Featured Home (TOP)

Recent Comments

Sunday, January 17, 2016

avathani Media Network

2016ம் ஆண்டிற்கான தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
புதிய காத்தான்குடி, றிஸ்வி நகர், மட்/மம/ அல் இக்பால் வித்தியலத்தின் 2016ம்
ஆண்டிற்கான தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, கணணி இயந்திரம்
மற்றும் LED தொலைக்காட்சி பெட்டி கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ்
VM. ஹனீபா அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (14.01.2016)
அன்று நடைபெற்றது,

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ் MM. அப்துல் கபூர் (மதனி, BA) (ISA - இஸ்லாம்), அல்ஹாஜ் M. அலாவுதீன் ஆசிரியர்
(ISA - ஆரம்ப கல்வி), உளவள ஆலோசகர் முஹைதீன் ஷாலிஹ், மஸ்ஜிதுஸ் ஸலாஹ்
பள்ளிவாயல் தலைவர் ஜனாப் I. ஜனாப்தீன், மற்றும் மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல்
இமாம் மௌலவி M. மர்சூக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர்
ஷிப்லி பாறூக், இன்றைய இந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது உண்மையில் ஒரு
குழந்தை தனது வாழ்க்கையினை மாற்றி முன்னேரப்போகின்ற ஆரம்ப படியின் முதல் நாளாக
இன்றைய நாள் இருக்கின்றது.

அந்த வகையில் இன்று இப்பாடசாலையில் 30 மாணவர்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது இப்பிரதேசத்தின் கல்வி ஒரு பாரிய வளர்ச்சியினை முன்நோக்கி செல்கின்றது என்பதனை காட்டுகின்றது, ஏனெனில் 3, 4 வருடங்களுக்கு முன்னர் இப் பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆகத்தான் காணப்பட்டது, ஆனால் இன்று 118 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் என்றால் அது மிகப்பாரிய அளவிலான வளர்ச்சியாகும்.

இப் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் VM. ஹனீபா அவர்கள் இப் பாடசாலை கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற என்னத்துடன் தன்னால் முடியுமா முழு முயற்சியினை மேற்கொண்டு அதற்குரிய நபர்களை அனுகி இப் பாடசாலையின், மாணவர்களின் வளர்ச்சிக்கும், மற்றும் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அயராது பாடுபடுகின்றார்.
அந்தவகையில் கடந்த வருடம் 2015 கிழக்கு மாகாணசபை நிதி ஒதிக்கீட்டில் இருந்து
பாடசாலைக்கு கணணி இயந்திரம் அதேபோல் மாணவர்களுக்கு பல கல்விசார் விடயங்களை
காண்பிப்பதற்கு LED தொலைக்காட்சி பெட்டி ஒன்றினையும் பெற்று தருமாறு
வேண்டியிருந்தார், அதன் அடிப்படையில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு எனது மாகாணசபை நிதி ஒதிக்கீட்டில் இருந்து 115,000.00 ரூபாயினை ஒதிக்கீடு செய்து
கணணி இயந்திரம் மற்றும் LED தொலைக்காட்சி பெட்டி என்பனவற்றினை இன்று
கையளித்திருக்கின்றேன். இன்று பாடசாலை அதிபர் அவர்கள் பாடசாலைக்கு ஒரு போட்டோ
கொப்பி இயந்திரம் ஒன்றினை பெற்றுதருமாறு மீண்டும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார், இன்ஷாஅல்லாஹ் 2016ம் ஆண்டின் கிழக்கு மாகாணசபை நிதி ஒதிக்கீட்டில் இருந்து ஒரு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்கின்றேன்.

மேலும் பொதுவாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலையினை யாரும் கண்டு கொல்லாமையினால் இப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பின்னடைந்து செல்கின்றது.
கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும்
மாணவர்கள் மிக திறமையானவர்கள் அதனை வளர்ப்பதற்கு வளப்பற்றாக்குறையாக
காணப்படுகின்றது இதனால் அவர்களது கல்வி பின்னடைந்து செல்வதே தவிர அவர்கள்
திறமையற்றவர்கள் என கருத முடியாது, அவர்கள் மிக திறமையானவர்கள், இங்கு
நடைபெற்ற நிகழ்சிகளை அவதானித்த பொழுது ஒவ்வொரு மாணவர்களும் தனது திறமைகளை
சிறந்த முறையில் வெளிக்காட்டினார்கள். எனவே இப்பிரதேச மாணவர்கள் கல்வியில் கட்டாயம் வளர்ச்சியடைய வேண்டும் இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் நகர்ப்புறத்தினை விட்டு இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எதிர் காலத்தில் இப் பாடசாலையின் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முடியுமான அணைத்து தேவைகளையும் செய்துதருவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்கின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் அவர் குறிப்பிடுகையில் ஒவ்வொரு தாய்மார்களும் தமது
பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் மிகக்கூடிய அக்கறை செலுத்த வேண்டும். நான் ஆற்றுக்கு அப்பால் உள்ள படுவான்கரை பிரதேசங்களுக்கு செல்கின்றபோது
அவதானிக்ககூடிய ஒரு விடயம் என்னவென்றால் மாணவர்கள் தமது கல்வியினை தொடர்வதற்கு குறைந்த பட்சம் வெள்ளை ஆடை அணிவதற்கு கூட கஷ்டப்படுகின்றார்கள், அவ்வாறான நிலையில் அப்பெற்றோர்கள் தமது பிள்ளைகள் ஒரு வைத்தியராக, பொறியியலாளராக,
கல்விமான்களாக ஆகவேண்டும் என்ற வைராக்கியதுடன் பாடுபடுகின்றார்கள்.

மட்டக்களப்பில் பணிபுரியும் எத்தனையோ உயர் அதிகாரிகளில் அனேகமானவர்கள்
ஆற்றுக்கு அப்பால் உள்ள படுவான்கரை பிரதேசங்களில் உள்ளவர்களாகவே
இருக்கின்றார்கள். அதற்கு காரணம் அங்குள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகள்
கல்வியில் உயர் நிலை அடைய வேண்டும் என்ற சிந்தனையுடனும், தியாகத்துடன்
பாடுபடுகின்றார்கள். கடந்த 2015 ஆண்டு உயர்தர பரீட்சையில் மருத்துவபீடத்திற்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவியின் பெற்றோர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்கள், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையினை நடாத்துகின்றனர், அவ்வாறு கஷ்டப்பட்டு தனது
பிள்ளைகளின் கல்விற்காக பாடுபடுகின்ற எத்தனையோ பெற்றோர்களை நாம் காணலாம், எனவே இங்குள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் தியாக சிந்தனையுடனும், அர்பணிப்புடனும்,
தியாகத்துடனும் பாடுபட்டு தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினை வழங்கி அவர்களை
சிறந்ததோர் கல்விமான்களாக வளர்த்தெடுத்து உங்களுக்கும், இந்த பிரதேசத்திற்கும், இந்த நாட்டிற்கும் நற்பெயரையும் கௌரவத்தினையும் பெற்று
தரக்கூடிய நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என தனது உரையில் கேட்டுகொண்டார்.











avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :