Featured Home (TOP)

Recent Comments

Tuesday, May 5, 2015

Unknown

பப்புவா நியூகினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை : இலங்கைக்கு ஆபத்தில்லை

பப்புவா நியூகினியாவில் 7.4 ரிச்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இலங்கைக்கு எவ்வித அபத்துமில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து 300 கிலோ மீற்றர் தூரத்தில் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 
பப்புவா நியூகினியாவின் ராபவுல் டவுனிற்கு தெற்கே, சுமார் 154 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கடியில் 50 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக  பப்புவா நியூக்கினியாவை சுற்றிலும் கடல் அலைகள் 0.3 மீற்றர் முதல் 1 மீற்றர் உயரத்திற்கு எழும்ப வாய்ப்புள்ளதாகவும் 300 கிலோ மீற்றருக்குள் சுனாமி ஏற்படும் என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. 

இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்ட போதிலும் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Read More
Unknown

உடனடியாக பொதுத் தேர்தல்

நாட்டில் உட­ன­டி­யாக பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும். தேர்தல் முறைமை மாற்றத்தைக் காரணம் காட்டி பாரா­ளு­மன்றத் தேர்­தலை தள்ளி வைக்­கப்­போ­வ­தில்லை. தேர்தல் முறைமை மாற்றம் தேவை­யென்­பதை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால், அதனை அவ­சர அவ­ச­ர­மாக ஏற்­ப­டுத்த முடி­யாது என்று ஐ.தே.கட்சி பொதுச்செய­லா­ளரும் அமைச்ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.
20ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டாலும் எதிர்­வரும் பொதுத்­தேர்தல் பழைய முறை­யி­லேயே நடை­பெறும். சிறு­பான்மையினக்­கட்­சிகள் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் இவ்­வாரம் சந்­தித்து தேர்தல் முறை மாற்றம் தொடர்­பாக பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
Read More
Unknown

ஸ்ரீ.ல.மு.கா.தலைவர் ஹக்கீமுக்கு எதிராக ஒலுவிலில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

( சௌத்துல் உம்மத் )

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராகக் கடமையாற்றிய பொறியியலாளர் ஐ.எல்.ஹைதர் அலியின் இடமாற்றத்தை உடன் நிறுத்துமாறு கோரியும், ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரசின் தலைவராக சகோதரர் றவூப் ஹக்கீமின் வருகையின் பின்னர் ஒலுவில் கிராமத்தின் பின்னடைவுகளைக் கண்டித்தும்  நேற்று முன்தினம் ஒலுவில் மஸ்ஜிதுல் அன்சாரி ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக பொதுமக்களும், ஸ்ரீ.ல.மு.கா ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






Read More

Monday, May 4, 2015

Unknown

‘எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எனும் தலைப்பில் வாராந்தஇஸ்லாமிய வகுப்பு இன்று கட்டாரில்


(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி)

ம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’   எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு இன்று 04 MAY 2015 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை கட்டார் பனார் இஸ்லாமியகலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும்வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.




Read More