Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 26, 2015

avathani Media Network

17 நாட்களில் 330 கிலோ மீற்றர் ஒளிக்கான யாத்திரை குழுவுக்கு –காத்தான்குடியில் இருந்து நிதி வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தவிர்க்ககூடிய குருட்டுதன்மையை நீக்குவதற்கு விஷன் 2020 எனும் முயற்சிகளுக்கு நன்கொடையைளர்கள் மிக முக்கிய பங்கை ஆற்றிவருவதன் நோக்காகக் கொண்டு சுகாதார அமைச்சின் விஷன் 2020 செயலகத்தின் ஏற்பாட்டில் பார்வைக்காக கிழக்கிலிருந்து மேற்கிற்கு நடக்க நாம் உறுதியளிப்போமா? எனும்  தொனிப்பொருளில் ஒளிக்கான யாத்திரை இன்று 26 வியாழக்கிழமை காலை  மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடியை வந்தடைந்தது.

காத்தான்குடியை வந்தடைந்த மேற்படி ஒளிக்கான யாத்திரை குழுவை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வரவேற்றதுடன் ,அதற்கான நிகழ்வொன்றையும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி நிகழ்வு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,காத்தான்குடி வைத்தியசாலை,நகர சபை,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,இராணுவம்,தாதியர்கள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,ஜம்இய்யதுல் உலமா ,சுகாதார அமைச்சு போன்றவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு ஒளிக்கான யாத்திரையில் கலந்து கொண்டோர் ரூபா 5500 .செவழித்து வெண்புரை நோயினால் குருட்டுத்தன்மை அடையும் ஒரு நோயாளிக்கு பார்வையைக்கொடுங்கள் எனும் பதாயையை ஏந்தியிருந்தனர்.

பார்வையை வழங்குதல் வாழ்வை வழங்குதலாகும் எனும் உயரிய பணிக்காக காத்தான்குடியிலிருந்து  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,சிட்டி ஒப்டிகல் ,காத்தான்குடியிலுள்ள பாடசாலைகள்,பிரதான வீதியிலுள்ள கடைகள் ஆகியவற்றின் ஊடாக உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கம்,சுகாதாரப் பரிசோதகர்கள்,காத்தான்குடி சம்பத் வங்கி போன்றவற்றின் நிதிகளும் இதன் போது சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவிடம் உத்தியோகபூவமாக கையளிக்கப்பட்டது.

குறித்த ஒளிக்கான யாத்திரை 17 நாட்களில் 330 கிலோ மீற்றர் இலங்கையின்; கிழக்கில் மட்டக்களப்பில் இருந்து நவம்பர் 26 திகதி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீப கால மதிப்பீட்டின்படி இலங்கையில் வெண்பிறை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு மில்லியனுக்கு மேல் உள்ளனர் எனவும் இத் தொகையை நீக்குவதற்கு வருடத்திற்கு குறைந்தது 200,000 சத்திரசிகிச்சைகளாவது செய்யப்பட வேண்டும் என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




























Read More
avathani Media Network

சிட்டி ஒப்டிகல் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறை மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் திறந்து வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கடந்த 8 வருட காலமாக காத்தான்குடி பிரதேசத்தில் பொது மக்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் கண் பரிசோதனை போன்ற சேவைகளை சிறப்பாக வழங்கி வரும் சிட்டி ஒப்டிகல் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறை மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக இன்று 26 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறையை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

சிட்டி ஒப்டிகல் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் உரிமையாளர் கண் பரிசோதகர் எஸ்.எம்.சமீல் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் ,வர்த்தக ஸ்தானங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறை திறப்பு விழாவை முன்னிட்டு காத்தான்குடி முதியோர் இல்லத்திலுள்ள கண் பார்வை குறைவுள்ள சிலருக்கும்,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கும் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று 26 நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கி வைக்கப்பட்டது.

குளிரூட்டப்பட்ட குறித்த மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தில் கணணி மயப்படுத்தப்பட்ட கண் பரிசோதனை,பயிற்றுவிக்கப்பட்ட கண் பரிசோதகர்கள் மூலம் கண் பரிசோதனை,பல விதமான மூக்குக் கண்ணாடிகள்,சன் கிளாசுகள்,வாசிப்பதற்கு உகந்த மூக்குக் கண்ணாடிகள்,கண் வில்லைகள் (லென்ஸ்),துரித கெதியில் கண் வில்லைகளை மூக்குக் கண்ணாடியில் பொறுத்திக் கொடுத்தல் போன்ற சேவைகளை பொது மக்கள் பெற முடியுமென  சிட்டி ஒப்டிகள் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறையின் பொறுப்பாளர் செட்.எம்.சஜி தெரிவித்தார்.

























Read More
avathani Media Network

துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஒரு நாள் ஊடகச் செயலமர்வு...

(ஜுனைட்.எம்.பஹ்த்)
துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஒரு நாள் ஊடகச் செயலமர்வு எதிர்வரும் 12.12.2015 சனிக்கிழமை அன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம் முழு நாள் ஊடகச் செயலமர்வில் பிரபல வானொலி-தொலைக்கா
ட்சி சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர், வளவாளர் சிராஜ் மசூர் ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றுவதுடன் செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றன.

மேலும், ஊடகம் சார்ந்த உப தலைப்புகளுடனான சிறு விளக்கவுரைகளும் இங்கே இடம்பெறும்.
இளைஞர்,யுவதிகள், மாணவர்கள்,ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புகின்றவர்கள் மற்றும் ஊடகத் துறை சார்ந்து மேலதிக அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்த முழு நாள் ஊடகச் செயலமர்வில் பங்குபற்ற முடியும்.
அறிவுப்புத் துறை சார்ந்து கலந்து கொள்ளும் இளம் அறிவிப்பாளர்களுக்கு இச்செயலமர்வில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் சிறப்பு வழிகாட்டலுடன் கூடிய அறிவிப்புத் துறை நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றன.
கலந்து கொள்ளும் மாணவர்களின் ஊடகம் சார் திறமையை இங்கே வெளிப்படுத்தி துறைசார்ந்தவர்க
ளால் மேலும் செப்பனிட்டுக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பதிவுகளுக்கும்,மேலதிக தொடர்புகளுக்கும்- 077 407 3361, 0777 226 760
Read More
avathani Media Network

25 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் -ஒரு பண்ணையாளருக்கு தலா 20 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்படி கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 24 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனினால் தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கோழிக் குஞ்சுகள் பீ.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 25 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் ஒரு பண்ணையாளருக்கு தலா 20 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Read More