Featured Home (TOP)

Recent Comments

Monday, December 14, 2015

avathani Media Network

10000 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும்: பிரதமர் அறிவிப்பு

தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பணவு எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து கொள்ளப்படும்.
மேலும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது
இதேவேளை தனியார் ஊழியர்களுக்கு 2500  ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் வழங்கப்படும்  எனவும் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு விடுமுறை தடை : அதிரடி உத்தரவு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை எவ்வித காரணமும் கொண்டு விடு முறை எடுக்க முடியாது என இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமால் சிறிவர்தன  தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்ளை மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நாளை நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கும், அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் தங்களால் இயலுமானளவு போக்குவரத்துச் சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாகவும்  ரமால் சிறிவர்தன   குறிப்பிட்டார்.  
Read More
avathani Media Network

சவுதியிலிருந்து 44 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்று காலை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்குசொந்தமான UL-266 என்ற விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 44 பேரும், குவைட் விமானச்சேவைக்கு சொந்தமான ku-361 என்ற விமானத்தில் கட்டாருக்கு சென்ற சிலரும் வந்தடைந்தனர்.
அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் பொலனறுவை இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.
Read More
avathani Media Network

கருக்கலைப்புக்கு உடந்தை: மருத்துவருடன் பொலிசாரும் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவம் ஒன்று தொடர்பாக மருத்துவருக்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெற்கு அதிவேகப் பாதையின் பாணந்துறையை அண்மித்து அமைந்திருக்கும் கெலனிகம பொலிஸ் சோதனைச் சாவடியில் பணியாற்றும் சப்இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தமக்கு பழக்கமான திருமணமாகாத 24 வயது யுவதியொருவர் கர்ப்பமுற்றிருந்த நிலையில், அறிமுகமான மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு உடந்தையாக செயற்பட்டுள்ளனர்.
இதுகுறித்த தகவல் வெளியான நிலையில் இரண்டு பொலிசாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More