
வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை! தனியார் பஸ் உரிமையாளர்கள்
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.
நாளை 15ம் திகதி அரச, அரை அரசாங்க (semi-government) மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று முன்தினம் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இதனைக் கூறினர்.
இந்தநிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.





