Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 2, 2015

avathani Media Network

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட விளையாட்டு நிகழ்வுகள்.

சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு புனர் வாழ்வு அமைப்புக்களுடன் இணைந்து 3 நாள் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் முதலாவது நாள் நிகழ்வாக மக்கள் பிரதிநிதிகள் மாற்றுத்திரனாளிகளை சந்திக்கும் நிகழ்வு  நேற்று நடைபெற்று முடிந்தது.

2 வது நாளாக இன்று விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கி உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காலையில் சைக்கில் ஒட்டமும் அதனைதொடர்ந்து கிரிக்கட், பூட்போல், வொலிபோல் போன்ற இன்னும் பல விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக Mr. V. தவராஸா (பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு), Mr. S. ரங்கநாதன் (பிரதேச பிரதிச்செயலாளர் மட்டக்களப்பு), Mr. அலெக்ஸ் பென்ஜெமின் (கிழக்கு பகுதி முகாமையாளர் வோர்ல்டு விஷன்), Mr. M. உதயகுமார் (மட்டக்களப்பு மாநகராட்சி அதிகாரி), Mr. K. கான்டீபன் (கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி இயக்குனர்),  Mr. செல்வராஸா (தலைவர் ட்ரேட் யூனியன் மட்டக்களப்பு) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதலாவது நிகழ்வான சைக்கிளோட்டம் Mr. V. தவராஸா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

3வது நாளான நாளை ஊர்வலம் ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார். ஊர்வலமானது மட்டக்களப்பு சென்மைகள் கல்லூரியில் ஆரம்பித்து மட்டக்களப்பு மகஜனக்கல்லூர்யை வந்தடையும் என அவர்கள் தெரிவித்தனர்.


Read More
avathani Media Network

நாவிதன் வெளிப் பிரதேசத்தின் அழுகுரலுக்கு கிடைத்த பரிசு.


எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றாக இருந்து வந்த பாதைகளின் பிரச்சினையை நிர்த்தி செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லும் வகையில் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் சார்பில் கல்முனை தொகுதி இணைப்பாளராகிய நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு சென்றிருந்தேன் .


.அந்த மகஜரை சம்பந்தப்படுத்திய ஊடக அறிக்கை ஒன்றையும் கடந்த நவம்பர் 18,19,20ம் திகதி ஊடகங்களில் வெளியிட்டிருந்தோம் .என்பது சகலரும் அறிந்ததே. சமுகம் கேட்பார் பார்ப்பார் இன்றி அனாதையாக எடுப்பார் கைபொம்மையாக இருந்த போது எங்களுடை கட்சி இந்த பிரச்சினையை மக்கள் மயப்படுத்தி சம்பந்த பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக எங்கள் கட்சி சார்பில் நாம் எடுத்த முதலாவது முயற்சி வெற்றியடைந்துள்ளது.
எமது பாதைகளின் நிலையை அறிந்து நாவிதன்வெளி பிரதேச சபையினால் வீதிகளை சரிசெய்வதற்கான கேள்வி மனுவை கோரியுள்ளார்கள் .(கடந்த நவம்பர் 30 ம் திகதிய தினகரன் 06ம் பக்கம்) இதன் மூலம் சமூகம் விழித்தால் எமது மக்கள் பிரதிநிதிகளால் உறங்க முடியாது என்பது எம்மால் உணர கூடியதாக உள்ளதையும் இங்கு சுற்றிகாட்ட விரும்புகிறேன்.
அத்துடன் இன்சா அல்லாஹ் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் முழு முயற்சியால் மிக விரைவில் எமது 06ம் கொலனி பிரதேசத்தில் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை அமைக்க முழு முயற்சியுடன் இறங்கியுள்ளதையும் இவ்வேளையில் தெரிவித்துவைக்க விரும்புகிறேன்.

என இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் கல்முனை தொகுதி இணைப்பாளரும், அல்-மீசான் பௌண்டேசனின் கல்வித்துறைக்கான பிரதிப்பணிப்பாளருமான தாஹிர் முஹம்மது சபீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

எமது மனுவை ஏற்று உடனடியாக அமுல்படுத்த முன்வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்.இதனை மக்கள் கவனத்திற்க்கு கொண்டுசேர்த்த 40க்கும் அதிகமான ஊடக நிறுவனங்களுக்கும் இவ்வேளையில் தனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 





Read More
avathani Media Network

குயீசின் நிறுவனத்தின் அனுசரனையுடன் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் ,பாதணிகள் இலவசமாக பகிர்ந்தளிப்பு!

(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)
2016ஆம் கல்வி ஆண்டுக்காக பாடசாலை செல்லும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள்; மற்றும பாதணிகள் போன்றவற்றை வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கொழும்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
கொழும்பு மருதானை டெம்பல் வீதி இலக்கம் 198 என்ற முகவரியில் இயங்கும் குயீசின் நிறுவனத்தின் அனுசரணையுடன்  நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபாகணேசன் பிரதம அதிதியாகவும் ,ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் தலைவரான கலாநிதி யூசுப் கே.மரிக்கார் கௌரவ அதிதியாகவும் கலந்துக் கொண்டதுடன் மாணவ மாணவிகளுக்கான அப்பியாசக்கொப்பிகள்; மற்றும பாதணிகள் போன்றவற்றையும் வழங்கி வைத்தனர்.
அத்தோடு வறிய மாணவ மாணவிகளின் நலன் கருதி தனிப்பட்ட ரீதியில் உதவ முன்வந்த குயீசின் நிறுவனத்தின் சிறந்த சேவையை முன்னாள் பிரதி அமைச்சரான பிரபா கணேசன், ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் தலைவரான யூசுப் கே.மரிக்கார ஆகியோரும்; வெகுவாக பாராட்டினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குயீசின் நிறுவன பணிப்பாளர் பாத்திமா ஸசீனா பாயிஸ் தனதுரையில் தமது நிறுவனம் மூன்றாவது தடவையாக இந்த நிகழ்வினை நடத்துவதாகவும் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டுமன்றி தமிழ் சிங்கள கிறிஸ்தவம் என அனைத்து இன மாணவர்களுக்கும் தமது நிறுவனத்தின் சேவைகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குடும்பப்பெண்களுக்காக இலவச ஆங்கில வகுப்புகளையும் சலுகை கட்டணத்தில் சமையல் வகுப்புகளையும்  நடத்தி வரும் இந்த நிறுவனம், எதிர்காலத்தில் விதவையருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குதல் மற்றும் சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவோருக்கு நிதி உதவிகளை வழங்குதல் போன்ற  மேலும் பல சமூகநல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலவச கண் சிகிச்சை முகாம், வைத்திய முகாம் போன்றவற்றையும் கொழும்பில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றில் கலந்துக்கொள்ள விரும்புவோர் தமது நிறுவனத்தின் 0774302314 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குயீசின் நிறுவன பணிப்பாளர் பாத்திமா ஸசீனா பாயிஸ் கேட்டுக் கொண்டார். 
இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா, முஸம்மில் மற்றும் தேசமான்ய மர்ளியா சித்தீக் ,பவாஸா தாஹா மற்றும் லயன்ஸ் கழகத்தைச்   ரஸீதா பானு, குயீசின் நிறுவனத்தைச்சேர்ந்த சஹாமா ஜவ்ஹர் ,கவிமணி நஜ்முல் ஹுசைன், இளநெஞ்சன் முர்ஷிதீன் உட்பட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 
குயீசின் நிறுவனத்தின் அனுசரணையுடன்  பெண்களுக்காக நடைபெற்ற சமையல் வகுப்புகளில் கலந்துக் கொண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்நிகழ்வின் போது பரிசில்;களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல பாடசாவைகளின் மாணவ மாணவிகள் இந்த நிகழ்வின் போது அப்பியாசக்கொப்பிகளையும்  பாதணிகளையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை அறிவிப்பாளரான எஸ்.எம்.. கரீம் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்.





தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

Read More
avathani Media Network

பிள்ளையான் மட்டு.நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். 14 நாள் விளக்கமறியல உத்தரவு

(நமது நிருபர்)
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.
இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2005.12.25 ம்திதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை  குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படுவதையொட்டி மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Read More
avathani Media Network

2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்ப்பு


Read More
avathani Media Network

கவிதை - பெற்றோரின் பார்வையிலே பெண்பிள்ளை வளருவது...

தாய் தந்தையரின்
கவணயீனம்...!
அதனால் பறிபோகிறது
 பாடசாலை மாணவிகளின் அழகிய எதிர்காலம்...!!

முதலில் தெரிந்து கொள்..!
பெண் பிள்ளைகள்
பருவ வயதை அடைந்து விட்டால்
மனதிற்குல் புகுந்து விடும்
அறியாத ஆசைகளின் கோலம்...!

அதில் அறிவில் துணையாய்
நீ நின்று 
அவர்கள் மானம் காக்க வில்லையென்றால் 
கண்ணீரில் 
மூழ்கி விடும் அவர்கள் முழு வாழ்வும்...!!

இது 
ஆசை மிருகங்கள் வாழும் கலி காலம்...!
இளம் பெண் தனிமையில் உலவினால் 
ஆண்களில் ஒரு கூட்டமே 
காமக் காதலுடன்
பின்னே வரும் வலம்...!

உன் பிள்ளையை 
தனிமையில் அனுப்பி 
நீயே கொடுக்காதே அவர்கள் மானத்தை...!!

முக்கியமாய் 
வாகனத்தில் அனுப்புவதில் கவனம்!
இன்றைய மனிதர்களில் சிலர்
மிக ஈனம்...!

ஆசை வார்த்தைகளாலே
காமப் பசிக்கு 
கவர்ந்திழுப்பார் சிலர்

உன் பிள்ளையை 
தனிமையில் எங்கும்
அனுப்பாதே ஒரு நாளும்...!!

உன் 
பெண் பிள்ளையை
இதயத்து முழு அன்பால் 
என்றுமே நெருங்கு...!

உன் பாதுகாப்பின் கண்
உதயத்திலே உள்ளது
அவர்கள் எதிர்கால
மன மகிழ்வின் அரங்கு...!!

சமூக சிந்தனைக் கவி வரிகளுடன்..
. கவி புரட்சியாளன் நஜீம்...
Read More
avathani Media Network

சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார்.
 
சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன.
 
புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 
விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையின் பல இடங்களில் மின்சார தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்தும் பொதுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குப் புறப்படும் 12 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
 
சென்னையைத் தென்மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் பல மணிநேரங்களாக நீடிக்கிறது.
 
மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகளில் துவங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல்வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

அரச ஊழியர்களின் ரூ10,000 கொடுப்பனவு ஓய்வூதியத்துடன் சேர்ப்பு

பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை இன்று (2) முதல் ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்க்கவிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். 2010ல் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கடந்த அரசாங்கம் கூறியது. ஆனால் அதனை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை. ஆனால் தாம் வாக்களித்ததைப் போன்று 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்க்கப்படவுள்ளது. இந்தத் தொகையையும் இணைத்தே ஓய்வூதியம் கணிக்கப்படும் என அமைச்சர் கூறினார். அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.
யுத்தத்திற்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதால் பொருளாதாரம் பின்னடைந்தது. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பொன்னான சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆனால் அதனை ராஜபக்ஷ அரசு பயன்படுத்தவில்லை.
இந்த வரவுசெலவுத்திட்டத்தினூடாக கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தடவைகள் காஸ் விலைகளை குறைத்துள்ளோம். குழந்தை பால்மா 20 ரூபாவினால் குறைக்கப்பட்டது. பால்மா 90 ரூபாவினால் குறைத்துள்ளோம் என்றார்.
Read More
avathani Media Network

தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும்

குற்றம் உறுதி செய்­யப்­ப­டாத அர­சியல் கைதி­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய வேண்டும். இந்த விட­யத்­தில் இன­வாத குழுக்­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்­சப்­போ­வ­தில்லை. சிறிய குழு­வி­னர்­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்­சினால் அர­சாங்­கத்­தினால் எத­னையும் செய்­ய­மு­டி­யாது.
தேசிய பிரச்­சி­னையை இதற்கு மேலும் இழுத்­த­டிக்க முடி­யாது . இதற்கு உரிய தீர்­வினை நாம் வழங்­குவோம். அதற்­கான வேலைத்­திட்­டங்கள் ஜன­வரி முதல் ஆரம்­பிக்­கப்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.
அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட அதி­கா­ர­ப்ப­ர­வ­லாக்­கமே சிறந்­த­தாகும். எனினும் அதற்கு அப்பால் சென்று அதி­கா­ரத்தை பர­வ­லாக்கம் செய்­யவே நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். இதனை உள்­ள­டக்­கிய தேசிய நல்­லி­ணக்க கொள்­கையை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்க வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
இறுதி யுத்­தத்தின் போது யுத்­த­க்குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம். ஆகவே குற்றம் இழைக்­கப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். இது தொடர்பில் விசேட நீதி­மன்றம் ஊடாக விசா­ரணை செய்­யப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் மிகவும் அவ­சி­ய­மாகும். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை புதிய அர­சாங்கம் ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் ஜன­வரி முதல் நல்­லி­ணக்­கத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு விசேட வேலைத்­திட்­ட­மொன்றை நாம் ஆரம்­பிக்­க­வுள்ளோம். இதனை தேசிய நல்­லி­ணக்க மற்றும் சமூக ஒரு­மைப்­பாட்டு அலு­வ­ல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கண்­கா­ணிப்பின் கீழ் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.
நாட்டில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளாக பாரிய யுத்தம் நடை­பெற்று வந்­துள்­ளது. விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ர­ாக யுத்தம் செய்து அதில் வெற்­றி­கொண்ட போதிலும் நாட்டில் வாழும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் தோல்­விக்­கண்டு விட்டோம். யுத்தம் நிறை­வ­டைந்து சுமார் ஏழு வரு­டங்கள் புர்த்­தி­யான போதிலும் சமா­தா­னத்­திற்­கான எந்­த­வொரு தீர்க்­க­மான திட்­டங்­களும் முன்­னைய ஆட்­சியின் போது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. எனினும் புதிய அர­சாங்­கத்­தினால் இதற்­கான ஏற்­பா­டு­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.
நல்­லி­ணக்க வேலைத்­திட்டம்
ஜன­வரி மாதம் முதல் நல்­லி­ணக்க வேலைத்­திட்ட செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனை நான்கு நிறு­வ­னங்­களின் ஊடாக நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்­க­ளி­ட­மி­ருந்து தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வினை காண்­ப­தற்­கான கருத்­துக்­களை கோர­வுள்ளோம். யுத்­ததின் கார­ண­மாக 30 வரு­டங்­க­ளாக தமிழ் மக்­களின் அபிப்பி­ரா­யங்கள் வெளிப்­ப­டா­மலே போயுள்­ளன. ஆகவே இது குறித்து எமது அலு­வ­லகம் விசேட அவ­தானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனை முன்­னிட்டு நாம் குறித்த மாகா­ணங்­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்ளோம்.
இது தொடர்பில் அனைத்து அர­சி­யல்­கட்­சி­க­ளையும் சந்­திப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். குறிப்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சிறுப்­பான்­மை­யின அர­சி­யல்­கட்­சி­களை சந்­தித்து அதற்­கான ஏற்­பா­டு­களை மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இது தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னே­ஸ்­வரன் மற்றும் கிழக்கு முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம்.
இந்த வேலைத்­திட்­டத்தின் போது பாட­சா­லைகள் ரீதி­யாக பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். பாட­வி­தா­னங்­களில் நல்­லி­ணக்கம் என்ற பெயரில் புதிய விட­ய­தா­னங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். மேலும் பாட­வி­தா­னங்­களில் நல்­லி­ணத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் ஏதா­வது காணப்­படின் அதனை திருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும். அனைத்து மதங்­களின் அனுஷ்டா­னங்கள் தொடர்பில் மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு தெளிவுட்­ட­வுள்ளோம். அனைத்து மத அனுஷ்­டானங்­களை பாட­சா­லை­களில் அனு‘்­டிப்­ப­தற்கு ஏற்­பா­டு­களை செய்­துள்ளோம்.
அதே­போன்று எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் மொழி கொள்­கையில் பாரிய பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே புதிய கொள்­கையை தயா­ரிக்கும் பணி­க­ளிலும் அவ­தானம் செலுத்­த­வுள்ளோம். அத்­துடன் பெண்­களின் தலை­மையின் கீழ் விசேட குழுக்­களை நிறுவி, அவர்­க­ளது கருத்­துக்­களும் உள்­ள­டங்கும் படி­யாக விசேட திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். அனைத்து நிறு­வ­னங்­க­ளிலும் தமிழ் மொழி ஆற்றல் கொண்­டோரை வேலைக்கு அமர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். நல்­லி­ணக்கம் தொடர்­பான பாட­சாலை மட்­டத்தில் செய­ல­மர்­வு­களை நடத்தி மாண­வர்கள் ஆசி­ரி­யர்­க­ளுக்கு தெளிவூட்­ட­வுள்ளோம். தற்­போது அரச நிறு­வ­னங்­களில் தமிழ் மொழி ஆற்­றல்­ளு­டையோர் 5 சத­வீ­தத்­தி­னரே காணப்­ப­டு­கின்­றனர். ஆகவே இவை அனைத்தும் நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­பாக அமைய கூடும்.
ஆகவே தேசிய நல்­லி­ணக்கம் தொடர்­பாக விசேட கொள்­கை­யொன்றை தயா­ரிக்­க­வுள்ளோம். அதனை அர­சாங்­கத்­திடம் முன்­வைக்­கத்­திட்­ட­மிட்­டுள்ளோம். அதனை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்ளும் என்று நம்­பு­கின்றோம்.
புதிய அர­சி­ய­ல­மைப்பு
ஜன­வரி மாதம் முதல் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். குறித்த யாப்பில் நல்­லி­ணக்­கத்­திற்கு பிர­தான வகி­பாகம் வழங்­கப்­படும். அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அதி­கார பர­வ­லாக்கம் என்­பது 2000 ஆம் ஆண்டு எனது ஆட்­சியின் போது முன்­வைக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு யோச­னையை விடவும் சிறப்­பா­னது. ஆகவே அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு அதி­கார பர­வ­லாக்கம் சிறந்­த­தாகும்.
ஆகவே அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம், பேச்சு சுதந்­திரம், சம­மான உரி­மைகள், மொழி சுதந்­திரம், சம­மான மொழி சுதந்­திரம், என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­படும். இதற்கு புத்­த­ஜீ­விகள், சட்­ட­வல்­லு­னர்­களின் ஆலோ­ச­னைகள் கோரப்­படும்.
அதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.
யுத்தக் குற்றம்
இதே­வேளை இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை விசேட தீர்­மானம் ஒன்­றினை முன்­வைத்­துள்­ளது. எனினும் சர்­வ­தேச விசா­ர­ணையே முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்ட போதிலும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் கீழ் குறித்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துடன் புரிந்­து­ணர்­வுக்கு வந்­தது. எனினும் உள்­ளக விசா­ர­ணையின் போது தொழில்­நுட்ப உத­வி­களை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள நேரிட்டால் அதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.
எனினும் யுத்­தக்­குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருப்­பதா என்­பது தொடர்பில் ஆரா­யவே உள்­ளக விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது குற்றம் இழைக்­கப்­பட்­ட­வர்கள் விசேட நீதி­மன்­றத்தின் மூல­மாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டுவர்.
அர­சியல் கைதி­களின் விடு­தலை
தற்­போது அர­சாங்­கத்­திற்கு அர­சியல் கைதிகள் விவ­காரம் பெரும் சவா­லாக மாறி­யுள்­ளது. ஆகவே குற்­றங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத அர­சியல் கைதிகள் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும். இந்த விட­யத்தில் மூன்று கட்­டங்­க­ளாக அவ­தா­னிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்­க­மைய சில கைதி­க­ளுக்கு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. அடுத்­த­தாக சில கைதி­களின் வழக்கு எந்­த­வொரு முடிவும் இன்றி கால­தா­மதம் அடைந்து வரு­கின்­றது. இவர்கள் விட­யத்தில் உட­னடி தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் அர­சியல் கைதி­களில் சாட்­சி­யங்கள் குற்­றங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­மனால் அவர்­க­ளுக்­கு­ரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.
இந்த விட­யத்தில் முன்பு அரசின் அனு­ச­ர­னையை பெற்­றுக்­கொண்­டி­ருந்த கே.பி. என்ற குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக சட்டம் கடு­மை­யான முறையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.
இனவாதிகளுக்கு அஞ்சப்போவதில்லை
இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலைகளுக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில் இராவணாபலய போன்ற இனவாத அமைப்புகள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றன. எந்தவொரு நாட்டிலும் அடிப்படைவாதிகள் செயற்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு சிறிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல்களுக்காக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை இரத்து செய்யமுடியாது. இனவாத குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
அத்துடன் இனவாத குழுக்கள் மீளவும் ஆட்சிப்பீடமேறுவதற்கு முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை.
விசேட நீதிமன்றம்
இலங்கையில் கடந்த பத்து வருட காலப்பகுதியில் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எனினும் தற்போது நீதித்துறை சுயாதீன தன்மை ஆக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மோசடிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. ஆகவே இந்த விடயத்தில் நேர்மையான நீதிபதிகளுடன் கூடிய விசேட நீதிமன்றத்தின் ஊடாக உள்ளக பொறிமுறையை முன்னெடுப்போம் என்றார்.
virakesari.lk
Read More
avathani Media Network

துரைவி விருது-2016

2015 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு துரைவி விருது வழங்கப்படவுள்ளது.தெரிவுச் செய்யப்படும் சிறந்த நூல் ஒன்றுக்கும் தலா 5000.00 ரூபாவும், விருதும், சான்றிதழும் வழங்கப்படும்.
கட்டுரைத் தொகுப்பு
கலை இலக்கிய விமர்சனம், ஆய்வு, கோட்பாடுகள் போன்ற வகையான ஆக்கங்கள்கொண்ட நூலாக இருத்தல் வேண்டும்.
மொழிபெயர்ப்பு நூல்
மொழிபெயர்ப்பு நூலின் மூலப்படைப்பு உலகின் எந்த மொழியிலும் வெளிவந்தாகவும் இருக்கலாம
Read More