13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையவேண்டும் இதற்கு வாழ்த்துக்களைக் கூறுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ்வாறு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உதயன்
