்டிகொள்கிறேன்.

நடுநிலையாக சிந்திக்கும் தமிழ் அமைப்புக்களும் இந்த செயலை கண்டிப்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது உரியவர்களின் கடமை.தமிழர் தவிசாளராக வரவேண்டும் என கோரிக்கை வைத்து தமிழ் உறுப்பினர்கள் பகிஸ்கரித்தது போல 22.11.2015 அன்று முஸ்லிம் உறுப்பினர்கள் பத்துபேரும் நடுநிலையான முடிவு வரும் வரை சபையை பகிஸ்கரிக்க  எண்ணியுள்ளனர். இந்த மத்தியஸ்த சபை நியமனத்தில் அரசியல் பக்க பலமாக இருப்பது வெளிச்சமிக்க உண்மை.இந்த விடயத்தில் தலையிட்டிருக்கும் அரசியல் வாதிகள் உடனடியாக உங்கள் மனசாட்சியின் படி நடந்து கொள்ள முன்வாருங்கள். எந்த வித அறிவித்தலுமின்றி பதியிறக்கம் செய்திருக்கும் ஆணைக்குழு அரசியல் வாதிகளின் கைபொம்மையாக செயற்படாமல் சுதந்திரமாக செயட்படவேண்டியது காலத்தின் தேவை.

நல்லாட்சி அரசில் இனவாதம் தலைதூக்காமல்  இருக்க நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களிலும் இதுபோல பல சம்பவங்கள் இந்த  பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது.என்றாலும் மூடி மறைத்து  சகோதரத்துவ தன்மையுடன் பல விட்டுகொடுப்புக்களை மாளிகைக்காடு,மாவடிப்பள்ளி முஸ்லிம் சகோதரர்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். 

சகல மனசாட்சியுள்ளவர்களையும்  இனவாத சதியை முறியடித்து நீதியை நிலைநாட்டி சமாதானமான சூழலை உருவாக்க கரம் கோருக்குமாறு  அழைப்பு விடுக்கிறேன்.

இந்த சிறிய பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நாம் தவறும் பட்சத்தில் இது பக்ற்றீயா போன்று பரவி இனவிரிசலை உண்டாக்குவதுடன் சகோதரர்களாக வாழும் தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ மக்களிடையே பாரிய மனகஷ்டத்தை உண்டாக்கும். அதன் மூலம் பல போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை. 

ஆகவே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் சகோதாரர் அ.ஹலீலுரஹ்மான் அவர்களுக்கு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என தேசிய ஜனநாயக  உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் காரைதீவு பிரதேச இளைஞர் சம்மேளன மு.தலைவருமான தேசமான்ய அல்-ஹாஜ் ஹுதா உமர் (J .P )தெரிவித்தார்.





Read More