Featured Home (TOP)

Recent Comments

Thursday, January 14, 2016

avathani Media Network

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இவ்வருடத்திற்கான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
நான்கு இணைத்தலைமைகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இவ்வருடத்திற்கான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் கடந்த  புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
கடந்த வருடத்தில் நடைபெற்ற 6000க்கும் மேற்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு 2500 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அந்த திட்டங்களில் முடிவடையாத திட்டங்கள் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டுவருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சி.யோகேஸ்வரன், அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான கே.துரைராஜசிங்கம், திருமதி ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரனம் (ஜனா), இரா.துரைரத்தினம், எம்.நடராஜா, சிப்லி பாறூக், ஞா.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி திருச்செல்வம், அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர், அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.









avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :