கொழும்பு தமிழ்ச சங்கத் தலைவர் மு. கதிர்மாமநாதன் அவர்களின் திடீர் மறைவு
மிகவும் அதிர்ச்சியானது. சிறந்த பண்புகள் உள்ள ஒரு மனிதரை தமிழுலகம் இழந்துவிட்டது. தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் மு. கதிர்காமநாதன் அவர்கள். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் மூலம் அவர் தமிழுக்கும் தமிழுலகிற்கும் செய்துள்ள பணி அளப்பரியது. எல்லோரையும் கவரும் வண்ணம் பேசும் ஆற்றல் உள்ளவர் அவரது புன்சிரிப்பால் அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். வலம்புரி கவிதா வட்டத்தோடும் அதன் பணியினிலும் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். அவரது இழப்பு பேரிழப்பாகும். அன்னாரது பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் வகவம் தனது அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.
