
19 ஆவது திருத்தத்தை ஒத்திவைக்க வேண்டும்
அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை ஒத்தி வைக்குமாறும் அதனை 20 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பி. யுமான டபிள்யூ ஜே.எம். செனவிரத்ன தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தொன்பதாவது திருத்த விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

