Featured Home (TOP)

Recent Comments

Monday, July 6, 2015

Unknown

வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை ஆரம்பம்.! பேரணிகளுக்குத் தடை

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. 

இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
  
அதன்படி, ஊர்வலங்கள் கட்அவுட்கள் போஸ்டர்களை காட்சிப்படுத்துதல் தேர்தல் பிரசார அலுவலகங்களை திறந்து வைத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்பாளர்கள் தத்தமது வேட்பு மனுக்களை மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தாம் போட்டியிடும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதற்கமைய 13 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ந்து வரும் ஒன்றரை மணித்தியாலங்களும் கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் ஆட்சேபனை தெரிவிக்கும் காலப்பகுதியாக பிரகடனப்படுத்தும். அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு தெரிவத்தாட்சி அலுவலகரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பற்றிய தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

இதேவேளை இதுவரையில் 14 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாகவும் எம். மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையிலும் கட்டுப்பணம் செலுத்த முடியும். கடந்த வெள்ளிக்கிழமை வரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 03 சுயேச்சைகளும் கம்பஹா மாவட்டத்தில் 02 சுயேச்சைகளும் களுத்துறை மாவட்டத்தில் 02 சுயேச்சைகளும் கொழும்பு, நுவரெலியா, திகாமடுல்ல, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு சுயேச்சைகளும் கட்டுப்பணம் செலுத்தி யிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More
Unknown

தீர்மானம் எடுக்கும் போது உறுதியாக இருப்பேன்: ஜனாதிபதி ​

நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு தீரமானங்கள் எடுக்கும் போது உறுதியாக நின்று செயற்படுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நான் நாட்டின் ஜனாதிபதியாகுவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். எனினும் என்னை எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு விதை விதைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும். மேலும் ஊழல் தவிர பண்டாரநாயக்கவினர் நாட்டிற்கு செய்யாத சேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்தியாவில் காந்தி குடும்பத்திற்கும் பண்டாரநாயக்க குடும்பத்திற்கும் இடையில் பாரிய உறவு முறை காணப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தேசபிதா டி.எஸ் சேனாநாயக்க பாரியளவிலான சேவைகளை செய்திருக்கின்றார். இதன்பிரகாரம் நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த சேவை அளப்பரியது.
பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு டி.எஸ் சேனாநாயக்கவை போன்று எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க, பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோரும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்தனர். ஆகவே பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் காந்தி குடும்பத்திற்கும் பண்டாரநாயக்க குடும்பத்திற்கும் பாரியளவில் தொடர்பு காணப்படுகின்றது.
1956 ஆம் ஆண்டு அரசாங்கம் உருவாக்கிய பண்டாநாயக்க நாட்டை குறுகிய காலங்களுக்கே ஆட்சிப்புரிந்தார். இருந்த போதிலும் இன்று வரை நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
எனவே இலங்கை ஆட்சிசெய்த தலைவர்கள் கட்சியின் நகர்வுகள் குறித்தும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். ஜே.ஆர் ஜெயவர்தன இந்திய இலங்கை ஒப்பந்ததிற்கு தனது அமைச்சரவையில் மாத்திரமின்றி முழு நாடுமே எதிராக செயற்பட்ட போது போரட்டக்காரர்களின் தடையையும் தாண்டி தான் நினைத்ததை செய்து முடித்தார்.

அது போலவே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு தீர்மானங்களை எடுத்துக்கொண்டார்.
அதேபோன்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சியின் போது தீர்மாங்கள் எடுக்கும் போது அனைவரினதும் ஆலோசனைகளுக்கும் செவிமடுத்து தீர்மானங்களை எடுப்பார்.
நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு தீரமானங்கள் எடுக்கும் உறுதியாக நின்று செயற்படுவேன்.
இந்நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக நான் களமிறங்குவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எனினும் சந்திரிக்கா அம்மையார் எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபோது நான் வேட்பாளராக போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ ஆதரவு நல்கும் என்று கூட நான் நினைக்கவில்லை.
எனினும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு நான் ஜனாதிபதி பீடமேறினேன். பொதுவேட்பாளராக நான் களமிறங்குவதற்கு பிரதான விதை விதைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவாகும் என்றார்.
virakesary.lk
Read More
Unknown

டைட்டன்ஸ்" விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு.

(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்)

டைட்டன்ஸ்" விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று 05-07-2015 கழகத்தின் தலைவர் முஹம்மட் றிபாய், அவர்களின் இல்லத்தில்  நடைபெற்றது

இந்நிகழ்வில் ஊரில் பல முக்கியஸ்தர்களும், மார்க்க போதகர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.




Read More
Unknown

சொறி நாய்களின் கட்சி

(எம்.எல்.எம்அன்ஸார்)

இலாபகரமான முதலீடு
அரசியல் கட்சி ஆரம்பித்து தொழில் செய்வது !
எனதூர் சொறி நாய்கள் கூட
உழைக்கத் தயாராகிவிட்டன புதிய கட்சிகளை
பெருநாள் கடைகள் போலத் திறந்து !
*
நாய்களுக்குப் பேரானந்தம் நக்குவது !
சமூகத்தின் மார்க்கத்தின் இனத்தின் பெயர்களை
செங்கற்கள் போல அடுக்கி
ஊருக்கொரு கட்சி
கட்டி முடித்துக்கொள்ளுமிச் சொறி நாய்கள் !
பேராசை
தேசியத் தலைவர்
“அமைச்சர்”
“முதலமைச்சர்” கொம்பு
முளைத்து முட்டித்திரிய  வேண்டுமென்ற !
மூன்று நான்கு அமைச்சு, வரிசையாய் வாகனங்கள்
அரசாங்க நக்குத் தீன்கள், குளிரறைச் சுகங்களாகியவற்றை
துப்பனி வழிய நக்குவதற்கென்றே
நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டலைகின்றன !
*
பெரும் பாதுகாப்பு
இடுப்பிலொரு கட்சியை இடுக்கிக் கொள்ளுவது !
வேசையோடு நடுத்தெருவில் படுத்தெழும்பினாலும்
தேசியத் தலைவராயிருந்தால் பத்வா வை
பொன்னாடை போல  அணிவித்து  
புகழ்ந்து  வாழ்த்துவார்கள்
சமூகத்தை யானை வெற்றிலைக் கட்சிகளிடம்
பெரும் விலைக்கு ஏலமிட்டு
மொத்தத் தொகையையும் முழுசாகச் சுருட்டலாம்.
வாய் பேசவே மாட்டார்கள்
தேசியப் பட்டியலுக்கு காசு கட்டிக் காத்திருப்போர் !
கள்ளன், காவாலி, பொண்பிடியன்களை
அதியுயர் பீடத்திற்கு நியமித்தாலும்
ஆதரவுக் குரல் தர
முண்டியடித்து வருவார்கள் முதுகு சொறிவோர் !
*
கழுதை பன்றிகளை காசுகொடுத்து வாங்கி
சில நாத்த நாய்கள்
பதவி சேர்த்து கொண்டாடிக் குதிக்கின்றன !
முதலமைச்சர்
சுயாட்சி
தென்கிழக்கு
கரையோர மாவட்டம் 
தனித்தரப்பு இவ்வவசியங்களை
மாங்காய் தேங்காய் மண்ணாங்கட்டிபோல் பரப்பி வைத்து
வீதியோர வியாபாரம் செய்வதற்கு
பொருத்தமானது முஸ்லிம் கட்சிதான் !
*
மாகாணத்தின் பெயரில் சுயேட்சை கட்சி தொடங்கினால்
கூட்டு வியாபாரம் புரிந்து கொள்ளையாகச் சம்பாதிக்க இலகு !
படித்த எருமை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள
எம்பி ஆசை !
அரசியல் கட்சி ஆரம்பிப்பது உண்மையில்
ஆதாயமான பங்குச் சந்தை வியாபாரம் !
*
உம்மா உலமா பெயரில் இன்றைக்கு !
முஸ்லிம் அரசியல் கட்சிகள் நாளை முளைக்கும்
கள்ளப் பொண்டாட்டிகளின் பெயர்களில் !
23-08-2004



Read More