Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 9, 2015

avathani Media Network

வேக கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வேக கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
மேலும், நாட்டில் தற்போது பிரதான பாதைகளில் வேக கட்டுப்பாட்டு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

'பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா' நூல் வெளியீடு


மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச் சருமான தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான "பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா " எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

நூலின் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான தமிழ்த்திரு. சிவலிங்கம் சதீஸ்குமார் வழங்குவதுடன் நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.அஸ்ரப் செய்யவுள்ளார்  இவ்விழாவில் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் சிறப்புரை ஆற்றுவதுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம்.தெளபீக் நன்றியுரையாற்றவுள்ளார்.

(ஜுனைட்.எம்.பஹ்த் )
Read More
avathani Media Network

“சமகால அரசியல் எண்ணக்கருக்கள்” நூல் வெளியீட்டு விழா

( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )

பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் முதுநிலை விரிவுரையாளர் எம்.எம்.இஃஜாஸ் மற்றும் துறைசாறார் விரிவுரையாளர்கள் எழுதிய “சமகால அரசியல் எண்ணக்கருக்கள்” என்ற தலைப்பில் எழுதிய நூல் வெளியீட்டு விழா இன்று 08-07-2015 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை மட்டபத்தில் நடைபெற்றது.

மேலும் இவ்விழா டாக்டர் ஏ.எம்.ஜாபீர் அவர்களில் தலைமைதத்துவத்தில் இடம்பெற்றதோடு இதில் பிரதம அதிதியாக கௌரவ அல்ஹாஜ் எம்.ரீ.ஹசனலி அவர்களும், கௌரவ அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பைசால் காசிம் அவர்களும், விசேட அதிதியாக புவியியல் துறை பேராதனை பல்கலைகழக பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா அவர்களும் கலந்துகொண்டு இந்நூல் வெளியீட்டு கௌரவிப்பு கதாநாயகனாக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராதனை பல்கலைகழக அல்ஹாஜ் என்.பீ.எம். சைபுடீன் அவர்களை பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.

மேலும் இவ்விழாவுக்கு பல கல்விமான்களும் வருகைதந்ததோடு அவர்களுக்கு கௌரவ அதிதிகளால் நூல்களும் கையளிக்கப்பட்டு இவ்விழா சிறப்பாய் நிறைவுபெற்றது.    




  
Read More
avathani Media Network

NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மஞ்சந்தொடுவாயில் இடம்பெற்றது


(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நேற்று மஞ்சந்தொடுவாய், ஹிழ்ளுரியா ஜும்ஆபள்ளி சந்தியில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் MIM.ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பெண்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), அதன் தலைமைத்துவசபை உறுப்பினர் MM.பாளுலுல் ஹக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதன்போது உரிய முறையில் தெரிவு செய்யப்படாத பிரதிநிதித்துவங்கள், கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதங்கள் தொடர்பில் விஷேட காணொளி காட்சிகளும் பொதுமக்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டன.

























Read More