Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 16, 2015

Unknown

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட வருகை தரும் வெளியூர் மக்களுக்கு விஷேடமாக நேரம் ஒதுக்கீடு



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட வருகை தரும் வெளியூர் மக்களுக்கு விஷேடமாக நேரம் ஒதுக்கீடு - வெள்ளி தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை -10 .மணி தொடக்கம் 4.மணி வரையும் நாளை 17 வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் 24 வெள்ளிக்கிழமையும் -பிற்பகல் 2.மணி தொடக்கம் மாலை 6.மணி வரை

இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் மட்டக்களப்பு–கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக நேற்று 15-04-2015 புதன்கிழமை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை பார்வையிட அதிகளவான வெளியூர் பொது மக்கள் அங்கு வருகை தருவதால் அதற்கான நேரம் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read More
Unknown

எதிர்வரும் 24ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட கூட்டம்


ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட கூட்டமொன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது.


கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.



கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



அலரி மாளிகையில் இக்கூட்டத்தினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் 100 நாள் திட்ட அமுலாக்கம் மற்றும் எதிர்கால பொதுத் தேர்தல் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப் படவுள்ளது.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

புதிய தேர்தல் முறைமையும் திறந்த வெளி கேள்விகளும் - ஜுனைட் நளீமி

தேர்தல் முறைமை தொடர்பான திறந்த கலந்தோரையாடல் ஒன்றினை முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமாகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் அவர்கள் தனது பூர்வீக நகரான ஏறாவூரில் ஏற்பாடு செய்திருந்தார். 

பொதுவான அழைப்பிதழ் என்றாலும் கலந்து கொள்ள வேண்டும் ஆர்வ மேலீட்டால் சென்றிருந்தேன். சமகாலத்தில் சிறுபான்மை சமூகம் எதிர் கொள்ளும் அரசியல் ரீதியான முக்கிய சவாலான புதிய தேர்தல் முறைமை பற்றிய தலைப்பு கருத்தாடலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
Read More
Unknown

"நல்ல. தீய முடிவுகளின் அடையாளங்கள்" என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16 April 2015 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு. 
Read More