Featured Home (TOP)

Recent Comments

Tuesday, December 8, 2015

avathani Media Network

ஒரு சிறுபான்மை இனத்தினுடைய மத நம்பிக்கையினை விமர்சிப்பதென்பது ஓர் அநாகரிகமான செயலாகும். - பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

(ஜுனைட்.எம்.பஹ்த்)
ஒரு சிறுபான்மை இனத்தினுடைய மத நம்பிக்கையிலே பெரும்பான்மையான சிறுபான்மை சமூகம் ஒன்று விமர்சிப்பதென்பது ஓர் அநாகரிகமான செயலாகும் என கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இன்று நடைபெற்ற
நிகழ்வொன்றில் தெரிவித்தார்.....
இந் நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக முஸ்லீம்களுடைய மத நம்பிக்கை மற்றும், முஸ்லிம்களுடைய செயற்பாடுகள் சம்பந்தமாக
மிக மோசமான பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில்
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுமந்திரன் மற்றும் கௌரவ யோகேஸ்வரன் போன்றவர்களால் நேரடியாக முஸ்லிம்களை தாக்குகின்ற விதத்தில் கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
கடந்த 4 ம் திகதி பாராளுமன்றத்தில் பாதுகாப்பு, நிதி மற்றும் சட்டம் ஒழுங்கு
அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது இஸ்லாமிய ‘ஷரீஆ’ சட்டத்தை விமர்சித்து
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கருத்துக்களை
வெளியிட்டிருந்தார். ‘ஷரீஆ’ சட்டம் என்பது மனிதனையும் இந்த உலகினையும் படைத்து, மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை வழி காட்டிய இறைவனால்
அமைக்கப்பட்ட சட்டமாகும். எமது நாட்டிலே குற்றச் செயல்கள் அதிலும் குறிப்பாக
சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் மீதான வல்லுறவு, கொலை, கொள்ளை, போதைவஸ்து பாவனை
போன்றவைகள் அதிகரித்திருப்பதற்கான காரணம் தண்டனைகள் நிறைவேற்றப்படாமையாகும்.
குற்றம் புரிபவர்கள் கைதிகளாக்கப்படுவதும் அவர்கள் பிணையில்
விடுவிக்கப்படுவதும் அல்லது சிறையில் சிறிது காலம் அடைக்கப்படுவதும், சிறிய
தண்டனைகளால் குற்றம் புரிபவர்கள் தாம் புரிகின்ற குற்றத்திற்கான தண்டனை குறைவு என நினைத்து அதனை புறக்கணித்து தொடர்ந்தும் மற்றவர்களையும் குற்றம் புரியத்
தூண்டுகின்ற செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்
போது “ஷரீஆ” சட்டம் அமுலிம் உள்ள நாடுகளில் குற்றத்தின் அளவு ஒப்பீட்டளவில்
குறைந்தே காணப்படுகின்றன.
ஆகவே, இது சம்பந்தமாக விமர்சிப்பதற்கு கௌரவ
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது.
கடந்த காலத்தில் பேரினவாத சக்திகள் சில இன ரீதியாக செயற்பட்ட போது சிறுபான்மை
இனங்கள் ஓன்று பட்டு அதனை எதிர்த்தது. இப்போது ஒரு சிறுபான்மை இனத்தினுடைய மத நம்பிக்கையினை பெரும்பான்மையான சிறுபான்மை சமூகம் ஒன்று, மற்றுமொரு சிறுபான்மை
சமூகத்தினை விமர்சிப்பதென்பது ஓர் இழிவான செயலாகும்.
முஸ்லிம்கள் யாரும்
இன்னொருவருடைய நம்பிக்கையை விமர்சிப்பது கிடையாது. ஏனெனில் அவ்வாறு
இஸ்லாத்தில் வழி காட்டப்படவில்லை.
மற்றவர்களுடைய மதத்தை மதிக்குமாறும், அவர்களுடைய நம்பிக்கைக்கு எந்தவித களங்கங்களையும் ஏற்படுத்துதல் கூடாது என்று இஸ்லாத்தில் வழி காட்டப்பட்டிருக்கின்றது. ஆக, கல்வியில் ஓர் சிறந்த ஓர்
நிதானப் போக்குடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இவ்வாறு நேரடியாக ஒரு மதத்தினுடைய நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற செயலை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.
முஸ்லீம்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதால் தங்களது தனித்துவத்தை இழந்து தமிழ் பேசும் தமிழர்களாக வாழ வேண்டும் என்று எண்ணிய புலிகளுடைய கோட்பாட்டிற்கு ஆதரவான ஒரு செயலாகவே இதனை நான் பார்க்கிறேன். இதே போன்று கடந்த 05.12.2015 ல் மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி சிவதொண்டர் மாநாட்டில்.ஆறுமுகநாவலரின் எழுச்சிக் கருத்தரங்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
யோகேஸ்வரன் அவர்கள் உரையாற்றும் போது இஸ்லாமியர்களினால் இந்துக்கள் மத மாற்றப்படுகின்ற சூழல் இருக்கிறது என்ற ஓர் நச்சுக் கருத்தினை வெளியிட்டிருந்தார்.
இது தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் முறுகலை
ஏற்படுத்துகின்ற ஓர் செயலாக அமைந்துவிடும். இவ்வாறு கடந்த காலங்களிலும்
நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்து பல இடங்களில் பேசியிருக்கிறார். இஸ்லாம்
மதத்தினை ஏற்றுக்கொள்கின்ற மாற்று மத சகோதரர்கள் எந்தவொரு கட்டத்திலும்
வற்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டோ அல்லது வேறு தந்திரங்கள் பயன் படுத்தப்பட்டோ
அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. மாறாக அவர்கள் பின்பற்றுகின்ற மதத்தின் கொள்கை கோட்பாடுகளையும், இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளையும் விளங்கி தமது பகுத்தறிவினூடாக இஸ்லாத்தை சரி கண்டு மாத்திரமே இஸ்லாத்தை ஏற்கின்றனர். ஆகவே
அரசியல் இலாபங்களுக்காக மதங்களை விமர்சிப்பது இன்னுமொரு சமூகத்தின் மீது
பழிசுமத்துவது போன்ற கீழ்த்தரமான செயல்களை மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக
நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஒற்றுமை பற்றி நாவினால் பேசாமல் உள்ளத்தினால்
பேசவேண்டும். சமூகங்களை மூட்டிவிட்டு அரசியல் இலாபம் தேடுகின்ற குரோதமிக்க
இழிவான அரசியல் செயட்பாட்டிலிருந்து விடுபட்டு கிடைக்கப் பெற்றிருக்கின்ற
நல்லாட்சியினூடாக இன ஒற்றுமையை பேணுவதற்குரிய ஆக்கபூர்வமான செயல்களில் இறங்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்நோக்கி உள்ள மாணவ சகோதரர்களுடன் ஒரு பகிர்வு..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்..
மாணவ சகோதர சகோதரிகளே அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வங்களில் மிகப் பெருமதிவாய்ந்த செல்வங்களில் ஒன்றுதான் கல்விச் செல்வம். அத்தகைய செல்வம் எமக்கு அருளப்பட்டுள்ளது.அல்ஹம்துலிலாஹ்.
உங்களது எதிர்கால வாழ்க்கை நோக்கிய கல்விப்பயணத்தில் மிக முக்கியமான கட்டத்தை எதிர் நோக்கியுள்ளீர்கள் அதுதான் இன்று நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் பொதுப் பரீட்சை இப் பரீட்சையின் பெறுபேற்றுக்குப் பின்னர் சிலரது பாடசாலை வாழ்வு வெற்றிகரமாக தொடரும் ஆனால் சிலரது பாடசாலை வாழ்வு முற்றுப்பெற்றுவிடும். பின்னர் அவர்கள் வாழ்க்கை வேறு வழிகளில்  பயணம் தொடரும்.
எமது வாழ்க்கையில் சரியான சிறந்த வாழ்வை தீர்மானிக்கும் இப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினன  பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்..
இப் பரீட்சை இன் பின்னர் சில மாணவ சகோதரர்கள் சிறையில் இருந்து விடுதலை கிடைத்த உணர்வோடு அதனை மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள் இவை மிகத்தவறான  செயற்பாடுகளாகும்.
அதாவது மாணவ மாணவியர்கள் பரீட்சை முடிந்த பின்னர் வீதிகளில் ஆங்காங்கே கூட்டமாக நிற்பதும் வீதிகளில் கூட்டமாக பயணிப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும் ஏன் எனில் உங்களது இச் செயற்பாடுகளினால் வீதிகளில் பயணிக்கும் போதுமக்கள் மிகவும்  சிரமத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது.
அதே போல் மாணவர்கள் பிரியாவிடை என்ற பெயரில் பிற மாணவர்கள் மீது கலர் மை  பூசுவது,முட்டை வீசியடிப்பது இது போன்ற அன்னிய கலாச்சாரத்தை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.. இச் செயற்பாடுகள் அல்லாஹ்வினது மிகவும் கோபத்தை உண்டாகும் .
முஸ்லிம்களாகிய நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு ஒப்பானவர்கள் அல்லர்..
எனவே அன்பான மாணவ சகோதர சகோதரிகளே இது உங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டம் சிந்தியுங்கள்,முயற்சி செய்யுங்கள், அல்லாஹ்விடம் நெருக்கமாகி அவனது அன்பையும் அருளையும் பெற்று இந்நாட்டிற்கும் முஸ்லிம் சமுகத்திற்கும் சிறந்த ஒரு முன்மாதிரியாக வரவேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்..
ஜு னைட்.எம்.பஹ்த்
ஊடகவியளாளன்.
பணிப்பாளர்.
முஹாசபா மீடியா நெட்வொர்க்.
Read More
avathani Media Network

சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் இலங்கையில் மீட்பு

திருகோணமலை கடற்கரையில் நேற்றுமுன்தினம் மாலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. பொலிசார், அதனை மீட்டு சோதனையிட்டனர். சட்டைப் பையில் ‘சென்னை சென்ட்ரல் கால் டாக்சி டிரைவர் அசோசியேஷன்’ என்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தது.

அதில், என்.பூமிதுரை என்ற பெயருடன், முகவரி ‘13/15, என்ஜிஓ காலனி, காமராஜர் நகர், சூளைமேடு, சென்னை-94’ என்றும் இருந்தது. இதையடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், பொலிசார் தகவல் தெரிவித்தனர். திருகோணமலை வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் பெய்த கனமழையால் இவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். வங்கக்கடலில் வெள்ளநீரோடு இவரது உடல் சென்று, நீரோட்டத்தின் போக்கில், இந்தியப் பெருங்கடலுக்கு இழுத்து வரப்பட்டு, இங்கு கரை ஒதுங்கியிருக்கிறது.

உடற்பகுதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்,’’ என்றார், என தமிழக ஊடகமான தினகரன் குறிப்பிட்டுள்ளது.

தகவல் அறிந்து சூளைமேடு பொலிசார் விசாரணை நடத்தியதில் பூமிதுரை கோவையில் டாக்சி டிரைவராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. எனவே அவரது அடையாள அட்டையை வேறு ஒருவர் பயன்படுத்தி வந்திருக்கலாம். அவர் உடல்தான் இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது என உறுதியானது. இதையடுத்து அவர் யார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
adaderana.lk
Read More
avathani Media Network

ரயில்களில் பயண சீட்டு இன்றி பயணித்தால் இரு மடங்கு தண்டனை

பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக அறவிடுவதுடன் பயணச் சீட்டின் பெறுமதியில் இருமடங்கு அறவிடப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது
இச்சட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 
Read More
avathani Media Network

பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை


2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. 

இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தடையை மீறி இவ்வாறான பொருட்களை பரீட்சை மண்டபத்திற்கு எடுத்துச் செல்லும் பரீட்சார்த்திகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்த மாணவர்களின் பெறுபேறுகள் வௌியிடப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
Read More
avathani Media Network

இலங்கைப் பணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை மீள்பரிசீலனை

இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனை மறு பரிசீலனை செய்யப்படுவதாக, செய்திகள் வௌியாகியுள்ளன.
குறித்த தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
45 வயதுடை குறித்த பெண் மூன்று குழந்தைகளின் தாயாவார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து சவுதியில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கு பிரிதொரு ஆணுடன் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்தக் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில், கல்லால் அடித்துக் கொல்லுமாறு சவுதி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதோடு, இதனுடன் தொடர்புடைய ஆணுக்கு 100 கசையடிகளை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் குறித்த பெண்ணின் கணவர் இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தை தொடர்பு கொண்டார். இதனைடுத்து இலங்கை அரசாங்கம் குறித்த தண்டனையை மறு பரிசீலனை செய்யுமாறு சவுதி அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் உபுல் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் இருப்பினும் வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் இது குறித்து மேன்முறையீடு செய்துள்ளதாகவும், வௌிவிவகார அமைச்சின் சார்பில் இராஜதந்திர மட்டத்தில் சவுதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More
avathani Media Network

விரைவில் இணையத்தில் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை வழங்கலாம்!

சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஷேடமாக வடக்கிலுள்ள மக்கள் இலஞ்சம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயக்கம் காட்டுவதாக கூறிய ஆணைக்குழு, அவர்கள் இது குறித்து சரியான புரிந்துணர்வு இன்றி செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் விரைவில் இணையத்தின் மூலம் முறைப்பாடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
Read More
avathani Media Network

ஒசுசல அமைப்பதிலும் பொத்துவில் புறக்கணிப்பா?

(மரியமின் புத்திரன்)
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அரச ஒசுசல மருந்தகத்தை நிறுவ எடுக்கும்முயற்சியானது பாராட்டப்படவேண்டியது. எனினும் அரச ஒசுசல அயைமயப்பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பொத்துவில் ஓரவஞ்சிக்கப்பட்டதானது துரோகத்தனமாகும்.

சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் கௌ-பைசல் காசிம் அவர்களினால் அம்பாறை மாவட்டத்தில் அரச ஒசுசல  மருந்தகத்தை அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிரதேசங்களைப் பார்க்கின்றபோது கௌ- பிரதியமைச்சரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியதும் அபிவிருத்தியில் ஓரவஞ்சனை காட்டப்படும் பிரதேசமுமான பொத்துவில் புறக்கணிக்கப்பட்டிருப்பது  கௌ-பைசல் காசிம் அவர்கள் பொத்துவில் ஏழை மக்களுக்கும்  அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் செய்யும் நன்றிக்கடனா? 

அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை , மருதமுனையென்று மிக அருகருகே இருக்கும் பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகத்தை நிறுவ எடுக்கும் முயற்சியில் திருக்​கோவில் ,  பொத்துவில் பிரதேசங்களிலும் நிறுவுவதற்கு பிரதியமைச்சரவர்கள் நடவடிக்கையெடுப்பாரா..?


Read More