கொழும்பு -
அரச துறையில் துப்புரவு தொழிலாளியாக இணைவதற்கு க.பொ.த (சா/த) கல்வித் தகைமை கோரப்படுகின்றது. ஆனால் நாட்டை நிர்வகிக்கும் பாராளுமன்றத்தில் உள்ள 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்கள். இது எந்த விதத்தில் நியாயமாகும் என கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சி, எத்தனோல் ஹெரோயின் வியாபாரிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பாராளுமன்றம் அனுப்பும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டுமென்றும் அக்கட்சி தெரிவித்தது.
இது தொடர்பாக ஐ.தே.கட்சி மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மேலும் தகவல் தருகையில், இன்று எமது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 உறுப்பினர்கள் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தி பெறாதவர்கள்.
அதேபோன்று 142 உறுப்பினர்களில் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்றவர்களும் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லாதவர்களும் அடங்குகின்றனர்.
Source - Virakesary
