(NFGG ஊடகப்பிரிவு)
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முனன்ணி(NFGG)யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2016) காத்தான்குடியில் நடை பெற்றது.
இந்நிகழ்வு NFGG யின் கிழக்குப் பிராந்திய காரியாலயவளாகத்தில் காலை 9.30 க்கு ஆரம்பமானது.
இந்த நிகழ்வின் முதல் அம்சமாக NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் NFGG யின் பிராந்திய சபையின் செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. இதில் NFGG யின் பொதுச்செயலாளர் M.R அஷ்செய்க் நஜா முஹம்மட் அவர்களும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் விசேட உரைகளை ஆற்றினர்.
மேலும், இந்நிகழ்வில் NFGGயின் காத்தான்குடி பிராந்திய சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களான முன்னாள் நகர சபை உறுப்பினர்களான AGM ஹாறூன், MAHM.. மிஹ்ழார், MHA முகம்மட் நஸீர், ஆகியோரும் MM.அமீரலி ஆசிரியர், SHM பிர்தௌஸ், MM.முகம்மது ஜனூப், SMM பஸீர் ஆசிரியர் , ஆகியோர் உள்ளிட்ட NFGGயின் ஏராளமான செயற்குழு உறுப்பினர்களும் பெண்கள் அணிப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அத்தோடு, விசேட அதிதிகளாக காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் காதர் பலாஹி முன்னாள் நகர சபை தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை, முன்னாள் நகர சபை உறுப்பினர்MSM.சியாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதி மாஹிர் ஹாஜியார், ஐக்கிய தேசிய கட்சிப் பிரதிநிதி MHMமுஸ்தபா, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஹில்மி அஹமட் லெவ்வை ஆகியோரும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


















