Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 18, 2015

Unknown

ஆயுத களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதை ஒப்புக்கொண்டார் கோத்தா

கொழும்பு - 
தனி­யா­ருக்குச் சொந்­த­மான சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள எவன்காட் மிதக்கும் ஆயு­தக்­க­ளஞ்­சி­ய­சாலை, ரக்ன லங்கா ஆயு­தக்­க­ளஞ்­சி­ய­சாலை ஆகி­ய­வற்­றிற்கு தானே அனு­ம­தி­ய­ளித்­த­தாக முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஒப்­புதல் தெரி­வித்­துள்ளார்.
கடந்த வெள்­ளி­யன்று மிரி­கா­னையில் உள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் வீட்­டுக்குச் சென்று விசா­ரணை நடத்­திய குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவின் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அவர் அளித்த பூர­ண­ மற்ற வாக்­கு­மூ­லத்­தி­லேயே இதனை அவர் தெரி­வித்­துள்ளார்.

எனினும் அது தொடர்­பி­லான குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவின் மேல­திக கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆவ­ணங்­களை சரி­பார்க்க கால­அ­வ­காசம் வேண்­டு­மென கோரி­ய­நி­லையில் அவ­ருக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்ட அந்த அவ­காசம் முடிந்­ததும் அவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவார் எனவும் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அஜித் ரோகண தெரி­வித்தார். அந்த கால­அ­வ­காசம் நிறை­வுற்­றதும் அவர் பதி­ல­ளிக்கத் தவ­று­வா­ரானால் தற்­போ­தைக்­குள்ள தக­வல்­களை வைத்து அவ­ருக்கு எதி­ரான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யேற்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
கடந்த ஜன­வரி மாதம் காலி­து­றை­மு­கத்தில் நங்­கூரம் இடப்­பட்­டி­ருந்த மஹ­நு­வர என்ற கப்­பலில் நடத்­தி­வ­ரப்­பட்ட எவன்காட் என்ற தனியார் பாது­காப்பு நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான மிதக்கும் ஆயு­தக்­க­ளஞ்­சி­ய­சாலை காலி பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமை­வாக சோதனை செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அத்­துடன் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் இரண்டாம் தொகு­தியில் நடத்­தி­வ­ரப்­பட்ட மற்­றொரு தனியார் பாது­காப்பு நிறு­வ­ன­மான ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இருந்து அரச படை­க­ளுக்கு சொந்­த­மான, யுத்த காலங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் சுய­மாக இயங்கும் ஆயு­தங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன இந்­ந­ட­வ­டிக்கை கொழும்பு தெற்­கிற்­குப்­பொ­றுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான் டயஸ் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து இவ்­விரு சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் உயர் அதி­கா­ரிகள் கொண்ட விசேட குழு­விற்கு பாரப்­ப­டுத்­தி­ய­தாக குறிப்­பிட்டு பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் அஜித் ரோகண அந்­நி­று­வ­னத்­தா­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தி­யுடன் அக்­க­ளஞ்­சி­ய­சா­லைகள் நடத்­தி­வ­ரப்­பட்­டமை உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக குறிப்­பிட்டார்.
இத­னை­ய­டுத்து பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரி­களை இது தொடர்பில் விசா­ரணை செய்­த­தா­கவும் அதன்­போது பாது­காப்பு அமைச்சு அப்­போ­தைய செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ­ஷவின் அனு­ம­திக்கு அமை­யவே நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக அவர்கள் குறிப்­பிட்­ட­தா­கவும் அத­னைத்­தொ­டர்ந்து கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு விசா­ரித்­த­தா­கவும் அஜித் ரோகண சுட்­டிக்­காட்­டினார். இதன்­போது குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு பூர­ண­மற்ற வாக்­கு­மூலம் ஒன்­றினை அளித்­துள்ள கோத்­தபாய ராஜ­பக் ஷ அதில் தான் அவ்­விரு தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்­க­ளுக்கும் அனு­ம­தி­ய­ளித்­ததை ஒப்­புக்­கொண்­டுள்ளார் என அஜித் ரோகண மேலும் குறிப்­பிட்டார்.
எவ்­வா­றா­யினும் கோத்தப­ாயவின் விவ­கா­ரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவு விசேட சலுகைகளை அவருக்கு வழங்குகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 11 ஆவது அத்தியாயத்திற்கும் 110ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் பொலிஸாரின் உரிமை தொடர்பிலான விடயத்திற்கும் உட்பட்டு சாதாரண விசா ரணை நடைமுறையில் கோத்தபாய ராஜ பக் ஷவின் விவகாரத்திலும் பின்பற்றப்படு வதாக சுட்டிக்காட்டினார்.
Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :