Featured Home (TOP)

Recent Comments

Wednesday, January 13, 2016

avathani Media Network

"நாட்டின் பொது நன்மைக்கான உழைப்பில் நாமும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும்" பொறியாலாளர் அப்துர் ரஹ்மான்

"நாட்டின் பொது நலன்கள் பாதுகாக்கப்பட்டு நாம் வாழும் தேசத்தின் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுகின்ற போதே நமக்கான பாதுகாப்பும் தீர்வும் கிடைக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.எனவேதான் ஒரு வருடத்திற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பிரச்சினைகளுக்கான ஒட்டு மொத்தத் தீர்வும் நாட்டின் ஆட்சி மாற்றத்திலேயே தங்கியிருக்கிறது என்பதனைப் புரிந்து கொண்டு பாரதூரமான அபாயங்களுக்கு மத்தியிலும் நாம் அதற்காக முன்னின்று உழைத்தோம்" என நல்லாட்சிகான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
 NFGG யின் மக்கள் சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை காத்தான்குடியில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது.
' "இந்த நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடப் பூர்த்தியினை நாம் இன்று நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். எனினும் ஒரு வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் நமது சமூகம் எதிர் கொண்ட பிரச்சினைகளையும் அபாயங்களையும் அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது. அந்த அபாயகரமான சூழ்நிலையில் நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும்அரசியல் வாதிகளும் அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக என்ன செய்தார்கள் என்றும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட அந்த அபாயகரமான சூழ்நிலைகளுக்கான காரணம் அப்போதிருந்த அராஜக ஆட்சி முறையே என்பது எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான உண்மையாகும். இருந்தாலும் கூட அதனை மாற்றியமைப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலமைகள் முன்வரவில்லை.  மாற்றமாக தமது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு மேலும் மேலும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த அராஜக ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்தனர்.
மட்டுமன்றி அதனை வலுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் துணை போனார்கள். அந்த அராஜக ஆட்சியினை வலுப்படுத்துவவதென்பது நாட்டு நலன்களுக்கு மாத்திரமின்றி நம் சமூகத்திற்கும் செய்கின்ற துரோகம் என்பதனைப் புரிந்து கொண்டு நேர்மையுடனும் துணிவுடனும் செயற்பட அவர்கள் முன்வரவில்லை.
இனவாத சக்திகளின் நடவடிக்கைள் அத்து மீறிய சந்தர்ப்பங்களிலெல்லாம் இடைக்கால நிவாரணங்களுக்கு அப்பால் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. உதாரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தாக்குதல்கள் அழுத்கமையில் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் பாதுகாப்புப் பற்றி பேசியதோடு மாத்திரம் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டார்களே தவிர பிரச்சினைகளின் மூல வேரான அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்து முன்வர யாரும் துணியவில்லை.
எனினும் இந்த நாட்டில் அராஜக ஆட்சி நிலவுகின்ற வரை முஸ்லிம் சமூகத்திற்கென்ற தனியான தீர்வை காணமுடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டிருந்தோம். முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியான வாழ்வு என்பது அராஜக ஆட்சி ஒழிக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்ல ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என நாம் நம்பினோம். அதனாலேயே நாம் அவ்வாறான அச்சுறுத்தலான உயிருக்கே உத்தரவாதமில்லாத கால கட்டத்திலும் கூட ஆட்சிமாற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் களத்தில் நின்றுழைத்தோம்
இவ்வாறான ஒரு பாரிய ஆட்சி மாற்றம் என்பது ஒரு கூட்டு முயற்சியின் மூலமே சாத்தியமானது. இதற்காக ஐ.தே.கட்சியின் தலைமையில் சுமார் 40 சிறிய கட்சிகளும்அமைப்புகளும் ஒன்றிணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தமே மைத்திரிபால சிறிசேனாவுக்கும் கூட நம்பிக்கையூட்டுகின்ற ஒன்றாக மாறியிருந்தது. பொது நன்மைக்காக ஒரு பாரிய கூட்டுழைப்பு மேற்கொள்ளப்பட்ட அந்த சந்தர்ப்பத்திலும்கூட வெற்றியென்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே நமது முஸ்லிம் தலைமைகள் அதில் இணைந்து கொண்டன என்பதும் இத்தருணத்தில் நாம் நினைவுகூர வேண்டிய விடயமாகும்.
எனவேதான் சிறுபான்மையாக நாம் இங்கு வாழ்ந்தாலும் கூட பொது நன்மைக்காக உழைப்பதில் சம பங்காளிகளாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். பொது நலன்களைப் பாதுகாத்து நாட்டு நலன்களை முன்னேற்றுவதிலேயே நமது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வும் முன்னேற்றமும் தங்கியிருக்கிறது என்பது எமது நிலைப்பாடாகும்.
அந்த அடிப்படையிலேயே பொது நீரோட்டத்தில் பொது நன்மைகளுக்காக உழைக்கும்  பணியில் முஸ்லிம் சமூகத்தையும் விழிப்பூட்டி இணைக்கின்ற வகையில் நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்"
Read More
avathani Media Network

அனைத்து மாவட்டங்களிலும் சமநிலையான அபிவிருத்தி ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி

அனைத்து மாவட்டங்களிலும் சமநிலையான அபிவிருத்தி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் ஒரு மாவட்டத்திற்கு கூடுதல் நலன்களையும், மற்றுமொரு மாவட்டத்திற்கு குறைந்த நலன்களையும் வழங்கும் கொள்கைகளை பின்பற்றாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிகந்த இலங்கை வங்கி கிளையை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பொலனறுவை மாவட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் நிவர்த்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை

தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஏதிர்வரும் தினங்களில் இந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்வரும் 27ம் திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் உத்தரவிட்டார். 

கடந்த 2005.12.25 ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை எதிர்வரும் 26ம் திகதி கிழக்கு மாகாண சபை அர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. 
Read More
avathani Media Network

குவைத்திலிருந்து 80 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 80 பேர் இன்று நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
குறித்த பெண்கள் குவைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்ததாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்த காலம் நிறைவடைந்த பணிப்பெண்கள், உரிய ஊதியம் வழங்கப்படாத பெண்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
பணிப்பெணிகளிடம் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்திலும் குவைத்திலிருந்து 70 இலங்கை பணிப்பெண்கள் தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
Read More