Featured Home (TOP)

Recent Comments

Saturday, January 23, 2016

avathani Media Network

அரச தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கிவரும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் இவ்வருடம் தாமதம் நிலவி வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஊடக அனுமதி அட்டை கடந்த காலங்களில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உரிய நேரத்திற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் இந்த வருடம் 2016 புதுவருடம் தொடங்கி 23 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் ஊடக அனுமதி அட்டை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தனர்.

இதனால் தற்போது பிராந்திய ஊடகவியலாளர்கள் 2015ம் ஆண்டுடன் கலாவதியான ஊடக அனுமதி அட்டையை தற்போது தங்களிடம் வைத்துள்ளதாகவும், 2016 புதிய வருடத்திற்கான ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் தற்போது காணப்படும் தாமதம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு புதிய வருடத்திற்கான ஊடக அனுமதி அட்டையை அவசரமாக வழங்குமாறும் பிராந்திய ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :