Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 11, 2015

avathani Media Network

தேர்தல் முடிவடையும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம்!- ஆணையாளர் தேசப்பிரிய

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சில வேட்பாளர்களுக்கு விசாரணைகளுக்காக அழைப்பு விடுத்திருந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேர்தல்களுக்கு முன்னதாக விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

எனினும், தேர்தல் முடிவடையும் வரையில் வேட்பாளர்களை அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில வேட்பாளர்கள் தம்மிடம் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்ததனை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உறுதி செய்யவில்லை.
Read More
avathani Media Network

றகர் வீரர் கொலை; தடுமாறும் இலங்கை செஞ்சிலுவை சங்கம்!

பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன், கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான வாகனம் தொடர்பில் அச்சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆரோக்கிய பணிகளுக்கு போக்குவரத்து வசதிக்கு உதவி வழங்கும்படி கேட்டு சிரிலிய பவுண்டேசனின் செயலாளரான குமாரி திஸாநாயக்க எமது தலைவருக்கு ஓர் உத்தியோகப்பூர்வ வேண்டுகோளை கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 22 ஜூன் 2011 அன்று இந்த வேண்டுகோள் தொடர்பில் மேல் நடவடிக்கை பற்றி ஆலோசனை வழங்கும்படி அப்போது சமூக நலன்புரி அமைச்சர் பீலிக்ஸ் பெரோராவுக்கு எமது தலைவர் உத்தியோபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பினார்.
27 ஜூன் 2011 அன்று முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தனது சம்மதத்தை ஆதரவையும் தெரிவித்தார். மேலும் அவர், சிரிலிய சவியா பவுண்டேசனுக்கு உதவி வழங்குவது இலங்கையில் மிகவும் பாதிப்படைந்த நிலையிலுள்ள மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அரும் வாய்பை;பை எனவும் கூறியிருந்தார்.
இதன்படி. WP-KA 0642 இலக்க டிபெண்டர் வாகனம் சிரியல சவியா பவுண்டேசனின் தலைவியான முதல் பெண் சிராந்தி ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
20 ஜனவரி 2015 அன்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் போக்குவரத்து முகாமையாளர் இந்த வாகனத்தை சிரிலிய பவுண்டேசனிடமிருந்து மீளப்பெற்றுக்கொண்டார்.
ஓகஸ்ட் 2011 இலிருந்து இந்த வாகனம் இவ்வருடம் மீளப்பெறும் வரையிலும் எவ்வாறு பராமரிக்கப்பட்டது, என்னென்ன செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட என்பது பற்றி இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறியாது என்று இத்தால் தெரிவிக்கின்றோம்.
இந்த வாகனத்தின் நிறம் மாற்றம் பற்றி தகவல் வழங்கும்படி குற்றச்செயல் விசாரணை பிரிவு எமது தலைவரிடமும் பணிப்பாளர் நாயகத்திடமும் அறிக்கை தருமாறு கேட்டதற்கு இணங்க தெரிந்த தகவல்கள் அனைத்தையும் வழங்கியது. இந்த வாகனம் இப்போதுகுற்றச்செயல் விசாரணைப்பிரிவிடம் உள்ளது.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் இவ்விடயம் குறித்து துல்லியமான தகவல்களை தொடர்ந்து வழங்கும்.
Read More

Monday, August 10, 2015

avathani Media Network

கல்முனை நவீன நகராக அபிவிருத்தி சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை - பிரதமர் ரணில்

கல்­மு­னையை மிகவும் நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். நாட்­டி­லுள்ள முக்­கிய நக­ரங்­களில் ஒன்­றாக கல்­மு­னையை மாற்­றுவோம். அத்­தோடு, சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு தனி­யா­ன­தொரு பிர­தேச சபையை உரு­வாக்­குவோம்.

இவ்­வாறு நேற்று மாலை 05.30 மணி­ய­ளவில் கல்­முனை சந்­தாங்­கேணி மைதா­னத்தில் நடை­பெற்ற தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் பிர­தம மந்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கல்­முனை மாந­கர சபையின் மேயர் நிஸாம் காரி­யப்பர் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்­திற்கு பெருந்­தி­ர­ளான பொது மக்கள் கலந்து கொண்­டார்கள். இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
நாங்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒற்­று­மைப்­பட்டு வாக்­க­ளித்தன் மூல­மாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெறச் செய்தோம். இன்று நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முத ரீதி­யாக மேற் கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளன. எல்­லோரும் இலங்­கையர் என்ற ரீதியில் சாதி, மத பேதங்கள் இன்றி ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தற்­கு­ரிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது. மத உரி­மைகள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளன. 




ஆயினும், இன்று மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ இன­வாதம் பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். இன­வாதம் பேசி அர­சியல் செய்ய வேண்­டிய தேவை எமக்­கில்லை. மஹிந்­தவை துரத்தி அடிப்­ப­தோடு, இன­வா­தத்­தையும் முற்­றாக ஒழிக்க வேண்டும்.

இதற்­கா­கவே ஐ.தே.கவின் யானைச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­கின்றோம். நிம்­ம­தி­யுடன் சகல இனங்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தற்கு ஐ.தே.கவுக்கு வாக்­க­ளிக்க வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒற்­று­மைப்­பட்­ட­தனைப் போன்று ஹெல­உ­று­மய, மலை­யக தமிழ் மக்கள், முஸ்லிம்  மக்கள் எல்­லோரும் எங்­க­ளுடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களின் கட்­சி­களும் எம்­முடன் உள்­ளன. இந்த ஒற­று­மை­யுடன் ஐ.தே.கவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்.

இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்கு வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வரி­சையில் நின்று கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவர்கள் ஐ.தே.கவின் ஆட்சி வேண்­டு­மென்று கேட்­கின்­றார்கள். 10 இலட்சம் வேலை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். 

கல்­முனை  நக­ரையும், அதனை சூழ உள்ள பிர­தே­சத்தை நவீன முறையில் அபி­வி­ருத்தி செய்து கல்­மு­னையை பாரிய அபி­வி­ருத்­தியை கொண்ட நக­ர­மாக மாற்­றுவோம். அத்­தோடு, ரவூப் ஹக்­கீமும், கரு­ஜ­ய­சூ­ரி­யவும் பேசி எடுத்­துள்ள முடி­வுக்கு அமைய  சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்ட கால கோரிக்­கை­யா­க­வுள்ள சாய்ந்­த­ம­ரு­திற்­கான பிர­தேச சபையை ஏற்­ப­டுத்­துவோம். 

மகா­வலி ஏ மற்றும் பி வல­யங்­களில் 16 ஆயிரம் ஹெக்­டயர் ஏக்­கரில் வேளாண்­மையை செய்­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்ளோம். 

இவ்­வாறு இனங்­க­ளுக்கு இடையே ஒற்றுமை, நல்லாட்சி, தொழில் வாய்ப்பு, வெளிநாட்டு முதலீடு, இனவாதத்தை ஒழித்தல் போன்றவைகளை மேற்கொண்டு புதியதொரு இலங்கையை உருவாக்குவோம். ஏன்றார். 

இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்குளும் கலந்து கொண்டார்கள்.
Read More
avathani Media Network

சின்னப்பள்ளி சதுக்கத்தில் இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

NFGG ஊடகப்பிரிவு,


சின்னப்பள்ளி சதுக்கத்தில் நேற்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் MSM.இப்ராஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டகக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் பழுலுல் ஹக், சட்ட முதுமாணி அஸ்ஹர், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி),  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.
NFGGயின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், பிராந்திய செயற்குழு உறுப்பினகளான முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான AGM.ஹாறூன்,அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி),  சகோ, முஹம்மத் ஹாபிழ், SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA உள்ளிட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்ட இப்பிரச்சாரக் கூட்டத்தில் விஷேட காணொளிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.



























Read More