(எம். எச்.எம்.அன்வர்)
அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம் பிரதேசங்கள் எவ்வாறு திருத்தத்தினுள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தொடர்பான சிவி;ல் சமூகத்தை உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 07.02.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேனளத்தில் இடம்பெறவுள்ளது
இந்நிகழ்வினை முன்னிட்டு ஊடகவியலாளர்களுடனான பத்திரிகை மாநாடு சம்மேளன கேட்போர் கூடத்தில் சம்மேளன பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ எல் அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் உறுப்பினரும் மத்தியஸ்தர் சபை தலைவருமான எம் ஜ எம் உசனார்
எதிர்வரும் 25இ26ம் திகதிகளில் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள அரசியல் யாப்பு திருத்த குழுவினருக்கு சம்மேளனத்தின் சார்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரேரனைகள் மற்றும் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை தொகுத்து கையளிக்கவுள்ளோம்
இதற்காக அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் உலமாக்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் உட்பட புத்திஜீவிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி அந்த அறிக்கையினை கைளித்து அரசியல் யாப்பு திருத்தத்தில் முஸ்லிம் சமூகம் பாதிக்காத வகையில் இவை உள்ளடக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்தார்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்
